முகப்பு | தொடக்கம் |
பாரி |
105 |
சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி! |
|
தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை |
|
வண்டு படு புது மலர்த் தண் சிதர் கலாவப் |
|
பெய்யினும், பெய்யாது ஆயினும், அருவி |
|
5 |
கொள் உழு வியன் புலத்துழை கால் ஆக, |
மால்புடை நெடு வரைக் கோடுதோறு இழிதரும் |
|
நீரினும் இனிய சாயல் |
|
பாரி வேள்பால் பாடினை செலினே. |
|
திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
| |
வேள் பாரியைக் கபிலர் பாடியது.
|
106 |
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப் |
|
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை |
|
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு, |
|
மடவர் மெல்லியர் செல்லினும், |
|
5 |
கடவன், பாரி கை வண்மையே. |
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
107 |
'பாரி பாரி' என்று பல ஏத்தி, |
|
ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்; |
|
பாரி ஒருவனும் அல்லன்; |
|
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
108 |
குறத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி |
|
ஆரம் ஆதலின், அம் புகை அயலது |
|
சாரல் வேங்கைப் பூஞ் சினைத் தவழும் |
|
பறம்பு பாடினரதுவே; அறம் பூண்டு, |
|
5 |
பாரியும், பரிசிலர் இரப்பின், |
'வாரேன்' என்னான், அவர் வரையன்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
109 |
அளிதோதானே, பாரியது பறம்பே! |
|
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும், |
|
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே: |
|
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே; |
|
5 |
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே; |
மூன்றே, கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே; |
|
நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து, |
|
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே. |
|
வான் கண் அற்று, அவன் மலையே; வானத்து, |
|
10 |
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு, |
மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும், |
|
புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும், |
|
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்; |
|
யான் அறிகுவென், அது கொள்ளும் ஆறே: |
|
15 |
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, |
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர, |
|
ஆடினிர் பாடினிர் செலினே, |
|
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே. |
|
திணை நொச்சி; துறை மகள் மறுத்தல்.
| |
அவனை அவர் பாடியது.
|
110 |
கடந்து அடு தானை மூவிரும் கூடி |
|
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே; |
|
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு; |
|
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்; |
|
5 |
யாமும் பாரியும் உளமே; |
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரை அவர் பாடியது.
|
111 |
அளிதோ தானே, பேர் இருங் குன்றே! |
|
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே; |
|
நீலத்து, இணை மலர் புரையும் உண்கண் |
|
கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
112 |
அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின், |
|
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்; |
|
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின், |
|
வென்று எறி முரசின் வேந்தர் எம் |
|
5 |
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! |
திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
| |
பாரி மகளிர் பாடியது.
|
113 |
மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும், |
|
அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும் |
|
பெட்டாங்கு ஈயும் பெரு வளம் பழுனி, |
|
நட்டனை மன்னோ, முன்னே; இனியே, |
|
5 |
பாரி மாய்ந்தென, கலங்கிக் கையற்று, |
நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச் |
|
சேறும் வாழியோ பெரும் பெயர்ப் பறம்பே! |
|
கோல் திரள் முன் கைக் குறுந் தொடி மகளிர் |
|
நாறு இருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான் பறம்பு விடுத்த கபிலர் பாடியது.
|
114 |
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்; சிறு வரை |
|
சென்று நின்றோர்க்கும் தோன்றும், மன்ற |
|
களிறு மென்று இட்ட கவளம் போல, |
|
நறவுப் பிழிந்து இட்ட கோதுடைச் சிதறல் |
|
5 |
வார் அசும்பு ஒழுகும் முன்றில், |
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் மகளிரைக் கொண்டுபோம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது.
|
115 |
ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார் |
|
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார், |
|
வாக்க உக்க தேக் கள் தேறல் |
|
கல் அலைத்து ஒழுகும்மன்னே! பல் வேல், |
|
5 |
அண்ணல் யானை, வேந்தர்க்கு |
இன்னான் ஆகிய இனியோன் குன்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
116 |
தீம் நீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக் |
|
கூம்பு அவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல், |
|
ஏந்து எழில் மழைக் கண், இன் நகை, மகளிர் |
|
புல் மூசு கவலைய முள் மிடை வேலி, |
|
5 |
பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண், |
பீரை நாறிய சுரை இவர் மருங்கின், |
|
ஈத்து இலைக் குப்பை ஏறி, உமணர் |
|
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ; |
|
நோகோ யானே; தேய்கமா, காலை! |
|
10 |
பயில் பூஞ் சோலை மயில் எழுந்து ஆலவும், |
பயில் இருஞ் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும், |
|
கலையும் கொள்ளாவாக, பலவும் |
|
காலம் அன்றியும் மரம் பயம் பகரும் |
|
யாணர் அறாஅ வியல் மலை அற்றே |
|
15 |
அண்ணல் நெடு வரை ஏறி, தந்தை |
பெரிய நறவின், கூர் வேல் பாரியது |
|
அருமை அறியார், போர் எதிர்ந்து வந்த |
|
வலம் படு தானை வேந்தர் |
|
பொலம் படைக் கலி மா எண்ணுவோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
117 |
மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும், |
|
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும், |
|
வயலகம் நிறைய, புதல் பூ மலர, |
|
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க் கண் |
|
5 |
ஆமா நெடு நிரை நன் புல் ஆர, |
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி, |
|
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே |
|
பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப் |
|
பாசிலை முல்லை முகைக்கும் |
|
10 |
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
118 |
அறையும் பொறையும் மணந்த தலைய, |
|
எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத் |
|
தெள் நீர்ச் சிறு குளம் கீள்வது மாதோ |
|
கூர் வேல் குவைஇய மொய்ம்பின் |
|
5 |
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே! |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
119 |
கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலை, |
|
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப, |
|
செம் புற்று ஈயலின் இன் அளைப் புளித்து; |
|
மென் தினை யாணர்த்து; நந்தும் கொல்லோ |
|
5 |
நிழல் இல் நீள் இடைத் தனி மரம் போல, |
பணை கெழு வேந்தரை இறந்தும் |
|
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
120 |
வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல் |
|
கார்ப் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து, |
|
பூழி மயங்கப் பல உழுது, வித்தி, |
|
பல்லி ஆடிய பல் கிளைச் செவ்விக் |
|
5 |
களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி, |
மென் மயில் புனிற்றுப் பெடை கடுப்ப நீடி, |
|
கருந் தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து, |
|
கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து, |
|
வாலிதின் விளைந்த புது வரகு அரிய, |
|
10 |
தினை கொய்ய, கவ்வை கறுப்ப, அவரைக் |
கொழுங் கொடி விளர்க் காய் கோட் பதம் ஆக, |
|
நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல் |
|
புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து, |
|
நறு நெய்க் கடலை விசைப்ப, சோறு அட்டு, |
|
15 |
பெருந்தோள் தாலம் பூசல் மேவர, |
வருந்தா யாணர்த்து; நந்தும்கொல்லோ |
|
இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை |
|
ஆடு கழை நரலும் சேட் சிமை, புலவர் |
|
பாடி ஆனாப் பண்பின் பகைவர் |
|
20 |
ஓடு கழல் கம்பலை கண்ட |
செரு வெஞ் சேஎய் பெரு விறல் நாடே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
158 |
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும், |
|
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை, |
|
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் |
|
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக் |
|
5 |
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்; |
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த, |
|
மாரி ஈகை, மறப் போர் மலையனும்; |
|
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல், |
|
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்; |
|
10 |
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை, |
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை, |
|
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி |
|
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று |
|
உள்ளி வருநர் உலைவு நனி தீர, |
|
15 |
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை, |
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு |
|
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப் |
|
பாடி வருநரும் பிறரும் கூடி |
|
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண் |
|
20 |
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக் |
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி, |
|
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று, |
|
முள் புற முது கனி பெற்ற கடுவன் |
|
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும், |
|
25 |
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ! |
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண! |
|
இசை மேந்தோன்றிய வண்மையொடு, |
|
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே! |
|
திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
| |
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.
|
176 |
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர் |
|
கேழல் உழுத இருஞ் சேறு கிளைப்பின், |
|
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையைத் |
|
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம், |
|
5 |
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின், |
பெரு மாவிலங்கைத் தலைவன், சீறியாழ் |
|
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை |
|
உடையை வாழி, எற் புணர்ந்த பாலே! |
|
பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண் நீர் |
|
10 |
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல, |
காணாது கழிந்த வைகல், காணா |
|
வழி நாட்கு இரங்கும், என் நெஞ்சம் அவன் |
|
கழி மென் சாயல் காண்தொறும் நினைந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஓய்மான் நல்லியக் கோடனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|
200 |
பனி வரை நிவந்த பாசிலைப் பலவின் |
|
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன் |
|
செம் முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி, |
|
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து, |
|
5 |
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப! |
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல், |
|
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை, |
|
விளங்கு மணிக் கொடும் பூண், விச்சிக்கோவே! |
|
இவரே, பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை |
|
10 |
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும், |
'கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!' எனக் கொடுத்த |
|
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்; |
|
யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்; நீயே, |
|
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்; |
|
15 |
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர் |
அடங்கா மன்னரை அடக்கும் |
|
மடங்கா விளையுள் நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
பாரி மகளிரை விச்சிக் கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
|
201 |
'இவர் யார்?' என்குவைஆயின், இவரே, |
|
ஊருடன் இரவலர்க்கு அருளி, தேருடன் |
|
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை, |
|
படு மணி யானை, பறம்பின் கோமான் |
|
5 |
நெடு மாப் பாரி மகளிர்; யானே |
தந்தை தோழன்; இவர் என் மகளிர்; |
|
அந்தணன், புலவன், கொண்டு வந்தனனே. |
|
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி, |
|
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, |
|
10 |
உவரா ஈகை, துவரை ஆண்டு, |
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த |
|
வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல்! |
|
தார் அணி யானைச் சேட்டு இருங் கோவே! |
|
ஆண் கடன் உடைமையின், பாண் கடன் ஆற்றிய |
|
15 |
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்! |
யான் தர, இவரைக் கொண்மதி! வான் கவித்து |
|
இருங் கடல் உடுத்த இவ் வையகத்து, அருந் திறல் |
|
பொன் படு மால் வரைக் கிழவ! வென் வேல் |
|
உடலுநர் உட்கும் தானை, |
|
20 |
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே! |
திணையும் துறையும் அவை.
| |
பாரி மகளிரை இருங்கோவேளுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
|
202 |
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட, |
|
கட்சி காணாக் கடமா நல் ஏறு |
|
கடறு மணி கிளர, சிதறு பொன் மிளிர, |
|
கடிய கதழும் நெடு வரைப் படப்பை |
|
5 |
வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி, |
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர், |
|
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய |
|
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி: |
|
நுந்தை தாயம் நிறைவுற எய்திய |
|
10 |
ஒலியல் கண்ணிப் புலிகடி மாஅல்! |
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன் |
|
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை |
|
இகழ்ந்ததன் பயனே; இயல் தேர் அண்ணல்! |
|
எவ்வி தொல் குடிப் படீஇயர், மற்று, 'இவர் |
|
15 |
கை வண் பாரி மகளிர்' என்ற என் |
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும! |
|
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து, |
|
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை |
|
மாத் தகட்டு ஒள் வீ தாய துறுகல் |
|
20 |
இரும் புலி வரிப் புறம் கடுக்கும் |
பெருங் கல் வைப்பின் நாடு கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாக, கபிலர் பாடியது.
|
236 |
கலை உணக் கிழிந்த, முழவு மருள், பெரும் பழம் |
|
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் |
|
மலை கெழு நாட! மா வண் பாரி! |
|
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற் |
|
5 |
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே |
பெருந் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது, |
|
ஒருங்கு வரல் விடாது, 'ஒழிக' எனக் கூறி, |
|
இனையைஆதலின் நினக்கு மற்று யான் |
|
மேயினேன் அன்மையானே; ஆயினும், |
|
10 |
இம்மை போலக் காட்டி, உம்மை |
இடை இல் காட்சி நின்னோடு |
|
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே! |
|
திணை அது; துறை கையறுநிலை.
| |
வேள் பாரி துஞ்சியவழி, அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து, வடக்கிருந்த கபிலர் பாடியது.
|
337 |
ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்; |
|
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும், |
|
வாள் வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர், |
|
வரல்தோறு அகம் மலர, |
|
5 |
ஈதல் ஆனா விலங்கு தொடித் தடக் கைப் |
பாரி பறம்பின் பனிச் சுனை போல, |
|
காண்டற்கு அரியள் ஆகி, மாண்ட |
|
பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய |
|
துகில் விரி கடுப்ப நுடங்கி, தண்ணென |
|
10 |
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய |
கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு, |
|
மனைச் செறிந்தனளே, வாணுதல்; இனியே, |
|
காய் நெல் கவளம் தீற்றி, காவுதொறும் |
|
15 |
கடுங்கண் யானை காப்பனர் அன்றி, |
வருதல் ஆனார் வேந்தர்; தன்னையர் |
|
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் |
|
குருதி பற்றிய வெருவரு தலையர்; |
|
மற்று இவர் மறனும் இற்றால்; தெற்றென |
|
20 |
யார் ஆகுவர்கொல் தாமே நேரிழை |
உருத்த பல சுணங்கு அணிந்த |
|
மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
கபிலர் பாடியது.
|