முகப்பு | ![]() |
கரந்தை |
259 |
ஏறுடைப் பெரு நிரை பெயர்தர, பெயராது, |
|
இலை புதை பெருங் காட்டுத் தலை கரந்து இருந்த |
|
வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய்; |
|
செல்லல், செல்லல்; சிறக்க, நின் உள்ளம், |
|
5 |
முருகு மெய்ப் பட்ட புலைத்தி போலத் |
தாவுபு தெறிக்கும் ஆன்மேல் |
|
புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே! |
|
திணை கரந்தை; துறை செரு மலைதல்; பிள்ளைப் பெயர்ச்சியும் ஆம்.
| |
.......................கோடை பாடிய பெரும்பூதனார் பாடியது.
|
260 |
வளரத் தொடினும், வௌவுபு திரிந்து, |
|
விளரி உறுதரும் தீம் தொடை நினையா, |
|
தளரும் நெஞ்சம் தலைஇ, மனையோள் |
|
உளரும் கூந்தல் நோக்கி, களர |
|
5 |
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி, |
பசி படு மருங்குலை, கசிபு, கைதொழாஅ, |
|
'காணலென்கொல்?' என வினவினை வரூஉம் |
|
பாண! கேண்மதி, யாணரது நிலையே: |
|
புரவுத் தொடுத்து உண்குவைஆயினும், இரவு எழுந்து |
|
10 |
எவ்வம் கொள்குவைஆயினும், இரண்டும், |
கையுள் போலும்; கடிது அண்மையவே |
|
முன் ஊர்ப் பூசலின் தோன்றி, தன் ஊர் |
|
நெடு நிரை தழீஇய மீளியாளர் |
|
விடு கணை நீத்தம் துடி புணை ஆக, |
|
15 |
வென்றி தந்து, கொன்று கோள் விடுத்து, |
வையகம் புலம்ப வளைஇய பாம்பின் |
|
வை எயிற்று உய்ந்த மதியின், மறவர் |
|
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல் ஆன் |
|
நிரையொடு வந்த உரையன் ஆகி, |
|
20 |
உரி களை அரவம் மான, தானே |
அரிது செல் உலகில் சென்றனன்; உடம்பே, |
|
கானச் சிற்றியாற்று அருங் கரைக் கால் உற்று, |
|
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல, |
|
அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே; |
|
25 |
உயர் இசை வெறுப்பத் தோன்றிய பெயரே, |
மடம்சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி, |
|
இடம் பிறர் கொள்ளாச் சிறு வழி, |
|
படம் செய் பந்தர்க் கல் மிசையதுவே. |
|
திணை அது; துறை கையறு நிலை; பாண்பாட்டும் ஆம்.
| |
......................வடமோதங் கிழார் பாடியது.
|
261 |
அந்தோ! எந்தை அடையாப் பேர் இல்! |
|
வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு |
|
வரையாப் பெருஞ் சோற்று முரி வாய் முற்றம், |
|
வெற்று யாற்று அம்பியின் எற்று? அற்று ஆகக் |
|
5 |
கண்டனென், மன்ற; சோர்க, என் கண்ணே; |
வையம் காவலர் வளம் கெழு திரு நகர், |
|
மையல் யானை அயாவுயிர்த்தன்ன |
|
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை |
|
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப் |
|
10 |
பயந்தனை, மன்னால், முன்னே! இனியே |
பல் ஆ தழீஇய கல்லா வல் வில் |
|
உழைக் குரல் கூகை அழைப்ப ஆட்டி, |
|
நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை |
|
விரகு அறியாளர் மரபின் சூட்ட, |
|
15 |
நிரை இவண் தந்து, நடுகல் ஆகிய |
வென் வேல் விடலை இன்மையின் புலம்பி, |
|
கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய |
|
கழி கல மகடூஉப் போலப் |
|
புல்லென்றனையால், பல் அணி இழந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
.....................ஆவூர் மூலங் கிழார் பாடியது.
|
263 |
பெருங் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண் |
|
இரும் பறை இரவல! சேறிஆயின், |
|
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது, |
|
வண்டு மேம்படூஉம், இவ் வறநிலை ஆறே |
|
5 |
பல் ஆத் திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து, |
கல்லா இளையர் நீங்க நீங்கான், |
|
வில் உமிழ் கடுங் கணை மூழ்க, |
|
கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே. |
|
திணை கரந்தை; துறை கையறுநிலை.
| |
......................................................................
|
264 |
பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி, |
|
மரல் வகுந்து தொடுத்த செம் பூங் கண்ணியொடு, |
|
அணி மயில் பீலி சூட்டி, பெயர் பொறித்து, |
|
இனி நட்டனரே, கல்லும்; கன்றொடு |
|
5 |
கறவை தந்து பகைவர் ஓட்டிய |
நெடுந்தகை கழிந்தமை அறியாது, |
|
இன்றும் வரும்கொல், பாணரது கடும்பே? |
|
திணையும் துறையும் அவை.
| |
....................உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.
|
265 |
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை, |
|
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப் |
|
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து, |
|
பல் ஆன் கோவலர் படலை சூட்ட, |
|
5 |
கல் ஆயினையே கடு மான் தோன்றல்! |
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப் |
|
பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க் |
|
கடும் பகட்டு யானை வேந்தர் |
|
ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
......................சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந் தும்பியார் பாடியது.
|
270 |
பல் மீன் இமைக்கும் மாக விசும்பின் |
|
இரங்கு முரசின், இனம்சால் யானை, |
|
நிலம் தவ உருட்டிய நேமியோரும் |
|
சமங்கண் கூடித் தாம் வேட்பவ்வே |
|
5 |
நறு விரை துறந்த நாறா நரைத் தலைச் |
சிறுவர் தாயே! பேரில் பெண்டே! |
|
நோகோ யானே; நோக்குமதி நீயே; |
|
மறப் படை நுவலும் அரிக் குரல் தண்ணுமை |
|
இன் இசை கேட்ட துன் அரு மறவர் |
|
10 |
வென்றி தரு வேட்கையர், மன்றம் கொண்மார், |
பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை, |
|
விழு நவி பாய்ந்த மரத்தின், |
|
வாள் மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே. |
|
திணை கரந்தை; துறை கையறு நிலை. |
|
(கண்டார் தாய்க்குச் சொல்லியது)
| |
கழாத்தலையார் பாடியது.
|
286 |
வெள்ளை வெள் யாட்டுச் செச்சை போலத் |
|
தன் ஓரன்ன இளையர் இருப்ப, |
|
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக் |
|
கால் கழி கட்டிலில் கிடப்பி, |
|
5 |
தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே! |
திணை கரந்தை; துறை வேத்தியல்.
| |
ஒளவையார் பாடியது.
|
287 |
துடி எறியும் புலைய! |
|
எறி கோல் கொள்ளும் இழிசின! |
|
காலம் மாரியின் அம்பு தைப்பினும், |
|
வயல் கெண்டையின் வேல் பிறழினும், |
|
5 |
பொலம் புனை ஓடை அண்ணல் யானை |
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும், |
|
ஓடல் செல்லாப் பீடுடையாளர் |
|
நெடு நீர்ப் பொய்கைப் பிறழிய வாளை |
|
நெல்லுடை நெடு நகர்க் கூட்டுமுதல் புரளும், |
|
10 |
தண்ணடை பெறுதல் யாவது? படினே, |
மாசு இல் மகளிர் மன்றல் நன்றும், |
|
உயர் நிலை உலகத்து, நுகர்ப; அதனால் |
|
வம்ப வேந்தன் தானை |
|
இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே! |
|
திணை கரந்தை; துறை நீண்மொழி.
| |
சாத்தந்தையார் பாடியது.
|
290 |
இவற்கு ஈத்து உண்மதி, கள்ளே; சினப் போர் |
|
இனக் களிற்று யானை, இயல் தேர்க் குருசில்! |
|
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை, |
|
எடுத்து எறி ஞாட்பின் இமையான், தச்சன் |
|
5 |
அடுத்து எறி குறட்டின், நின்று மாய்ந்தனனே; |
மறப் புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும், |
|
உறைப்புழி ஓலை போல, |
|
மறைக்குவன் பெரும! நிற் குறித்து வரு வேலே. |
|
திணை கரந்தை; துறை குடிநிலை உரைத்தல்.
| |
ஒளவையார் பாடியது.
|
291 |
சிறாஅஅர்! துடியர்! பாடு வல் மகாஅஅர்! |
|
தூ வெள் அறுவை மாயோற் குறுகி, |
|
இரும் புள் பூசல் ஓம்புமின்; யானும், |
|
விளரிக் கொட்பின், வெள் நரி கடிகுவென்; |
|
5 |
என் போல் பெரு விதுப்புறுக, வேந்தே |
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன் தலை |
|
மணி மருள் மாலை சூட்டி, அவன் தலை |
|
ஒரு காழ் மாலை தான் மலைந்தனனே! |
|
திணை அது; துறை வேத்தியல்.
| |
நெடுங்கழுத்துப் பரணர் பாடியது.
|
298 |
எமக்கே கலங்கல் தருமே; தானே | |
தேறல் உண்ணும் மன்னே; நன்றும் |
|
இன்னான் மன்ற வேந்தே, இனியே |
|
நேரார் ஆர் எயில் முற்றி, |
|
5 |
வாய் மடித்து உரறி, 'நீ முந்து' என்னானே. |
திணை கரந்தை; துறை நெடுமொழி.
| |
ஆலியார் பாடியது.
|