முகப்பு | ![]() |
தும்பை |
62 |
வரு தார் தாங்கி, அமர் மிகல் யாவது? |
|
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு, |
|
குருதி செங் கைக் கூந்தல் தீட்டி, |
|
நிறம் கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர் |
|
5 |
எடுத்து எறி அனந்தல் பறைச் சீர் தூங்க, |
பருந்து அருந்துற்ற தானையொடு, செரு முனிந்து, |
|
அறத்தின் மண்டிய மறப் போர் வேந்தர் |
|
தாம் மாய்ந்தனரே; குடை துளங்கினவே; |
|
உரைசால் சிறப்பின் முரைசு ஒழிந்தனவே; |
|
10 |
பல் நூறு அடுக்கிய வேறு படு பைஞ் ஞிலம் |
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை, |
|
களம் கொளற்கு உரியோர் இன்றி, தெறுவர, |
|
உடன் வீழ்ந்தன்றால், அமரே; பெண்டிரும் |
|
பாசடகு மிசையார், பனி நீர் மூழ்கார், |
|
15 |
மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனரே; |
வாடாப் பூவின், இமையா நாட்டத்து, |
|
நாற்ற உணவினோரும் ஆற்ற |
|
அரும் பெறல் உலகம் நிறைய |
|
விருந்து பெற்றனரால்; பொலிக, நும் புகழே! |
|
திணை தும்பை; துறை தொகை நிலை.
| |
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற் பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளியும், போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் கழாத்தலையார் பாடியது.
|
63 |
எனைப் பல் யானையும் அம்பொடு துளங்கி, |
|
விளைக்கும் வினை இன்றிப் படை ஒழிந்தனவே; |
|
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம் |
|
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப் பட்டனவே; |
|
5 |
தேர் தர வந்த சான்றோர் எல்லாம், |
தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே; |
|
விசித்து வினை மாண்ட மயிர்க் கண் முரசம், |
|
பொறுக்குநர் இன்மையின், இருந்து விளிந்தனவே; |
|
சாந்து அமை மார்பில் நெடு வேல் பாய்ந்தென, |
|
10 |
வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே, |
என் ஆவதுகொல்தானே கழனி |
|
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் |
|
பாசவல் முக்கி, தண் புனல் பாயும், |
|
யாணர் அறாஅ வைப்பின் |
|
15 |
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே? |
திணையும் துறையும் அவை.
| |
அவரை அக் களத்தில் பரணர் பாடியது.
|
80 |
இன் கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண், |
|
மைந்துடை மல்லன் மத வலி முருக்கி, |
|
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால் |
|
வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே |
|
5 |
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப் |
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம |
|
பசித்துப் பணை முயலும் யானை போல, |
|
இரு தலை ஒசிய எற்றி, |
|
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே. |
|
திணை தும்பை; துறை எருமை மறம்.
| |
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.
|
87 |
களம் புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து, |
|
எம்முளும் உளன் ஒரு பொருநன்; வைகல் |
|
எண் தேர் செய்யும் தச்சன் |
|
திங்கள் வலித்த கால் அன்னோனே. |
|
திணை தும்பை; துறை தானை மறம்.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|
88 |
யாவிர் ஆயினும், 'கூழை தார் கொண்டு |
|
யாம் பொருதும்' என்றல் ஓம்புமின் ஓங்கு திறல் |
|
ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன், |
|
கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின் |
|
5 |
விழவு மேம்பட்ட நல் போர் |
முழவுத் தோள் என்னையைக் காணா ஊங்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
89 |
'இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல், |
|
மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி! |
|
பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?' என, |
|
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே! |
|
5 |
எறி கோல் அஞ்சா அரவின் அன்ன |
சிறு வல் மள்ளரும் உளரே; அதாஅன்று, |
|
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை |
|
வளி பொரு தெண் கண் கேட்பின், |
|
'அது போர்' என்னும் என்னையும் உளனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
90 |
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் |
|
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல், |
|
மறப் புலி உடலின், மான் கணம் உளவோ? |
|
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய |
|
5 |
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? |
அச்சொடு தாக்கிப் பார் உற்று இங்கிய |
|
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய, |
|
வரி மணல் ஞெமர, கல் பக, நடக்கும் |
|
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ? |
|
10 |
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக் கை |
வழு இல் வன் கை, மழவர் பெரும! |
|
இரு நிலம் மண் கொண்டு சிலைக்கும் |
|
பொருநரும் உளரோ, நீ களம் புகினே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
273 |
மா வாராதே; மா வாராதே; |
|
எல்லார் மாவும் வந்தன; எம் இல், |
|
புல் உளைக் குடுமிப் புதல்வற் தந்த |
|
செல்வன் ஊரும் மா வாராதே |
|
5 |
இரு பேர் யாற்ற ஒரு பெருங் கூடல் |
விலங்கிடு பெரு மரம் போல, |
|
உலந்தன்றுகொல், அவன் மலைந்த மாவே? |
|
திணை தும்பை; துறை குதிரை மறம்.
| |
எருமை வெளியனார் பாடியது.
|
274 |
நீலக் கச்சை, பூ ஆர் ஆடை, |
|
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் |
|
மேல் வருங் களிற்றொடு வேல் துரந்து, இனியே, |
|
தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர் |
|
5 |
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தர, |
கையின் வாங்கி, தழீஇ, |
|
மொய்ம்பின் ஊக்கி, மெய்க் கொண்டனனே! |
|
திணை அது; துறை எருமை மறம்.
| |
உலோச்சனார் பாடியது.
|
275 |
கோட்டங் கண்ணியும், கொடுந்திரை ஆடையும், |
|
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும், |
|
ஒத்தன்று மாதோ, இவற்கே; செற்றிய |
|
திணி நிலை அலறக் கூவை போழ்ந்து, தன் |
|
5 |
வடி மாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி, |
'ஓம்புமின், ஓம்புமின், இவண்!' என, ஓம்பாது, |
|
தொடர் கொள் யானையின் குடர் கால் தட்ப, |
|
கன்று அமர் கறவை மான, |
|
முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஒரூஉத்தனார் பாடியது.
|
276 |
நறு விரை துறந்த நரை வெண் கூந்தல், |
|
இரங் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை, |
|
செம் முது பெண்டின் காதலம் சிறாஅன், |
|
மடப் பால் ஆய்மகள் வள் உகிர்த் தெறித்த |
|
5 |
குடப் பால் சில் உறை போல, |
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே. |
|
திணை அது; துறை தானை நிலை.
| |
மதுரைப் பூதன் இளநாகனார் பாடியது.
|
277 |
'மீன் உண் கொக்கின் தூவி அன்ன |
|
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் |
|
களிறு எறிந்து பட்டனன்' என்னும் உவகை |
|
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர் |
|
5 |
நோன் கழை துயல்வரும் வெதிரத்து |
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே. |
|
திணை அது; துறை உவகைக் கலுழ்ச்சி.
| |
பூங்கண் உத்திரையார் பாடியது.
|
278 |
'நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள், |
|
முளரி மருங்கின், முதியோள் சிறுவன் |
|
படை அழிந்து, மாறினன்' என்று பலர் கூற, |
|
'மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்ட என் |
|
5 |
முலை அறுத்திடுவென், யான்' எனச் சினைஇ, |
கொண்ட வாளொடு படு பிணம் பெயரா, |
|
செங்களம் துழவுவோள், சிதைந்து வேறு ஆகிய |
|
படு மகன் கிடக்கை காணூஉ, |
|
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது.
|
283 |
ஒண் செங் குரலித் தண் கயம் கலங்கி, |
|
வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉப் |
|
பௌவ உறை அளவா, |
|
..................................................................... வி மயக்கி, |
|
5 |
மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும் |
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும், |
|
வலம் புரி கோசர் அவைக் களத்தானும், |
|
மன்றுள் என்பது கெட... |
|
...........................................£னே பாங்கற்கு |
|
10 |
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க, |
உயிர் புறப்படாஅ அளவைத் தெறுவர, |
|
தெற்றிப் பாவை திணி மணல் அயரும் |
|
மென் தோள் மகளிர் நன்று புரப்ப, |
|
.....................................................ண்ட பாசிலைக் |
|
15 |
கவிழ் பூந் தும்பை நுதல் அசைத்தோனே. |
திணை தும்பை; துறை பாண் பாட்டு.
| |
அடை நெடுங் கல்வியார் பாடியது.
|
284 |
'வருகதில் வல்லே; வருகதில் வல்' என, |
|
வேந்து விடு விழுத் தூது ஆங்கு ஆங்கு இசைப்ப, |
|
நூலரி மாலை சூடி, காலின், |
|
தமியன் வந்த மூதிலாளன் |
|
5 |
அருஞ் சமம் தாங்கி, முன் நின்று எறிந்த |
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறையாகத் |
|
திரிந்த வாய் வாள் திருத்தா, |
|
தனக்கு இரிந்தானைப் பெயர் புறம் நகுமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஓரம்போகியார் பாடியது.
|
288 |
மண் கொள வரிந்த வைந் நுதி மருப்பின் |
|
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து, |
|
வென்றதன் பச்சை சீவாது போர்த்த |
|
திண் பிணி முரசம் இடைப் புலத்து இரங்க, |
|
5 |
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர, |
நெடு வேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து, |
|
அருகுகை ...................................... மன்ற |
|
குருதியொடு துயல்வரு மார்பின் |
|
முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே. |
|
திணை தும்பை; துறை மூதில் முல்லை.
| |
கழாத்தலையார் பாடியது.
|
294 |
'வெண்குடை மதியம் மேல் நிலாத் திகழ்தர, |
|
கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறை, |
|
குமரிப் படை தழீஇய கூற்று வினை ஆடவர் |
|
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து, |
|
5 |
இறையும் பெயரும் தோற்றி, நுமருள் |
நாள் முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு' என, |
|
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப, யாவரும் |
|
அரவு உமிழ் மணியின் குறுகார் |
|
நிரை தார் மார்பின் நின் கேள்வனை, பிறரே. |
|
திணை தும்பை; துறை தானைமறம்.
| |
பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
295 |
கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண், |
|
வெந்து வாய் மடித்து வேல் தலைப் பெயரி, |
|
தோடு உகைத்து எழுதரூஉ, துரந்து எறி ஞாட்பின், |
|
வரு படை போழ்ந்து வாய்ப் பட விலங்கி, |
|
5 |
இடைப் படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய, |
சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி, |
|
வாடு முலை ஊறிச் சுரந்தன |
|
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே. |
|
திணை அது; துறை உவகைக் கலுழ்ச்சி.
| |
ஒளவையார் பாடியது.
|
300 |
'தோல் தா; தோல் தா' என்றி; தோலொடு |
|
துறுகல் மறையினும் உய்குவை போலாய்; |
|
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி, |
|
அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன், |
|
5 |
பேர் ஊர் அட்ட கள்ளிற்கு |
ஓர் இல் கோயில் தேருமால் நின்னே. |
|
திணை தும்பை; துறை தானை மறம்.
| |
அரிசில் கிழார் பாடியது.
|
304 |
கொடுங் குழை மகளிர் கோதை சூட்டி, |
|
நடுங்கு பனிக் களைஇயர் நார் அரி பருகி, |
|
வளி தொழில் ஒழிக்கும் வண் பரிப் புரவி |
|
பண்ணற்கு விரைதி, நீயே; 'நெருநை, |
|
5 |
எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஒராங்கு |
நாளைச் செய்குவென் அமர்' எனக் கூறி, |
|
புன் வயிறு அருத்தலும் செல்லான், வன் மான் |
|
கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு, |
|
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன் |
|
10 |
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று |
'இரண்டு ஆகாது அவன் கூறியது' எனவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அரிசில் கிழார் பாடியது.
|
307 |
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? |
|
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்; |
|
வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்; |
|
வேனல் வரி அணில் வாலத்து அன்ன, |
|
5 |
கான ஊகின் கழன்று உகு முது வீ |
அரியல் வான் குழல் சுரியல் தங்க, |
|
நீரும் புல்லும் ஈயாது, உமணர் |
|
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த |
|
வாழா வான் பகடு ஏய்ப்ப, தெறுவர் |
|
10 |
பேர் உயிர் கொள்ளும் மாதோ; அது கண்டு, |
வெஞ் சின யானை வேந்தனும், 'இக் களத்து, |
|
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல்' என, |
|
பண் கொளற்கு அருமை நோக்கி, |
|
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே. |
|
திணை தும்பை; துறை களிற்றுடனிலை.
| |
........................................................................
|
309 |
இரும்பு முகம் சிதைய நூறி, ஒன்னார் |
|
இருஞ் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே; |
|
நல் அரா உறையும் புற்றம் போலவும், |
|
கொல் ஏறு திரிதரு மன்றம் போலவும், |
|
5 |
மாற்று அருந் துப்பின் மாற்றோர், 'பாசறை |
உளன்' என வெரூஉம் ஓர் ஒளி |
|
வலன் உயர் நெடு வேல் என்னைகண்ணதுவே. |
|
திணை தும்பை; துறை நூழிலாட்டு.
| |
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் பாடியது.
|
310 |
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின், |
|
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு, |
|
உயவொடு வருந்தும் மன்னே! இனியே |
|
புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான், |
|
5 |
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே, |
உன்னிலன் என்னும், புண் ஒன்று அம்பு |
|
மான் உளை அன்ன குடுமித் |
|
தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பொன்முடியார் பாடியது.
|
311 |
களர்ப் படு கூவல் தோண்டி, நாளும், |
|
புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை. |
|
தாது எரு மறுகின் மாசுண இருந்து, |
|
பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு |
|
5 |
ஒருவரும் இல்லை மாதோ, செருவத்து; |
சிறப்புடைச் செங் கண் புகைய, ஓர் |
|
தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே. |
|
திணை அது; துறை பாண்பாட்டு.
| |
ஒளவையார் பாடியது.
|