முகப்பு | தொடக்கம் |
தென்னை (தெங்கு, தாழை) |
17 |
தென் குமரி, வட பெருங்கல், |
|
குண குட கடலா எல்லை, |
|
குன்று, மலை, காடு, நாடு, |
|
ஒன்று பட்டு வழிமொழிய, |
|
5 |
கொடிது கடிந்து, கோல் திருத்தி, |
படுவது உண்டு, பகல் ஆற்றி, |
|
இனிது உருண்ட சுடர் நேமி |
|
முழுது ஆண்டோர் வழி காவல! |
|
குலை இறைஞ்சிய கோள் தாழை |
|
10 |
அகல் வயல், மலை வேலி, |
நிலவு மணல் வியன் கானல், |
|
தெண் கழிமிசைத் தீப் பூவின், |
|
தண் தொண்டியோர் அடு பொருந! |
|
மாப் பயம்பின் பொறை போற்றாது, |
|
15 |
நீடு குழி அகப்பட்ட |
பீடு உடைய எறுழ் முன்பின், |
|
கோடு முற்றிய கொல் களிறு |
|
நிலை கலங்கக் குழி கொன்று, |
|
கிளை புகலத் தலைக்கூடியாங்கு |
|
20 |
நீ பட்ட அரு முன்பின் |
பெருந் தளர்ச்சி, பலர் உவப்ப, |
|
பிறிது சென்று, மலர் தாயத்துப் |
|
பலர் நாப்பண் மீக்கூறலின், |
|
'உண்டாகிய உயர் மண்ணும், |
|
25 |
சென்று பட்ட விழுக் கலனும், |
பெறல் கூடும், இவன் நெஞ்சு உறப் பெறின்' எனவும், |
|
'ஏந்து கொடி இறைப்புரிசை, |
|
வீங்கு சிறை, வியல்அருப்பம், |
|
இழந்து வைகுதும், இனி நாம் இவன் |
|
30 |
உடன்று நோக்கினன், பெரிது' எனவும், |
வேற்று அரசு பணி தொடங்கு நின் |
|
ஆற்றலொடு புகழ் ஏத்தி, |
|
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய |
|
மழை என மருளும் பல் தோல், மலை எனத் |
|
35 |
தேன் இறை கொள்ளும் இரும் பல் யானை, |
உடலுநர் உட்க வீங்கி, கடல் என |
|
வான் நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது |
|
கடு ஒடுங்கு எயிற்ற அரவுத் தலை பனிப்ப, |
|
இடி என முழங்கும் முரசின், |
|
40 |
வரையா ஈகைக் குடவர் கோவே! |
திணை வாகை; துறை அரச வாகை; இயன்மொழியும் ஆம்.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதின் போய்க் கட்டில் எய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.
|
29 |
அழல் புரிந்த அடர் தாமரை |
|
ஐது அடர்ந்த நூல் பெய்து, |
|
புனை வினைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல் |
|
பாறு மயிர் இருந் தலை பொலியச் சூடி, |
|
5 |
பாண் முற்றுக, நின் நாள் மகிழ் இருக்கை! |
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர் |
|
தோள் முற்றுக, நின் சாந்து புலர் அகலம்! ஆங்க |
|
முனிவு இல் முற்றத்து, இனிது முரசு இயம்ப, |
|
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்கு அளித்தலும், |
|
10 |
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி, |
'நல்லதன் நலனும் தீயதன் தீமையும் |
|
இல்லை' என்போர்க்கு இனன் ஆகிலியர்! |
|
நெல் விளை கழனிப் படு புள் ஓப்புநர் |
|
ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு, |
|
15 |
வெங் கள் தொலைச்சியும், அமையார், தெங்கின் |
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு |
|
பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள் |
|
பற்றா மாக்களின் பரிவு முந்துறுத்து, |
|
கூவை துற்ற நாற் கால் பந்தர்ச் |
|
20 |
சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு |
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை |
|
ஊழிற்றாக, நின் செய்கை! விழவில் |
|
கோடியர் நீர்மை போல முறைமுறை |
|
ஆடுநர் கழியும் இவ் உலகத்து, கூடிய |
|
25 |
நகைப்புறன் ஆக, நின் சுற்றம்! |
இசைப்புறன் ஆக, நீ ஓம்பிய பொருளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
61 |
கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர் |
|
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும், |
|
மலங்கு மிளிர், செறுவின் தளம்பு தடிந்து இட்ட |
|
பழன வாளைப் பரூஉக் கண் துணியல் |
|
5 |
புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக, |
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி, |
|
நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும் |
|
வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர் |
|
தெங்கு படு வியன் பழம் முனையின், தந்தையர் |
|
10 |
குறைக்கண் நெடும் போர் ஏறி, விசைத்து எழுந்து |
செழுங் கோள் பெண்ணைப் பழம் தொட முயலும், |
|
வைகல் யாணர், நல் நாட்டுப் பொருநன், |
|
எஃகு விளங்கு தடக் கை இயல் தேர்ச் சென்னி, |
|
சிலைத் தார் அகலம் மலைக்குநர் உளர்எனின், |
|
15 |
தாம் அறிகுவர் தமக்கு உறுதி; யாம் அவன் |
எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர் |
|
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது, |
|
திருந்து அடி பொருந்த வல்லோர் |
|
வருந்தக் காண்டல், அதனினும் இலமே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|