முகப்பு | தொடக்கம் |
வேள் எவ்வி |
24 |
நெல் அரியும் இருந் தொழுவர் |
|
செஞ் ஞாயிற்று வெயில் முனையின், |
|
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து; |
|
திண் திமில் வன் பரதவர் |
|
5 |
வெப்பு உடைய மட்டு உண்டு, |
தண் குரவைச் சீர் தூங்குந்து; |
|
தூவல் கலித்த தேம் பாய் புன்னை |
|
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் |
|
எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து; |
|
10 |
வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல் |
முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர் |
|
இரும் பனையின் குரும்பை நீரும், |
|
பூங் கரும்பின் தீம் சாறும், |
|
ஓங்கு மணல் குவவுத் தாழைத் |
|
15 |
தீம் நீரொடு உடன் விராஅய், |
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்; |
|
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய |
|
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி |
|
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக் |
|
20 |
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும், |
பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர், |
|
குப்பை நெல்லின், முத்தூறு தந்த |
|
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! |
|
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது |
|
25 |
படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே |
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு |
|
நின்று மூத்த யாக்கை அன்ன, நின் |
|
ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த |
|
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த, |
|
30 |
இரவல் மாக்கள் ஈகை நுவல, |
ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய |
|
தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து, |
|
ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது |
|
வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப தொல் இசை, |
|
35 |
மலர் தலை உலகத்துத் தோன்றி, |
பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
|
202 |
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட, |
|
கட்சி காணாக் கடமா நல் ஏறு |
|
கடறு மணி கிளர, சிதறு பொன் மிளிர, |
|
கடிய கதழும் நெடு வரைப் படப்பை |
|
5 |
வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி, |
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர், |
|
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய |
|
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி: |
|
நுந்தை தாயம் நிறைவுற எய்திய |
|
10 |
ஒலியல் கண்ணிப் புலிகடி மாஅல்! |
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன் |
|
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை |
|
இகழ்ந்ததன் பயனே; இயல் தேர் அண்ணல்! |
|
எவ்வி தொல் குடிப் படீஇயர், மற்று, 'இவர் |
|
15 |
கை வண் பாரி மகளிர்' என்ற என் |
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும! |
|
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து, |
|
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை |
|
மாத் தகட்டு ஒள் வீ தாய துறுகல் |
|
20 |
இரும் புலி வரிப் புறம் கடுக்கும் |
பெருங் கல் வைப்பின் நாடு கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாக, கபிலர் பாடியது.
|
233 |
பொய்யாகியரோ! பொய்யாகியரோ! |
|
பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச் |
|
சீர் கெழு நோன் தாள் அகுதைகண் தோன்றிய |
|
பொன் புனை திகிரியின் பொய்யாகியரோ! |
|
5 |
'இரும் பாண் ஒக்கல் தலைவன், பெரும் பூண், |
போர் அடு தானை, எவ்வி மார்பின் |
|
எஃகுறு விழுப்புண் பல' என |
|
வைகுறு விடியல், இயம்பிய குரலே. |
|
திணயும் துறையும் அவை.
| |
வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.
|
234 |
நோகோ யானே? தேய்கமா காலை! |
|
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி, |
|
தன் அமர் காதலி புல் மேல் வைத்த |
|
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்கொல் |
|
5 |
உலகு புகத் திறந்த வாயில் |
பலரோடு உண்டல் மரீஇயோனே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|