முகப்பு | ![]() |
வெட்சி |
257 |
செருப்பு இடைச் சிறு பரல் அன்னன்; கணைக் கால், |
|
அவ் வயிற்று, அகன்ற மார்பின், பைங் கண், |
|
குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய், |
|
செவி இறந்து தாழ்தரும் கவுளன், வில்லொடு, |
|
5 |
யார்கொலோ, அளியன்தானே? தேரின் |
ஊர் பெரிது இகந்தன்றும் இலனே; அரண் எனக் |
|
காடு கைக் கொண்டன்றும், இலனே; காலை, |
|
புல்லார் இன நிரை செல் புறம் நோக்கி, |
|
கையின் சுட்டிப் பையென எண்ணி, |
|
10 |
சிலையின் மாற்றியோனே; அவைதாம் |
மிகப் பலவாயினும், என் ஆம் எனைத்தும் |
|
வெண் கோள் தோன்றாக் குழிசியொடு, |
|
நாள் உறை மத்து ஒலி கேளாதோனே? |
|
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
| |
.............................................................................
|
258 |
முள் கால் காரை முது பழன் ஏய்ப்பத் |
|
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம் |
|
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு, |
|
பச்சூன் தின்று, பைந் நிணம் பெருத்த |
|
5 |
எச்சில் ஈர்ங் கை வில்புறம் திமிரி, |
புலம் புக்கனனே, புல் அணல் காளை; |
|
ஒரு முறை உண்ணாஅளவை, பெரு நிரை |
|
ஊர்ப் புறம் நிறையத் தருகுவன்; யார்க்கும் |
|
தொடுதல் ஓம்புமதி, முது கள் சாடி; |
|
10 |
ஆ தரக் கழுமிய துகளன், |
காய்தலும் உண்டு, அக் கள் வெய்யோனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
......................உலோச்சனார் பாடியது.
|
262 |
நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; |
|
பாசுவல் இட்ட புன் கால் பந்தர்ப் |
|
புனல் தரும் இள மணல் நிறையப் பெய்ம்மின் |
|
ஒன்னார் முன்னிலை முருக்கி, பின் நின்று, |
|
5 |
நிரையொடு வரூஉம் என்னைக்கு |
உழையோர் தன்னினும் பெருஞ் சாயலரே. |
|
திணை வெட்சி; துறை உண்டாட்டு; தலைத்தோற்றமும் ஆம்.
| |
....................மதுரைப் பேராலவாயார் பாடியது.
|
269 |
குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் |
|
பயிலாது அல்கிய பல் காழ் மாலை |
|
மை இரும் பித்தை பொலியச் சூட்டி, |
|
புத்தகல் கொண்ட புலிக் கண் வெப்பர் |
|
5 |
ஒன்று இரு முறை இருந்து உண்ட பின்றை, |
உவலைக் கண்ணித் துடியன் வந்தென, |
|
பிழி மகிழ் வல்சி வேண்ட, மற்று இது |
|
கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்தி; |
|
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவில் |
|
10 |
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர், |
கொடுஞ் சிறைக் குரூஉப் பருந்து ஆர்ப்ப, |
|
தடிந்து மாறு பெயர்த்தது, இக் கருங் கை வாளே. |
|
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
| |
ஒளவையார் பாடியது.
|
297 |
பெரு நீர் மேவல் தண்ணடை எருமை |
|
இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின் |
|
பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணை, |
|
கன்றுடை மரை ஆத் துஞ்சும் சீறூர்க் |
|
5 |
கோள் இவண் வேண்டேம், புரவே; நார் அரி |
நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தி, |
|
துறை நனி கெழீஇக் கம்புள் ஈனும் |
|
தண்ணடை பெறுதலும் உரித்தே வைந் நுதி |
|
நெடு வேல் பாய்ந்த மார்பின், |
|
10 |
மடல் வன் போந்தையின், நிற்குமோர்க்கே. |
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
| |
...........................................................................
|