முகப்பு | தொடக்கம் |
மலையமான் திருமுடிக்காரி |
121 |
ஒரு திசை ஒருவனை உள்ளி, நால் திசைப் |
|
பலரும் வருவர், பரிசில் மாக்கள்; |
|
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும் |
|
ஈதல் எளிதே; மா வண் தோன்றல்! |
|
5 |
அது நற்கு அறிந்தனைஆயின், |
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே! |
|
திணை அது; துறை பொருண் மொழிக் காஞ்சி.
| |
மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடியது.
|
122 |
கடல் கொளப்படாஅது, உடலுநர் ஊக்கார், |
|
கழல் புனை திருந்து அடிக் காரி! நின் நாடே; |
|
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே; |
|
வீயாத் திருவின் விறல் கெழு தானை |
|
5 |
மூவருள் ஒருவன், 'துப்பு ஆகியர்' என, |
ஏத்தினர் தரூஉம் கூழே, நும் குடி |
|
வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே; |
|
வடமீன் புரையும் கற்பின், மட மொழி, |
|
அரிவை தோள் அளவு அல்லதை, |
|
10 |
நினது என இலை நீ பெருமிதத்தையே. |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
123 |
நாள் கள் உண்டு, நாள் மகிழ் மகிழின், |
|
யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே; |
|
தொலையா நல் இசை விளங்கு மலையன் |
|
மகிழாது ஈத்த இழை அணி நெடுந் தேர் |
|
5 |
பயன் கெழு முள்ளூர் மீமிசைப் |
பட்ட மாரி உறையினும் பலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
124 |
நாள் அன்று போகி, புள் இடை தட்ப, |
|
பதன் அன்று புக்கு, திறன் அன்று மொழியினும், |
|
வறிது பெயர்குநர்அல்லர் நெறி கொளப் |
|
பாடு ஆன்று, இரங்கும் அருவிப் |
|
5 |
பீடு கெழு மலையன் பாடியோரே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
126 |
ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு, |
|
பாணர் சென்னி பொலியத் தைஇ, |
|
வாடாத் தாமரை சூட்டிய விழுச் சீர் |
|
ஓடாப் பூட்கை உரவோன் மருக! |
|
5 |
வல்லேம் அல்லேம் ஆயினும், வல்லே |
நின்வயின் கிளக்குவமாயின், கங்குல் |
|
துயில் மடிந்தன்ன தூங்கு இருள் இறும்பின், |
|
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருந! |
|
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய, |
|
10 |
நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம் |
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன், |
|
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி, |
|
பரந்து இசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு |
|
சினம் மிகு தானை வானவன் குட கடல், |
|
15 |
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ் வழி, |
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை, |
|
இன்மை துரப்ப, இசை தர வந்து, நின் |
|
வண்மையின் தொடுத்தனம், யாமே முள் எயிற்று |
|
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப, |
|
20 |
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய, |
அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும் |
|
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும் |
|
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே! |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
| |
மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|