முகப்பு | தொடக்கம் |
பாண்டியன் நெடுஞ்செழியன் |
18 |
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் |
|
பரந்துபட்ட வியல் ஞாலம் |
|
தாளின் தந்து, தம் புகழ் நிறீஇ, |
|
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்! |
|
5 |
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய |
பெருமைத்தாக, நின் ஆயுள்தானே! |
|
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப் |
|
பூக் கதூஉம் இன வாளை, |
|
நுண் ஆரல், பரு வரால், |
|
10 |
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி; |
வான் உட்கும் வடி நீள் மதில்; |
|
மல்லல் மூதூர் வய வேந்தே! |
|
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும், |
|
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி, |
|
15 |
ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த |
நல் இசை நிறுத்தல் வேண்டினும், மற்று அதன் |
|
தகுதி கேள், இனி, மிகுதியாள! |
|
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் |
|
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே; |
|
20 |
உண்டி முதற்றே உணவின் பிண்டம்; |
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே; |
|
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு |
|
உடம்பும் உயிரும் படைத்திசினோரே; |
|
வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகன் |
|
25 |
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும் |
இறைவன் தாட்கு உதவாதே; அதனால், |
|
அடு போர்ச் செழிய! இகழாது வல்லே |
|
நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத் |
|
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே; |
|
30 |
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே. |
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.
| |
பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது.
|
19 |
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகன் கிடக்கை, |
|
தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து, |
|
மன் உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும், |
|
நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய! |
|
5 |
'இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய |
பெருங் கல் அடாரும் போன்ம்' என விரும்பி, |
|
முயங்கினேன் அல்லனோ, யானே மயங்கிக் |
|
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல, |
|
அம்பு சென்று இறுத்த அரும் புண் யானைத் |
|
10 |
தூம்புடைத் தடக் கை வாயொடு துமிந்து, |
நாஞ்சில் ஒப்ப, நிலம் மிசைப் புரள, |
|
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர் |
|
எந்தையொடு கிடந்தோர், எம் புன் தலைப் புதல்வர்; |
|
'இன்ன விறலும் உளகொல், நமக்கு?' என, |
|
15 |
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணி, |
கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை, |
|
எழுவர் நல் வலம் கடந்தோய்! நின் |
|
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே? |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|