முகப்பு | ![]() |
வாகை |
17 |
தென் குமரி, வட பெருங்கல், |
|
குண குட கடலா எல்லை, |
|
குன்று, மலை, காடு, நாடு, |
|
ஒன்று பட்டு வழிமொழிய, |
|
5 |
கொடிது கடிந்து, கோல் திருத்தி, |
படுவது உண்டு, பகல் ஆற்றி, |
|
இனிது உருண்ட சுடர் நேமி |
|
முழுது ஆண்டோர் வழி காவல! |
|
குலை இறைஞ்சிய கோள் தாழை |
|
10 |
அகல் வயல், மலை வேலி, |
நிலவு மணல் வியன் கானல், |
|
தெண் கழிமிசைத் தீப் பூவின், |
|
தண் தொண்டியோர் அடு பொருந! |
|
மாப் பயம்பின் பொறை போற்றாது, |
|
15 |
நீடு குழி அகப்பட்ட |
பீடு உடைய எறுழ் முன்பின், |
|
கோடு முற்றிய கொல் களிறு |
|
நிலை கலங்கக் குழி கொன்று, |
|
கிளை புகலத் தலைக்கூடியாங்கு |
|
20 |
நீ பட்ட அரு முன்பின் |
பெருந் தளர்ச்சி, பலர் உவப்ப, |
|
பிறிது சென்று, மலர் தாயத்துப் |
|
பலர் நாப்பண் மீக்கூறலின், |
|
'உண்டாகிய உயர் மண்ணும், |
|
25 |
சென்று பட்ட விழுக் கலனும், |
பெறல் கூடும், இவன் நெஞ்சு உறப் பெறின்' எனவும், |
|
'ஏந்து கொடி இறைப்புரிசை, |
|
வீங்கு சிறை, வியல்அருப்பம், |
|
இழந்து வைகுதும், இனி நாம் இவன் |
|
30 |
உடன்று நோக்கினன், பெரிது' எனவும், |
வேற்று அரசு பணி தொடங்கு நின் |
|
ஆற்றலொடு புகழ் ஏத்தி, |
|
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய |
|
மழை என மருளும் பல் தோல், மலை எனத் |
|
35 |
தேன் இறை கொள்ளும் இரும் பல் யானை, |
உடலுநர் உட்க வீங்கி, கடல் என |
|
வான் நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது |
|
கடு ஒடுங்கு எயிற்ற அரவுத் தலை பனிப்ப, |
|
இடி என முழங்கும் முரசின், |
|
40 |
வரையா ஈகைக் குடவர் கோவே! |
திணை வாகை; துறை அரச வாகை; இயன்மொழியும் ஆம்.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதின் போய்க் கட்டில் எய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.
|
19 |
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகன் கிடக்கை, |
|
தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து, |
|
மன் உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும், |
|
நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய! |
|
5 |
'இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய |
பெருங் கல் அடாரும் போன்ம்' என விரும்பி, |
|
முயங்கினேன் அல்லனோ, யானே மயங்கிக் |
|
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல, |
|
அம்பு சென்று இறுத்த அரும் புண் யானைத் |
|
10 |
தூம்புடைத் தடக் கை வாயொடு துமிந்து, |
நாஞ்சில் ஒப்ப, நிலம் மிசைப் புரள, |
|
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர் |
|
எந்தையொடு கிடந்தோர், எம் புன் தலைப் புதல்வர்; |
|
'இன்ன விறலும் உளகொல், நமக்கு?' என, |
|
15 |
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணி, |
கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை, |
|
எழுவர் நல் வலம் கடந்தோய்! நின் |
|
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே? |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
20 |
இரு முந்நீர்க் குட்டமும், |
|
வியல் ஞாலத்து அகலமும், |
|
வளி வழங்கு திசையும், |
|
வறிது நிலைஇய காயமும், என்றாங்கு |
|
5 |
அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை, |
அறிவும், ஈரமும், பெருங் கண்ணோட்டமும்: |
|
சோறு படுக்கும் தீயோடு |
|
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது |
|
பிறிது தெறல் அறியார், நின் நிழல் வாழ்வோரே; |
|
10 |
திருவில் அல்லது கொலை வில் அறியார்; |
நாஞ்சில் அல்லது படையும் அறியார்; |
|
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய, அப் |
|
பிறர் மண் உண்ணும் செம்மல்! நின் நாட்டு |
|
வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது, |
|
15 |
பகைவர் உண்ணா அரு மண்ணினையே; |
அம்பு துஞ்சும் கடி அரணால், |
|
அறம் துஞ்சும் செங்கோலையே; |
|
புதுப் புள் வரினும், பழம் புள் போகினும், |
|
விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை; |
|
20 |
அனையை ஆகல்மாறே, |
மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும்மே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.
|
21 |
புல வரை இறந்த புகழ்சால் தோன்றல்! |
|
'நில வரை இறந்த குண்டு கண் அகழி, |
|
வான் தோய்வு அன்ன புரிசை, விசும்பின் |
|
மீன் பூத்தன்ன உருவ ஞாயில், |
|
5 |
கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை, |
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில், |
|
கருங் கைக் கொல்லன் செந் தீ மாட்டிய |
|
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது' என, |
|
வேங்கை மார்பன் இரங்க, வைகலும் |
|
10 |
ஆடு கொளக் குழைந்த தும்பை, புலவர் |
பாடுதுறை முற்றிய, கொற்ற வேந்தே! |
|
இகழுநர் இசையொடு மாய, |
|
புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே! |
|
திணையும் துறையும் அவை.
| |
கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதியை ஐயூர் மூலங் கிழார் பாடியது.
|
22 |
தூங்கு கையான் ஓங்கு நடைய, |
|
உறழ் மணியான் உயர் மருப்பின, |
|
பிறை நுதலான் செறல் நோக்கின, |
|
பா அடியான் பணை எருத்தின, |
|
5 |
தேன் சிதைந்த வரை போல, |
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாத்து, |
|
அயறு சோரும் இருஞ் சென்னிய, |
|
மைந்து மலிந்த மழ களிறு |
|
கந்து சேர்பு நிலைஇ வழங்க; |
|
10 |
பாஅல் நின்று கதிர் சோரும் |
வான் உறையும் மதி போலும் |
|
மாலை வெண் குடை நீழலான், |
|
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க; |
|
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த |
|
15 |
ஆய் கரும்பின் கொடிக் கூரை, |
சாறு கொண்ட களம் போல, |
|
வேறு வேறு பொலிவு தோன்ற; |
|
குற்று ஆனா உலக்கையான் |
|
கலிச் சும்மை வியல் ஆங்கண், |
|
20 |
பொலந் தோட்டுப் பைந் தும்பை |
மிசை அலங்கு உளைய பனைப் போழ் செரீஇ, |
|
சின மாந்தர் வெறிக் குரவை |
|
ஓத நீரின் பெயர்பு பொங்க; |
|
வாய் காவாது பரந்து பட்ட |
|
25 |
வியன் பாசறைக் காப்பாள! |
வேந்து தந்த பணி திறையான் |
|
சேர்ந்தவர்தம் கடும்பு ஆர்த்தும், |
|
ஓங்கு கொல்லியோர், அடு பொருந! |
|
வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய்! |
|
30 |
வாழிய, பெரும! நின் வரம்பு இல் படைப்பே, |
நிற் பாடிய வயங்கு செந் நாப் |
|
பின் பிறர் இசை நுவலாமை, |
|
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ! |
|
'மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே |
|
35 |
புத்தேள் உலகத்து அற்று' எனக் கேட்டு வந்து, |
இனிது கண்டிசின்; பெரும! முனிவு இலை, |
|
வேறு புலத்து இறுக்கும் தானையொடு, |
|
சோறு பட நடத்தி நீ துஞ்சாய்மாறே! |
|
திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
| |
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.
|
23 |
'வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇ, |
|
களிறு படிந்து உண்டென, கலங்கிய துறையும்; |
|
கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல், |
|
சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின் |
|
5 |
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் |
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில் |
|
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்; |
|
வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும் |
|
கடி மரம் துளங்கிய காவும்; நெடு நகர் |
|
10 |
வினை புனை நல் இல் வெவ் எரி நைப்ப, |
கனை எரி உரறிய மருங்கும்; நோக்கி, |
|
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச் சென்று, | |
இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும் |
|
துன்னல் போகிய துணிவினோன்' என, |
|
15 |
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை |
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட |
|
கால முன்ப! நின் கண்டனென் வருவல் |
|
அறு மருப்பு எழில் கலை புலிப்பால் பட்டென, |
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை |
|
20 |
பூளை நீடிய வெருவரு பறந்தலை |
வேளை வெண் பூக் கறிக்கும் |
|
ஆள் இல் அத்தம் ஆகிய காடே. |
|
திணையும் துறையும் அவை; துறை நல்லிசை வஞ்சியும் ஆம்.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.
|
25 |
மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல |
|
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது, |
|
உரவுச் சினம் திருகிய உரு கெழு ஞாயிறு, |
|
நிலவுத் திகழ் மதியமொடு, நிலம் சேர்ந்தாஅங்கு, |
|
5 |
உடல் அருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை |
அணங்கு அரும் பறந்தலை உணங்கப் பண்ணி, |
|
பிணியுறு முரசம் கொண்ட காலை, |
|
நிலை திரிபு எறிய, திண் மடை கலங்கிச் |
|
சிதைதல் உய்ந்தன்றோ, நின் வேல் செழிய! |
|
10 |
முலை பொலி ஆகம் உருப்ப நூறி, |
மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல் |
|
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர, |
|
அவிர் அறல் கடுக்கும் அம் மென் |
|
குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனைக் கல்லாடனார் பாடியது.
|
26 |
நளி கடல் இருங் குட்டத்து |
|
வளி புடைத்த கலம் போல, |
|
களிறு சென்று களன் அகற்றவும், |
|
களன் அகற்றிய வியல் ஆங்கண் |
|
5 |
ஒளிறு இலைய எஃகு ஏந்தி, |
அரைசு பட அமர் உழக்கி, |
|
உரை செல முரசு வௌவி, |
|
முடித் தலை அடுப்பு ஆக, |
|
புனல் குருதி உலைக் கொளீஇ, |
|
10 |
தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின், |
அடுகளம் வேட்ட அடு போர்ச் செழிய! |
|
ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை, |
|
நான் மறை முதல்வர் சுற்றம் ஆக, |
|
மன்னர் ஏவல் செய்ய, மன்னிய |
|
15 |
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே! |
நோற்றோர் மன்ற நின் பகைவர், நின்னொடு |
|
மாற்றார் என்னும் பெயர் பெற்று, |
|
ஆற்றார் ஆயினும், ஆண்டு வாழ்வோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
|
31 |
சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் |
|
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல, |
|
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை, |
|
உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க, |
|
5 |
நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப் |
பாசறை அல்லது நீ ஒல்லாயே; |
|
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார் |
|
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே; |
|
'போர்' எனின், புகலும் புனை கழல் மறவர், |
|
10 |
'காடு இடைக் கிடந்த நாடு நனி சேஎய; |
செல்வேம் அல்லேம்' என்னார்; 'கல்லென் |
|
விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து, |
|
குண கடல் பின்னது ஆக, குட கடல் |
|
வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப, |
|
15 |
வல முறை வருதலும் உண்டு' என்று அலமந்து, |
நெஞ்சு நடுங்கு அவலம் பாய, |
|
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே. |
|
திணை வாகை; துறை அரச வாகை; மழபுலவஞ்சியும் ஆம்.
| |
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
33 |
கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன் |
|
மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் |
|
தயிர் கொடு வந்த தசும்பும், நிறைய, |
|
ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர் |
|
5 |
குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல் |
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் |
|
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும், |
|
ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் |
|
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; |
|
10 |
பாடுநர் வஞ்சி பாட, படையோர் |
தாது எரு மறுகின் பாசறை பொலிய, |
|
புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த |
|
மலரா மாலைப் பந்து கண்டன்ன |
|
ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் |
|
15 |
செம்மற்று அம்ம, நின் வெம் முனை இருக்கை |
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற |
|
அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப, |
|
காம இருவர் அல்லது, யாமத்துத் |
|
தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின், |
|
20 |
ஒதுக்குஇன் திணி மணல் புதுப் பூம் பள்ளி |
வாயில் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப, |
|
நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
37 |
நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த, |
|
வேக வெந் திறல், நாகம் புக்கென, |
|
விசும்பு தீப் பிறப்பத் திருகி, பசுங் கொடிப் |
|
பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்கு, |
|
5 |
புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல், |
சினம் கெழு தானை, செம்பியன் மருக! |
|
கராஅம் கலித்த குண்டு கண் அகழி, |
|
இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி, |
|
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் |
|
10 |
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி, |
செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர், |
|
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின், |
|
'நல்ல' என்னாது, சிதைத்தல் |
|
வல்லையால், நெடுந்தகை! செருவத்தானே. |
|
திணை வாகை; துறை அரசவாகை; முதல் வஞ்சியும் ஆம்.
| |
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
42 |
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின் |
|
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின் |
|
தானையும் கடல் என முழங்கும்; கூர் நுனை |
|
வேலும் மின்னின் விளங்கும்; உலகத்து |
|
5 |
அரைசு தலை பனிக்கும் ஆற்றலைஆதலின், |
புரை தீர்ந்தன்று; அது புதுவதோ அன்றே; |
|
தண் புனல் பூசல் அல்லது, நொந்து, |
|
'களைக, வாழி, வளவ!' என்று, நின் |
|
முனைதரு பூசல் கனவினும் அறியாது, |
|
10 |
புலி புறங்காக்கும் குருளை போல, |
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப, |
|
பெரு விறல் யாணர்த்து ஆகி, அரிநர் |
|
கீழ் மடைக் கொண்ட வாளையும், உழவர் |
|
படை மிளிர்ந்திட்ட யாமையும், அறைநர் |
|
15 |
கரும்பில் கொண்ட தேனும், பெருந் துறை |
நீர் தரு மகளிர் குற்ற குவளையும், |
|
வன் புலக் கேளிர்க்கு வரு விருந்து அயரும் |
|
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந! |
|
மலையின் இழிந்து, மாக் கடல் நோக்கி, |
|
20 |
நில வரை இழிதரும் பல் யாறு போல, |
புலவர் எல்லாம் நின் நோக்கினரே; |
|
நீயே, மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துக் |
|
கூற்று வெகுண்டன்ன முன்பொடு, |
|
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே. |
|
திணை வாகை; துறை அரசவாகை.
| |
அவனை இடைக்காடனார் பாடியது.
|
43 |
நிலமிசை வாழ்நர் அலமரல் தீர, |
|
தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி, |
|
கால் உணவு ஆக, சுடரொடு கொட்கும் |
|
அவிர்சடை முனிவரும் மருள, கொடுந்சிறைக் |
|
5 |
கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து, ஒரீஇ, |
தன் அகம் புக்க குறு நடைப் புறவின் |
|
தபுதி அஞ்சிச் சீரை புக்க |
|
வரையா ஈகை உரவோன் மருக! |
|
நேரார்க் கடந்த முரண் மிகு திருவின் |
|
10 |
தேர் வண் கிள்ளி தம்பி! வார் கோல், |
கொடுமர மறவர் பெரும! கடு மான் |
|
கை வண் தோன்றல்! ஐயம் உடையேன்: |
|
'ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் |
|
பார்ப்பார் நோவன செய்யலர்; மற்று இது |
|
15 |
நீர்த்தோ நினக்கு?' என வெறுப்பக் கூறி, |
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும், |
|
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே; |
|
'தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல் |
|
இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும்' என, |
|
20 |
காண்தகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின், |
யானே பிழைத்தனென்; சிறக்க நின் ஆயுள் |
|
மிக்கு வரும் இன் நீர்க் காவிரி |
|
எக்கர் இட்ட மணலினும் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமப்பல் கண்ணணும் வட்டுப் பொருவுழி, கை கரப்ப, வெகுண்டு வட்டுக் கொண்டு எறிந்தானை, 'சோழன் மகன் அல்லை, என, நாணியிருந்தானைத் தாமப்பல் கண்ணனார் பாடியது.
|
44 |
இரும் பிடித் தொழுதியொடு பெருங் கயம் படியா, |
|
நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ, |
|
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி, |
|
நிலமிசைப் புரளும் கைய, வெய்து உயிர்த்து, |
|
5 |
அலமரல் யானை உரும் என முழங்கவும், |
பால் இல் குழவி அலறவும், மகளிர் |
|
பூ இல் வறுந் தலை முடிப்பவும், நீர் இல் |
|
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும், |
|
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்; |
|
10 |
துன் அருந் துப்பின் வய மான் தோன்றல்! |
அறவை ஆயின்,' நினது' எனத் திறத்தல்; |
|
மறவை ஆயின், போரொடு திறத்தல்; |
|
அறவையும் மறவையும் அல்லையாக, |
|
திறவாது அடைத்த திண் நிலைக் கதவின் |
|
15 |
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் |
நாணுத்தகவு உடைத்து, இது காணுங்காலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்து இருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
|
51 |
நீர் மிகின், சிறையும் இல்லை; தீ மிகின், |
|
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை; |
|
வளி மிகின், வலியும் இல்லை; ஒளி மிக்கு |
|
அவற்று ஓர் அன்ன சினப் போர் வழுதி, |
|
5 |
'தண் தமிழ் பொது' எனப் பொறாஅன், போர் எதிர்ந்து, |
கொண்டி வேண்டுவன் ஆயின், 'கொள்க' எனக் |
|
கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே; |
|
அளியரோ அளியர், அவன் அளி இழந்தோரே |
|
நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த |
|
10 |
செம் புற்று ஈயல் போல, |
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே! |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை ஐயூர் முடவனார் பாடியது.
|
52 |
அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் முனைஇ, |
|
முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல், |
|
ஊன் நசை உள்ளம் துரப்ப, இரை குறித்து, |
|
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு, |
|
5 |
வட புல மன்னர் வாட, அடல் குறித்து, |
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி! |
|
இது நீ கண்ணியது ஆயின், இரு நிலத்து |
|
யார்கொல் அளியர்தாமே? ஊர்தொறும் |
|
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடுங் கொடி |
|
10 |
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் |
பெரு நல் யாணரின் ஒரீஇ, இனியே |
|
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப் |
|
பலி கண் மாறிய பாழ்படு பொதியில், |
|
நரை மூதாளர் நாய் இடக் குழிந்த |
|
15 |
வல்லின் நல் அகம் நிறைய, பல் பொறிக் |
கான வாரணம் ஈனும் |
|
காடு ஆகி விளியும் நாடு உடையோரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை மருதன் இளநாகனார் பாடியது.
|
53 |
முதிர் வார் இப்பி முத்த வார் மணல், |
|
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து, |
|
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் |
|
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற |
|
5 |
களம் கொள் யானை, கடு மான், பொறைய! |
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; |
|
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை |
|
கைம்முற்றல, நின் புகழே, என்றும்; |
|
ஒளியோர் பிறந்த இம் மலர் தலை உலகத்து |
|
10 |
வாழேம் என்றலும் அரிதே 'தாழாது |
செறுத்த செய்யுள் செய் செந் நாவின், |
|
வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க் கபிலன் |
|
இன்று உளன் ஆயின், நன்றுமன்' என்ற நின் |
|
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப, |
|
15 |
பாடுவல் மன்னால், பகைவரைக் கடப்பே. |
திணையும் துறையும் அவை.
| |
சேரன் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பொருந்தில் இளங்கீரனார் பாடியது.
|
54 |
எம் கோன் இருந்த கம்பலை மூதூர், |
|
உடையோர் போல இடையின்று குறுகி, |
|
செம்மல் நாள் அவை அண்ணாந்து புகுதல் |
|
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே; |
|
5 |
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து, |
வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு |
|
ஆனாது ஈயும் கவி கை வண்மைக் |
|
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த |
|
நெடுமொழி மன்னர் நினைக்கும் காலை, |
|
10 |
பாசிலைத் தொடுத்த, உவலைக் கண்ணி, |
மாசு உண் உடுக்கை, மடி வாய், இடையன் |
|
சிறு தலை ஆயமொடு குறுகல்செல்லாப் |
|
புலி துஞ்சு வியன் புலத்தற்றே |
|
வலி துஞ்சு தடக் கை அவனுடை நாடே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் குட்டுவன் கோதையைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரன் பாடியது.
|
61 |
கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர் |
|
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும், |
|
மலங்கு மிளிர், செறுவின் தளம்பு தடிந்து இட்ட |
|
பழன வாளைப் பரூஉக் கண் துணியல் |
|
5 |
புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக, |
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி, |
|
நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும் |
|
வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர் |
|
தெங்கு படு வியன் பழம் முனையின், தந்தையர் |
|
10 |
குறைக்கண் நெடும் போர் ஏறி, விசைத்து எழுந்து |
செழுங் கோள் பெண்ணைப் பழம் தொட முயலும், |
|
வைகல் யாணர், நல் நாட்டுப் பொருநன், |
|
எஃகு விளங்கு தடக் கை இயல் தேர்ச் சென்னி, |
|
சிலைத் தார் அகலம் மலைக்குநர் உளர்எனின், |
|
15 |
தாம் அறிகுவர் தமக்கு உறுதி; யாம் அவன் |
எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர் |
|
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது, |
|
திருந்து அடி பொருந்த வல்லோர் |
|
வருந்தக் காண்டல், அதனினும் இலமே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
66 |
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி, |
|
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக! |
|
களி இயல் யானைக் கரிகால்வளவ! |
|
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற |
|
5 |
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே |
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை, |
|
மிகப் புகழ் உலகம் எய்தி, |
|
புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே? |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடியது.
|
76 |
ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும், |
|
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை; |
|
இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை |
|
மன்ற வேம்பின் மாச் சினை ஒண் தளிர் |
|
5 |
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து, |
செறியத் தொடுத்த தேம் பாய் கண்ணி, |
|
ஒலியல் மாலையொடு, பொலியச் சூடி, |
|
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்தக, |
|
நாடு கெழு திருவின், பசும் பூண், செழியன் |
|
10 |
பீடும் செம்மலும் அறியார் கூடி, |
'பொருதும்' என்று தன்தலை வந்த |
|
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க, |
|
ஒரு தான் ஆகிப் பொருது, களத்து அடலே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை இடைக் குன்றூர் கிழார் பாடியது.
|
77 |
கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு, |
|
குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர் |
|
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து, |
|
குறுந் தொடி கழித்த கைச் சாபம் பற்றி, |
|
5 |
நெடுந் தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன் |
யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார் பூண்டு, |
|
தாலி களைந்தன்றும் இலனே; பால் விட்டு |
|
அயினியும் இன்று அயின்றனனே; வயின்வயின் |
|
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை |
|
10 |
வியந்தன்றும், இழிந்தன்றும், இலனே; அவரை |
அழுந்தப் பற்றி, அகல் விசும்பு ஆர்ப்பு எழ, |
|
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை |
|
மகிழ்ந்தன்றும், மலிந்தன்றும், அதனினும் இலனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
78 |
வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன் தாள், |
|
அணங்கு அருங் கடுந் திறல் என்னை முணங்கு நிமிர்ந்து, |
|
அளைச் செறி உழுவை இரைக்கு வந்தன்ன |
|
மலைப்பு அரும் அகலம் மதியார், சிலைத்து எழுந்து, |
|
5 |
'விழுமியம், பெரியம், யாமே; நம்மின் |
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது' என, |
|
எள்ளி வந்த வம்ப மள்ளர் |
|
புல்லென் கண்ணர்; புறத்தில் பெயர, |
|
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு அவர் |
|
10 |
மாண் இழை மகளிர் நாணினர் கழிய, |
தந்தை தம் ஊர் ஆங்கண், |
|
தெண் கிணை கறங்கச் சென்று, ஆண்டு அட்டனனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
79 |
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி, |
|
மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து, |
|
தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி, |
|
வெம் போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த |
|
5 |
வம்ப மள்ளரோ பலரே; |
எஞ்சுவர் கொல்லோ, பகல் தவச் சிறிதே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
81 |
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே |
|
கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே; |
|
யார்கொல் அளியர்தாமே ஆர் நார்ச் |
|
செறியத் தொடுத்த கண்ணிக் |
|
5 |
கவி கை மள்ளன் கைப்பட்டோரே? |
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
82 |
சாறு தலைக்கொண்டென, பெண் ஈற்று உற்றென, |
|
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று, |
|
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது |
|
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ |
|
5 |
ஊர் கொள வந்த பொருநனொடு, |
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
86 |
சிற்றில் நல் தூண் பற்றி, 'நின் மகன் |
|
யாண்டு உளனோ?' என வினவுதி; என் மகன் |
|
யாண்டு உளன்ஆயினும் அறியேன்; ஓரும் |
|
புலி சேர்ந்து போகிய கல் அளை போல, |
|
5 |
ஈன்ற வயிறோ இதுவே; |
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே! |
|
திணை வாகை; துறை ஏறாண் முல்லை.
| |
காவற்பெண்டின் பாட்டு.
|
93 |
திண் பிணி முரசம் இழுமென முழங்கச் |
|
சென்று, அமர் கடத்தல் யாவது? வந்தோர் |
|
தார் தாங்குதலும் ஆற்றார், வெடிபட்டு, |
|
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் |
|
5 |
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇ, |
காதல் மறந்து, அவர் தீது மருங்கு அறுமார், |
|
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் |
|
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி, |
|
'மறம் கந்தாக நல் அமர் வீழ்ந்த |
|
10 |
நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க!' என |
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ |
|
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து |
|
அண்ணல் யானை அடு களத்து ஒழிய, |
|
அருஞ் சமம் ததைய நூறி, நீ, |
|
15 |
பெருந் தகை! விழுப் புண் பட்ட மாறே. |
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவன் பொருது புண்பட்டு நின்றோனை அவர் பாடியது.
|
94 |
ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின், |
|
நீர்த் துறை படியும் பெருங் களிறு போல |
|
இனியை, பெரும! எமக்கே; மற்று அதன் |
|
துன் அருங் கடாஅம் போல |
|
5 |
இன்னாய், பெரும! நின் ஒன்னாதோர்க்கே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
98 |
முனைத் தெவ்வர் முரண் அவியப் |
|
பொரக் குறுகிய நுதி மருப்பின் நின் |
|
இனக் களிறு செலக் கண்டவர் |
|
மதில் கதவம் எழுச் செல்லவும், |
|
5 |
பிணன் அழுங்கக் களன் உழக்கிச் |
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின் |
|
இன நல் மாச் செலக் கண்டவர் |
|
கவை முள்ளின் புழை அடைப்பவும், |
|
மார்புறச் சேர்ந்து ஒல்காத் |
|
10 |
தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் |
தோல் கழியொடு பிடி செறிப்பவும், |
|
வாள் வாய்த்த வடுப் பரந்த நின் |
|
மற மைந்தர் மைந்து கண்டவர் |
|
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும், |
|
15 |
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென, |
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் |
|
கூற்றத்து அனையை; ஆகலின், போற்றார் |
|
இரங்க விளிவதுகொல்லோ வரம்பு அணைந்து |
|
இறங்குகதிர் அலம்வரு கழனி, |
|
20 |
பெரும் புனல் படப்பை, அவர் அகன் தலை நாடே! |
திணை வாகை; துறை அரச வாகை; திணை வஞ்சியும், துறை கொற்ற வள்ளையும் ஆம்.
| |
அவனை அவர் பாடியது.
|
99 |
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், |
|
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும், |
|
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய |
|
தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல, |
|
5 |
ஈகை அம் கழல் கால், இரும் பனம் புடையல், |
பூ ஆர் காவின், புனிற்றுப் புலால் நெடு வேல், |
|
எழு பொறி நாட்டத்து எழாஅத் தாயம் |
|
வழு இன்று எய்தியும் அமையாய், செரு வேட்டு, |
|
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணிச் |
|
10 |
சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய |
அன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும் |
|
பரணன் பாடினன் மற்கொல் மற்று நீ |
|
முரண் மிகு கோவலூர் நூறி, நின் |
|
அரண் அடு திகிரி ஏந்திய தோளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் கோவலூர் எறிந்தானை அவர் பாடியது.
|
100 |
கையது வேலே; காலன புனை கழல்; |
|
மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்; |
|
வட்கர் போகிய வளர் இளம் போந்தை |
|
உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு, |
|
5 |
வெட்சி மா மலர், வேங்கையொடு விரைஇ, |
சுரி இரும் பித்தை பொலியச் சூடி, |
|
வரிவயம் பொருத வயக் களிறு போல, |
|
இன்னும் மாறாது சினனே; அன்னோ! |
|
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே; |
|
10 |
செறுவர் நோக்கிய கண், தன் |
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே. |
|
திணையும் துறையும் அவை; திணை வஞ்சியும், துறை கொற்றவள்ளையும் ஆம்.
| |
அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.
|
104 |
போற்றுமின், மறவீர்! சாற்றுதும், நும்மை: |
|
ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும் |
|
தாள் படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும் |
|
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை |
|
5 |
நுண் பல் கருமம் நினையாது, |
'இளையன்' என்று இகழின், பெறல் அரிது, ஆடே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
125 |
பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன, |
|
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங் குறை, |
|
பரூஉக் கள் மண்டையொடு, ஊழ் மாறு பெயர |
|
உண்கும், எந்தை! நிற் காண்கு வந்திசினே, |
|
5 |
நள்ளாதார் மிடல் சாய்த்த |
வல்லாள! நின் மகிழ் இருக்கையே. |
|
உழுத நோன் பகடு அழி தின்றாங்கு |
|
நல் அமிழ்து ஆக, நீ நயந்து உண்ணும் நறவே; |
|
குன்றத்து அன்ன களிறு பெயர, |
|
10 |
கடந்து அட்டு வென்றோனும், நிற் கூறும்மே; |
'வெலீஇயோன் இவன்' என, |
|
'கழல் அணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு |
|
விரைந்து வந்து, சமம் தாங்கிய, |
|
வல் வேல் மலையன் அல்லன் ஆயின், |
|
15 |
நல் அமர் கடத்தல் எளிதுமன், நமக்கு' எனத் |
தோற்றோன்தானும், நிற் கூறும்மே, |
|
'தொலைஇயோன் இவன்' என, |
|
ஒரு நீ ஆயினை பெரும! பெரு மழைக்கு |
|
இருக்கை சான்ற உயர் மலைத் |
|
20 |
திருத் தகு சேஎய்! நிற் பெற்றிசினோர்க்கே. |
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழி, சோழற்குத் துப்பாகிய தேர்வண்மலையனை வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது.
|
166 |
நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை |
|
முது முதல்வன் வாய் போகாது, |
|
ஒன்று புரிந்த ஈர் இரண்டின், |
|
ஆறு உணர்ந்த ஒரு முது நூல் |
|
5 |
இகல் கண்டோர் மிகல் சாய்மார், |
மெய் அன்ன பொய் உணர்ந்து, |
|
பொய் ஓராது மெய் கொளீஇ, |
|
மூ ஏழ் துறையும் முட்டு இன்று போகிய |
|
உரைசால் சிறப்பின் உரவோர் மருக! |
|
10 |
வினைக்கு வேண்டி நீ பூண்ட |
புலப் புல்வாய்க் கலைப் பச்சை |
|
சுவல் பூண் ஞாண்மிசைப் பொலிய; |
|
மறம் கடிந்த அருங் கற்பின், |
|
அறம் புகழ்ந்த வலை சூடி, |
|
15 |
சிறு நுதல், பேர் அகல் அல்குல், |
சில சொல்லின், பல கூந்தல், நின் |
|
நிலைக்கு ஒத்த நின் துணைத் துணைவியர் |
|
தமக்கு அமைந்த தொழில் கேட்ப; |
|
காடு என்றா நாடு என்று ஆங்கு |
|
20 |
ஈர் ஏழின் இடம் முட்டாது, |
நீர் நாண நெய் வழங்கியும், |
|
எண் நாணப் பல வேட்டும், |
|
மண் நாணப் புகழ் பரப்பியும், |
|
அருங் கடிப் பெருங் காலை, |
|
25 |
விருந்துற்ற நின் திருந்து ஏந்து நிலை, |
என்றும், காண்கதில் அம்ம, யாமே! குடாஅது |
|
பொன் படு நெடு வரைப் புயலேறு சிலைப்பின், |
|
பூ விரி புது நீர்க் காவிரி புரக்கும் |
|
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண், |
|
30 |
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்; |
செல்வல் அத்தை, யானே; செல்லாது, |
|
மழை அண்ணாப்ப நீடிய நெடு வரைக் |
|
கழை வளர் இமயம் போல, |
|
நிலீஇயர் அத்தை, நீ நிலம்மிசையானே? |
|
திணை வாகை; துறை பார்ப்பன வாகை.
| |
சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.
|
167 |
நீயே, அமர் காணின் அமர் கடந்து, அவர் |
|
படை விலக்கி எதிர் நிற்றலின், |
|
வாஅள் வாய்த்த வடு ஆழ் யாக்கையொடு, |
|
கேள்விக்கு இனியை; கட்கு இன்னாயே: |
|
5 |
அவரே, நிற் காணின் புறம் கொடுத்தலின், |
ஊறு அறியா மெய் யாக்கையொடு, |
|
கண்ணுக்கு இனியர்; செவிக்கு இன்னாரே: |
|
அதனால், நீயும் ஒன்று இனியை; அவரும் ஒன்று இனியர்; |
|
ஒவ்வா யா உள, மற்றே? வெல் போர்க் |
|
10 |
கழல் புனை திருந்து அடிக் கடு மான் கிள்ளி! |
நின்னை வியக்கும் இவ் உலகம்; அஃது |
|
என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே. |
|
திணை அது; துறை அரச வாகை.
| |
ஏனாதி திருக்கிள்ளியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
170 |
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி, |
|
பரலுடை முன்றில், அம் குடிச் சீறூர், |
|
எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி |
|
வில் உழுது உண்மார் நாப்பண், ஒல்லென, |
|
5 |
இழி பிறப்பாளன் கருங் கை சிவப்ப, |
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி |
|
புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும் |
|
மலை கெழு நாடன், கூர்வேல் பிட்டன், |
|
குறுகல் ஓம்புமின், தெவ்விர்! அவனே |
|
10 |
சிறு கண் யானை வெண் கோடு பயந்த |
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து, |
|
நார் பிழிக் கொண்ட வெங் கள் தேறல் |
|
பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி, |
|
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு |
|
15 |
இரும்பு பயன் படுக்கும் கருங் கைக் கொல்லன் |
விசைத்து எறி கூடமொடு பொரூஉம் |
|
உலைக் கல் அன்ன, வல்லாளன்னே. |
|
திணை வாகை; துறை வல்லாண் முல்லை; தானைமறமும் ஆம்.
| |
அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
|
174 |
அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென, |
|
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது, |
|
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து |
|
இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல் |
|
5 |
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு, |
அரசு இழந்திருந்த அல்லல் காலை, |
|
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது |
|
இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி |
|
மல்லல் நல் நாட்டு அல்லல் தீர, |
|
10 |
பொய்யா நாவின் கபிலன் பாடிய, |
மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச் |
|
செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட |
|
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை, |
|
அரு வழி இருந்த பெரு விறல் வளவன் |
|
15 |
மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை |
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந! |
|
விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண், |
|
சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன் |
|
ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர், |
|
20 |
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின், |
ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும் |
|
கவலை நெஞ்சத்து அவலம் தீர, |
|
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்! |
|
கல் கண் பொடிய, கானம் வெம்ப, |
|
25 |
மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க, |
கோடை நீடிய பைது அறு காலை, |
|
இரு நிலம் நெளிய ஈண்டி, |
|
உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
178 |
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு, பணை முனிந்து |
|
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண், |
|
மணல் மலி முற்றம் புக்க சான்றோர் |
|
உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று, |
|
5 |
'உண்ம்' என இரக்கும் பெரும் பெயர்ச் சாத்தன் |
ஈண்டோ இன் சாயலனே; வேண்டார் |
|
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின், |
|
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய |
|
நெடுமொழி மறந்த சிறு பேராளர் |
|
10 |
அஞ்சி நீங்கும்காலை, |
ஏமமாகத் தான் முந்துறுமே. |
|
திணை வாகை; துறை வல்லாண் முல்லை.
| |
பாண்டியன் கீரஞ்சாத்தனை அவர் பாடியது.
|
179 |
'ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்தென, |
|
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை |
|
மலர்ப்போர் யார்?' என வினவலின், மலைந்தோர் |
|
விசி பிணி முரசமொடு மண் பல தந்த |
|
5 |
திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன், |
படை வேண்டுவழி வாள் உதவியும், |
|
வினை வேண்டுவழி அறிவு உதவியும், |
|
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து |
|
அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்து, |
|
10 |
தோலா நல் இசை, நாலை கிழவன், |
பருந்து பசி தீர்க்கும் நற் போர்த் |
|
திருந்து வேல் நாகன் கூறினர், பலரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
நாலை கிழவன் நாகனை வடநெடுந் தத்தனார் பாடியது.
|
180 |
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே; |
|
'இல்' என மறுக்கும் சிறுமையும் இலனே; |
|
இறை உறு விழுமம் தாங்கி, அமரகத்து |
|
இரும்பு சுவைக் கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து, |
|
5 |
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி, |
வடு இன்று வடிந்த யாக்கையன், கொடை எதிர்ந்து, |
|
ஈர்ந்தையோனே, பாண் பசிப் பகைஞன்; |
|
இன்மை தீர வேண்டின், எம்மொடு |
|
நீயும் வம்மோ? முது வாய் இரவல! |
|
10 |
யாம் தன் இரக்கும்காலை, தான் எம் |
உண்ணா மருங்குல் காட்டி, தன் ஊர்க் |
|
கருங் கைக் கொல்லனை இரக்கும், |
|
'திருந்து இலை நெடு வேல் வடித்திசின்' எனவே. |
|
திணையும் துறையும் அவை; துறை பாணாற்றுப் படையும் ஆம்.
| |
ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
181 |
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில், |
|
கருங் கண் எயிற்றி காதல் மகனொடு, |
|
கான இரும் பிடிக் கன்று தலைக் கொள்ளும் |
|
பெருங் குறும்பு உடுத்த வன் புல இருக்கை, |
|
5 |
புலாஅ அம்பின், போர் அருங் கடி மிளை, |
வலாஅரோனே, வாய் வாள் பண்ணன்; |
|
உண்ணா வறுங் கடும்பு உய்தல் வேண்டின், |
|
இன்னே சென்மதி, நீயே சென்று, அவன் |
|
பகைப் புலம் படராஅளவை, நின் |
|
10 |
பசிப் பகைப் பரிசில் காட்டினை கொளற்கே. |
திணையும் துறையும் அவை.
| |
வல்லார் கிழான் பண்ணனைச் சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந்தும்பியார் பாடியது.
|
251 |
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பில், |
|
பாவை அன்ன குறுந் தொடி மகளிர் |
|
இழை நிலை நெகிழ்த்த மள்ளன் கண்டிகும் |
|
கழைக் கண் நெடு வரை அருவி ஆடி, |
|
5 |
கான யானை தந்த விறகின் |
கடுந் தெறல் செந் தீ வேட்டு, |
|
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே! |
|
திணை வாகை; துறை தாபத வாகை.
| |
....................மாற்பித்தியார் பாடியது.
|
252 |
கறங்கு வெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து, |
|
தில்லை அன்ன புல்லென் சடையோடு, |
|
அள் இலைத் தாளி கொய்யுமோனே |
|
இல் வழங்கு மட மயில் பிணிக்கும் |
|
5 |
சொல் வலை வேட்டுவன் ஆயினன், முன்னே! |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
279 |
கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே; |
|
மூதில் மகளிர் ஆதல் தகுமே: |
|
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை, |
|
யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே; |
|
5 |
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன், |
பெரு நிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே; |
|
இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி, |
|
வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇ, |
|
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி, |
|
10 |
|
'செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே! |
|
திணை வாகை; துறை மூதில் முல்லை.
| |
ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.
|
285 |
பாசறையீரே! பாசறையீரே! |
|
துடியன் கையது வேலே; அடி புணர் |
|
வாங்கு இரு மருப்பின் தீம் தொடைச் சீறியாழ்ப் |
|
பாணன் கையது தோலே; காண்வரக் |
|
5 |
கடுந் தெற்று மூடையின்...................... |
வாடிய மாலை மலைந்த சென்னியன்; |
|
வேந்து தொழில் அயரும் அருந் தலைச் சுற்றமொடு |
|
நெடு நகர் வந்தென, விடு கணை மொசித்த |
|
மூரி வெண் தோல் |
|
10 |
சேறுபடு குருதிச் செம்மல் உக்குஓஒ! |
மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போக, |
|
நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனனே; |
|
அது கண்டு, பரந்தோர் எல்லாம் புகழத் தலை பணிந்து |
|
இறைஞ்சியோனே, குருசில்! பிணங்கு கதிர் |
|
15 |
அலமருங் கழனித் தண்ணடை ஒழிய, |
இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர் |
|
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே. |
|
திணை வாகை; துறை ...............முல்லை.
| |
அரிசில் கிழார் பாடியது.
|
296 |
வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும், |
|
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும், |
|
எல்லா மனையும் கல்லென்றவ்வே; |
|
வேந்து உடன்று எறிவான்கொல்லோ |
|
5 |
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே? |
திணை வாகை; துறை ஏறாண் முல்லை.
| |
வெள்ளைமாளர் பாடியது.
|
305 |
வயலைக் கொடியின் வாடிய மருங்குல், |
|
உயவல் ஊர்தி, பயலைப் பார்ப்பான் |
|
எல்லி வந்து நில்லாது புக்கு, |
|
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே |
|
5 |
ஏணியும் சீப்பும் மாற்றி, |
மாண் வினை யானையும் மணி களைந்தனவே. |
|
திணை வாகை; துறை பார்ப்பன வாகை.
| |
மதுரை வேளாசான் பாடியது.
|
306 |
களிறு பொரக் கலங்கு, கழல் முள் வேலி, |
|
அரிது உண் கூவல், அம் குடிச் சீறூர் |
|
ஒலி மென் கூந்தல் ஒள் நுதல் அரிவை |
|
நடுகல் கை தொழுது பரவும், ஒடியாது; |
|
5 |
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்னையும் |
ஒ ... ... ... ... ... ... ...வேந்தனொடு |
|
நாடுதரு விழுப் பகை எய்துக எனவே. |
|
திணை அது; துறை மூதில் முல்லை.
| |
அள்ளூர் நன்முல்லையார் பாடியது.
|
308 |
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின், |
|
மின் நேர் பச்சை, மிஞிற்றுக் குரல் சீறியாழ் |
|
நன்மை நிறைந்த நய வரு பாண! |
|
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் |
|
5 |
வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே; |
வேந்து உடன்று எறிந்த வேலே, என்னை |
|
சாந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே; |
|
உளம் கழி சுடர்ப் படை ஏந்தி, நம் பெருவிறல் |
|
ஓச்சினன் துரந்த காலை, மற்றவன் |
|
10 |
புன் தலை மடப் பிடி நாண, |
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே. |
|
திணை வாகை; துறை மூதில் முல்லை.
| |
கோவூர் கிழார் பாடியது.
|
312 |
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; |
|
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; |
|
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; |
|
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே, |
|
5 |
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி, |
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. |
|
திணை வாகை; துறை மூதில்முல்லை.
| |
பொன்முடியார் பாடியது.
|
313 |
அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் |
|
கைப் பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக் |
|
காணிய சென்ற இரவல் மாக்கள் |
|
களிறொடு நெடுந் தேர் வேண்டினும், கடவ; |
|
5 |
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட |
கழி முரி குன்றத்து அற்றே, |
|
எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே. |
|
திணை அது; துறை வல்லாண் முல்லை.
| |
மாங்குடி கிழார் பாடியது.
|
314 |
மனைக்கு விளக்கு ஆகிய வாணுதல் கணவன், |
|
முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந் தகை, |
|
நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை, |
|
புன் காழ் நெல்லி வன் புலச் சீறூர்க் |
|
5 |
குடியும் மன்னும் தானே; கொடி எடுத்து |
நிறை அழிந்து எழுதரு தானைக்குச் |
|
சிறையும் தானே தன் இறை விழுமுறினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஐயூர் முடவனார் பாடியது.
|
315 |
உடையன்ஆயின் உண்ணவும் வல்லன்; |
|
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்; |
|
மடவர் மகிழ் துணை; நெடு மான் அஞ்சி |
|
இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போல, |
|
5 |
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் |
கான்று படு கனை எரி போல, |
|
தோன்றவும் வல்லன் தான் தோன்றுங்காலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|
316 |
கள்ளின் வாழ்த்தி, கள்ளின் வாழ்த்தி, |
|
காட்டொடு மிடைந்த சீயா முன்றில், |
|
நாட் செருக்கு அனந்தர்த் துஞ்சுவோனே. |
|
அவன் எம் இறைவன்; யாம் அவன் பாணர்; |
|
5 |
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் |
இரும் புடைப் பழ வாள் வைத்தனன்; இன்று இக் |
|
கருங் கோட்டுச் சீறியாழ் பணையம்; இது கொண்டு |
|
ஈவதிலாளன் என்னாது, நீயும், |
|
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய, |
|
10 |
கள்ளுடைக் கலத்தேம் யாம் மகிழ் தூங்க, |
சென்று வாய் சிவந்து மேல் வருக |
|
சிறு கண் யானை வேந்து விழுமுறவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் பாடியது.
|
317 |
வென் வேல் ................................. நது |
|
முன்றில் கிடந்த பெருங் களியாற்கு |
|
அதள் உண்டாயினும், பாய் உண்டாயினும், |
|
யாது உண்டாயினும், கொடுமின் வல்லே; |
|
5 |
வேட்கை மீளப |
..................கும், எமக்கும், பிறர்க்கும், |
|
யார்க்கும், ஈய்ந்து, துயில் ஏற்பினனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வேம்பற்றூர்க் குமரனார் பாடியது.
|
318 |
கொய் அடகு வாட, தரு விறகு உணங்க, |
|
மயில்அம் சாயல் மாஅயோளொடு |
|
பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே |
|
மனை உறை குரீஇக் கறை அணல் சேவல், |
|
5 |
பாணர் நரம்பின் சுகிரொடு, வய மான் |
குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை, |
|
பெருஞ் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன் |
|
புன் புறப் பெடையொடு வதியும் |
|
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பெருங் குன்றூர் கிழார் பாடியது.
|
319 |
பூவல் படுவில் கூவல் தோண்டிய |
|
செங் கண் சில் நீர் பெய்த சீறில் |
|
முன்றில் இருந்த முது வாய்ச் சாடி |
|
யாம் கஃடு உண்டென, வறிது மாசு இன்று; |
|
5 |
படலை முன்றில் சிறு தினை உணங்கல் |
புறவும் இதலும் அறவும் உண்கெனப் |
|
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனான், |
|
முயல் சுட்ட ஆயினும் தருகுவேம்; புகுதந்து |
|
ஈங்கு இருந்தீமோ, முது வாய்ப் பாண! |
|
10 |
கொடுங் கோட்டு ஆமான் நடுங்கு தலைக் குழவி |
புன் தலைச் சிறாஅர் கன்று எனப் பூட்டும் |
|
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர், |
|
வேந்து விடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின் |
|
பாடினி மாலை அணிய, |
|
15 |
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே. |
திணையும் துறையும் அவை.
| |
ஆலங்குடி வங்கனார் பாடியது.
|
320 |
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி, |
|
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல், |
|
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென, |
|
பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர் |
|
5 |
தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட, |
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள் |
|
கணவன் எழுதலும் அஞ்சி, கலையே |
|
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும், |
|
இல் வழங்காமையின், கல்லென ஒலித்து, |
|
10 |
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி |
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென, |
|
ஆர நெருப்பின், ஆரல் நாற, |
|
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் |
|
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி, |
|
15 |
தங்கினை சென்மோ, பாண! தங்காது, |
வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும் |
|
அருகாது ஈயும் வண்மை |
|
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வீரை வெளியனார் பாடியது.
|
321 |
பொறிப் புறப் பூழின் போர் வல் சேவல் |
|
மேந் தோல் களைந்த தீம் கோள் வெள் எள் |
|
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு, உடன் |
|
வேனில் கோங்கின் பூம் பொகுட்டு அன்ன |
|
5 |
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட, |
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும், |
|
வன் புல வைப்பினதுவே சென்று |
|
தின் பழம் பசீஇ ..........னனோ, பாண! |
|
வாள் வடு விளங்கிய சென்னிச் |
|
10 |
செரு வெங் குருசில் ஓம்பும் ஊரே. |
திணையும் துறையும் அவை.
| |
உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
|
322 |
உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன |
|
கவை முள் கள்ளிப் பொரி அரைப் பொருந்தி, |
|
புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் |
|
புன் தலைச் சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின், |
|
5 |
பெருங் கண் குறு முயல் கருங் கலன் உடைய |
மன்றில் பாயும் வன் புலத்ததுவே |
|
கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது. |
|
இருஞ் சுவல் வாளை பிறழும் ஆங்கண், |
|
தண் பணை ஆளும் வேந்தர்க்குக் |
|
10 |
கண் படை ஈயா வேலோன் ஊரே. |
திணையும் துறையும் அவை.
| |
ஆவூர் கிழார் பாடியது.
|
324 |
வெருக்கு விடை அன்ன வெகுள் நோக்குக் கயந் தலை, |
|
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய், |
|
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர் |
|
சிறியிலை உடையின் சுரையுடை வால் முள் |
|
5 |
ஊக நுண் கோல் செறித்த அம்பின், |
வலாஅர் வல்வில் குலாவரக் கோலி, |
|
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் |
|
புன் புலம் தழீஇய அம் குடிச் சீறூர், |
|
குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த |
|
10 |
வெண் காழ் தாய வண் கால் பந்தர், |
இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்து, |
|
பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை |
|
வலம் படு தானை வேந்தர்க்கு |
|
உலந்துழி உலக்கும் நெஞ்சு அறி துணையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆலத்தூர் கிழார் பாடியது.
|
325 |
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின், |
|
வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தென, |
|
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின், |
|
சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல் |
|
5 |
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை, |
முளவு மாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர் |
|
உடும்பு இழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச் |
|
சீறில் முன்றில் கூறுசெய்திடுமார், |
|
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம் |
|
10 |
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து, |
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல், |
|
கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும் |
|
அரு மிளை இருக்கையதுவே வென் வேல் |
|
வேந்து தலைவரினும் தாங்கும், |
|
15 |
தாங்கா ஈகை, நெடுந்தகை ஊரே. |
திணையும் துறையும் அவை.
| |
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
|
326 |
ஊர் முது வேலிப் பார் நடை வெருகின் |
|
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை |
|
உயிர் நடுக்குற்றுப் புலா விட்டு அரற்ற, |
|
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த |
|
5 |
பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்து, |
கவிர்ப் பூ நெற்றிச் சேவலின் தணியும் |
|
அரு மிளை இருக்கையதுவே மனைவியும், |
|
வேட்டச் சிறாஅர் சேண் புலம் படராது, |
|
படப்பைக் கொண்ட குறுந் தாள் உடும்பின் |
|
10 |
விழுக்கு நிணம் பெய்த தயிர்க் கண் விதவை, |
யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு |
|
வரு விருந்து அயரும் விருப்பினள்; கிழவனும், |
|
அருஞ் சமம் ததையத் தாக்கி, பெருஞ் சமத்து |
|
அண்ணல் யானை அணிந்த |
|
15 |
பொன் செய் ஓடைப் பெரும் பரிசிலனே. |
திணை வாகை; துறை மூதில் முல்லை.
| |
தங்கால் பொற்கொல்லனார் பாடியது.
|
327 |
எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற |
|
சில் விளை வரகின் புல்லென் குப்பை, |
|
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் |
|
பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின், |
|
5 |
ஒக்கல் ஒற்கம் சொலிய, தன் ஊர்ச் |
சிறு புல்லாளர் முகத்து அவை கூறி, |
|
வரகு கடன் இரக்கும் நெடுந் தகை |
|
அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
..............................................................
|
328 |
..........டை முதல் புறவு சேர்ந்திருந்த |
|
புன் புலச் சீறூர், நெல் விளையாதே; |
|
வரகும் தினையும் உள்ளவை எல்லாம் |
|
இரவல் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன; |
|
5 |
................. டு அமைந்தனனே; |
அன்னன் ஆயினும், பாண! நன்றும் |
|
வெள்ளத்திடும் பாலுள் உறை தொட.... |
|
களவுப் புளி அன்ன விளை.... |
|
..............வாடு ஊன் கொழுங் குறை |
|
10 |
கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு, |
துடுப்பொடு சிவணிய களிக் கொள் வெண் சோறு |
|
உண்டு, இனிது இருந்த பின் |
|
... ... ... ... .... ... தருகுவன் மாதோ |
|
தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை |
|
15 |
முயல் வந்து கறிக்கும் முன்றில், |
சீறூர் மன்னனைப் பாடினை செலினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பங்கு ............................. பாடியது.
|
329 |
இல் அடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப் |
|
புடை நடு கல்லின் நாட் பலி ஊட்டி, |
|
நல் நீராட்டி, நெய்ந் நறைக் கொளீஇய, |
|
மங்குல் மாப் புகை மறுகுடன் கமழும், |
|
5 |
அரு முனை இருக்கைத்துஆயினும், வரி மிடற்று |
அரவு உறை புற்றத்து அற்றே நாளும் |
|
புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு |
|
அருகாது ஈயும் வண்மை, |
|
உரைசால், நெடுந்தகை ஓம்பும் ஊரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது.
|
330 |
வேந்துடைத் தானை முனை கெட நெரிதர, |
|
ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி, |
|
தன் இறந்து வாராமை விலக்கலின், பெருங் கடற்கு |
|
ஆழி அனையன்மாதோ என்றும் |
|
5 |
பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப் |
புரவிற்கு ஆற்றாச் சீறூர்த் |
|
தொன்மை சுட்டிய வண்மையோனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைக் கணக்காயனார் பாடியது.
|
331 |
கல் அறுத்து இயற்றிய வல் உவர்க் கூவல், |
|
வில் ஏர் வாழ்க்கை, சீறூர் மதவலி |
|
நனி நல்கூர்ந்தனன்ஆயினும், பனி மிக, |
|
புல்லென் மாலைச் சிறு தீ ஞெலியும் |
|
5 |
கல்லா இடையன் போல, குறிப்பின் |
இல்லது படைக்கவும் வல்லன்; உள்ளது |
|
தவச் சிறிது ஆயினும் மிகப் பலர் என்னாள், |
|
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும் |
|
இல் பொலி மகடூஉப் போல, சிற் சில |
|
10 |
வரிசையின் அளிக்கவும் வல்லன்; உரிதினின் |
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும் |
|
போகு பலி வெண் சோறு போலத் |
|
தூவவும் வல்லன், அவன் தூவுங்காலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
உறையூர் முது கூத்தனார் பாடியது.
|
332 |
பிறர் வேல் போலாதாகி, இவ் ஊர் |
|
மறவன் வேலோ பெருந் தகை உடைத்தே; |
|
இரும் புறம் நீறும் ஆடி, கலந்து இடைக் |
|
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்; |
|
5 |
மங்கல மகளிரொடு மாலை சூட்டி, |
இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப, |
|
தெண் நீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து, |
|
மண் முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு, |
|
இருங் கடல் தானை வேந்தர் |
|
10 |
பெருங் களிற்று முகத்தினும் செலவு ஆனாதே. |
திணையும் துறையும் அவை.
| |
விரியூர் நக்கனார் பாடியது.
|
333 |
நீருள் பட்ட மாரிப் பேர் உறை |
|
மொக்குள் அன்ன பொகுட்டு விழிக் கண்ண, |
|
கரும் பிடர்த் தலைய, பெருஞ் செவிக் குறு முயல் |
|
உள் ஊர்க் குறும் புதல் துள்ளுவன உகளும் |
|
5 |
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின், |
'உண்க' என உணரா உயவிற்று ஆயினும், |
|
தங்கினிர் சென்மோ, புலவிர்! நன்றும்; |
|
சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி, |
|
வரகும் தினையும் உள்ளவை எல்லாம் |
|
10 |
இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென, |
குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின், |
|
குரல் உணங்கு விதைத் தினை உரல் வாய்ப் பெய்து, |
|
சிறிது புறப்பட்டன்றோ இலளே; தன் ஊர் |
|
வேட்டக் குடிதொறும் கூட்டு |
|
15 |
.............................................. உடும்பு செய் |
பாணி நெடுந் தேர் வல்லரோடு ஊரா, |
|
வம்பு அணி யானை வேந்து தலைவரினும், |
|
உண்பது மன்னும் அதுவே; |
|
பரிசில் மன்னும், குருசில் கொண்டதுவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
.................................................................
|
334 |
காமரு பழனக் கண்பின் அன்ன |
|
தூ மயிர்க் குறுந் தாள் நெடுஞ் செவிக் குறு முயல், |
|
புன் தலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின், |
|
படப்பு ஒடுங்கும்மே ........... பின்பு |
|
5 |
..................... ன் ஊரே மனையோள் |
பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும், |
|
ஊண் ஒலி அரவமொடு கைதூவாளே; |
|
உயர் மருப்பு யானைப் புகர் முகத்து அணிந்த |
|
பொலம் .............................. ப் |
|
10 |
பரிசில் பரிசிலர்க்கு ஈய, |
உரவு வேல் காளையும் கை தூவானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைத் தமிழக் கூத்தனார் பாடியது.
|
335 |
அடல் அருந் துப்பின்.................... |
|
...................குருந்தே முல்லை என்று |
|
இந் நான்கு அல்லது பூவும் இல்லை; |
|
கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே, |
|
5 |
சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு, |
இந் நான்கு அல்லது உணாவும் இல்லை; |
|
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று |
|
இந் நான்கு அல்லது குடியும் இல்லை; |
|
ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி, |
|
10 |
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென, |
கல்லே பரவின் அல்லது, |
|
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மாங்குடி கிழார் பாடியது.
|
368 |
களிறு முகந்து பெயர்குவம் எனினே, |
|
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல, |
|
கைம்மா எல்லாம் கணை இடத் தொலைந்தன; |
|
கொடுஞ்சி நெடுந் தேர் முகக்குவம் எனினே; |
|
5 |
கடும் பரி நல் மான் வாங்குவயின் ஒல்கி, |
நெடும் பீடு அழிந்து, நிலம் சேர்ந்தனவே; |
|
கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே, |
|
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிதாகி, |
|
வளி வழக்கு அறுத்த வங்கம் போல, |
|
10 |
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே; ஆங்க |
முகவை இன்மையின் உகவை இன்றி, |
|
இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து, |
|
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ! |
|
கடாஅ யானைக் கால்வழி அன்ன என் |
|
15 |
தெடாரித் தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி, |
பாடி வந்தது எல்லாம், கோடியர் |
|
முழவு மருள் திரு மணி மிடைந்த நின் |
|
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே. |
|
திணை வாகை; துறை மறக்களவழி.
| |
சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் சோழன் வேற் பல் தடக் கைப் பெரு நற்கிள்ளியொடு போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்து, ஆரம் கழுத்தன்னதாக உயிர் போகாது கிடந்தானைக் கழாத்தலையார் பாடியது.
|
369 |
இருப்பு முகஞ் செறித்த ஏந்து எழில் மருப்பின், |
|
கருங் கை யானை கொண்மூ ஆக, |
|
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த |
|
வாள் மின் ஆக, வயங்கு கடிப்பு அமைந்த |
|
5 |
குருதிப் பலிய முரசு முழக்கு ஆக, |
அரசு அராப் பனிக்கும் அணங்கு உறு பொழுதின், |
|
வெவ் விசைப் புரவி வீசு வளி ஆக, |
|
விசைப்புறு வல் வில் வீங்கு நாண் உகைத்த |
|
கணைத் துளி பொழிந்த கண் அகன் கிடக்கை. |
|
10 |
ஈரச் செறுவயின் தேர் ஏர் ஆக, |
விடியல் புக்கு, நெடிய நீட்டி, நின் |
|
செருப் படை மிளிர்ந்த திருத்துறு பைஞ் சால், |
|
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி, |
|
விழுத் தலை சாய்த்த வெருவரு பைங் கூழ், |
|
15 |
பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு, |
கண நரியோடு கழுது களம் படுப்ப, |
|
பூதம் காப்ப, பொலிகளம் தழீஇ, |
|
பாடுநர்க்கு இருந்த பீடுடையாள! |
|
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி |
|
20 |
வேய்வை காணா விருந்தின் போர்வை |
அரிக் குரல் தடாரி உருப்ப ஒற்றி, |
|
பாடி வந்திசின்; பெரும! பாடு ஆன்று |
|
எழிலி தோயும் இமிழ் இசை அருவி, |
|
பொன்னுடை நெடுங் கோட்டு, இமையத்து அன்ன |
|
25 |
ஓடை நுதல, ஒல்குதல் அறியா, |
துடி அடிக் குழவிய பிடி இடை மிடைந்த |
|
வேழ முகவை நல்குமதி |
|
தாழா ஈகைத் தகை வெய்யோயே! |
|
திணையும் துறையும் அவை; துறை ஏர்க்கள உருவகமும் ஆம்.
| |
சேரமான் கடல் ஓட்டிய வெல் கெழு குட்டுவனைப் பரணர் பாடியது.
|
370 |
...............................................................................................................ளி, |
|
நாரும் போழும் செய்து உண்டு, ஒராங்குப் |
|
பசி தினத் திரங்கிய இரு பேர் ஒக்கற்கு |
|
ஆர் பதம் கண்ணென மாதிரம் துழைஇ, |
|
5 |
வேர் உழந்து உலறி, மருங்கு செத்து ஒழிய வந்து, |
அத்தக் குடிஞைத் துடி மருள் தீம் குரல், |
|
உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த பருந்தின் |
|
பெடை பயிர் குரலோடு, இசைக்கும் ஆங்கண், |
|
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை, |
|
10 |
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட, |
பழுமரம் உள்ளிய பறவை போல, |
|
ஒண் படை மாரி வீழ் கனி பெய்தென, |
|
துவைத்து எழு குருதி நிலமிசைப் பரப்ப, |
|
விளைந்த செழுங் குரல் அரிந்து, கால் குவித்து, |
|
15 |
படு பிணப் பல் போர்பு அழிய வாங்கி, |
எருது களிறு ஆக, வாள் மடல் ஓச்சி, |
|
அதரி திரித்த ஆள் உகு கடாவின், |
|
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி, |
|
'வெந் திறல் வியன் களம் பொலிக!' என்று ஏத்தி, |
|
20 |
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின் |
வரை மருள் முகவைக்கு வந்தனென்; பெரும! |
|
வடி நவில் எஃகம் பாய்ந்தென, கிடந்த |
|
தொடியுடைத் தடக் கை ஓச்சி, வெருவார் |
|
இனத் தடி விராய வரிக் குடர் அடைச்சி, |
|
25 |
அழு குரல் பேய்மகள் அயர, கழுகொடு |
செஞ் செவி எருவை திரிதரும், |
|
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் செருப்பாழி எறிந்த இளந்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
|
371 |
அகன் தலை வையத்துப் புரவலர்க் காணாது, |
|
மரந்தலைச் சேர்ந்து, பட்டினி வைகி, |
|
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து, |
|
தயங்கு இரும் பித்தை பொலியச் சூடி, |
|
5 |
பறையொடு தகைத்த கலப் பையென், முரவு வாய் |
ஆடுறு குழிசி பாடு இன்று தூக்கி, |
|
மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப, |
|
குறை செயல் வேண்டா நசைய இருக்கையேன், |
|
அரிசி இன்மையின் ஆர் இடை நீந்தி, |
|
10 |
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப, |
வரு கணை வாளி....... அன்பு இன்று தலைஇ, |
|
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை, |
|
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி, |
|
குறைத் தலைப் படு பிணன் எதிர, போர்பு அழித்து, |
|
15 |
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி |
அதரி திரித்த ஆள் உகு கடாவின், |
|
மதியத்து அன்ன என் விசி உறு தடாரி |
|
அகன் கண் அதிர, ஆகுளி தொடாலின், |
|
பணை மருள் நெடுந் தாள், பல் பிணர்த் தடக் கை, |
|
20 |
புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும! |
களிற்றுக் கோட்டன்ன வால் எயிறு அழுத்தி, |
|
விழுக்கொடு விரைஇய வெண் நிணச் சுவையினள், |
|
குடர்த் தலை மாலை சூடி, 'உணத் தின |
|
ஆனாப் பெரு வளம் செய்தோன் வானத்து |
|
25 |
வயங்கு பல் மீனினும் வாழியர், பல' என, |
உரு கெழு பேய்மகள் அயர, |
|
குருதித் துகள் ஆடிய களம் கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.
|
372 |
விசி பிணித் தடாரி விம்மென ஒற்றி, |
|
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த |
|
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி, |
|
கணைத் துளி பொழிந்த கண்கூடு பாசறை, |
|
5 |
பொருந்தாத் தெவ்வர் அரிந்த தலை அடுப்பின், |
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல், |
|
ஆனா மண்டை வன்னிஅம் துடுப்பின், |
|
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட |
|
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த, |
|
10 |
'வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் |
வெவ் வாய்ப் பெய்த பூத நீர் சால்க' எனப் |
|
புலவுக் களம் பொலிய வேட்டோய்! நின் |
|
நிலவுத் திகழ் ஆரம் முகக்குவம் எனவே. |
|
திணை வாகை; துறை மறக்கள வேள்வி.
| |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
|
373 |
உருமிசை முழக்கு என முரசம் இசைப்ப, |
|
செரு நவில் வேழம் கொண்மூ ஆக, |
|
தேர் மா அழி துளி தலைஇ, நாம் உறக் |
|
கணைக் காற்று எடுத்த கண் அகன் பாசறை, |
|
5 |
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் |
பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப, |
|
மைந்தர் ஆடிய மயங்கு பெருந் தானை, |
|
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே! |
|
................................................தண்ட மாப் பொறி. |
|
10 |
மடக் கண் மயில் இயல் மறலியாங்கு, |
நெடுஞ் சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து, |
|
மென் தோள் மகளிர் மன்றம் பேணார், |
|
புண்ணுவ |
|
..........................அணியப் புரவி வாழ்க என, |
|
15 |
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர, |
நுண் பூண் மார்பின் புன் தலைச் சிறாஅர் |
|
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா, |
|
........................................................ற் றொக்கான |
|
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை, |
|
20 |
மாடம் மயங்கு எரி மண்டி, கோடு இறுபு, |
உரும் எறி மலையின், இரு நிலம் சேர, |
|
சென்றோன் மன்ற, சொெ |
|
........................ ண்ணறிநர் கண்டு கண் அலைப்ப, |
|
வஞ்சி முற்றம் வயக் களன் ஆக, |
|
25 |
அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக் |
கொண்டனை, பெரும! குட புலத்து அதரி; |
|
பொலிக அத்தை, நின் பணைதனற............ளம்! |
|
விளங்கு திணை வேந்தர் களம்தொறும் சென்று, |
|
''புகர்முக முகவை பொலிக!'' என்று ஏத்தி, |
|
30 |
கொண்டனர்' என்ப, பெரியோர்; யானும் |
அம் கண் மாக் கிணை அதிர ஒற்ற, |
|
............... லென்ஆயினும், காதலின் ஏத்தி, |
|
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின், |
|
மன் எயில் முகவைக்கு வந்திசின், பெரும! |
|
35 |
பகைவர் புகழ்ந்த ஆண்மை, நகைவர்க்குத் |
தா இன்று உதவும் பண்பின், பேயொடு |
|
கண நரி திரிதரூஉம் ஆங்கண், நிணன் அருந்து |
|
செஞ் செவி எருவை குழீஇ, |
|
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! |
|
40 |
திணை அது; துறை மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம். |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் எறிந்தானைக் கோவூர்
| |
கிழார் பாடியது.
|