| முகப்பு | தொடக்கம் | 
நாவல்  | 
 177  | 
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர்,  | 
|
வெளிறு கண் போகப் பல் நாள் திரங்கி,  | 
|
பாடிப் பெற்ற பொன் அணி யானை,  | 
|
தமர்எனின், யாவரும் புகுப; அமர் எனின்,  | 
|
5  | 
திங்களும் நுழையா எந்திரப் படு புழை,  | 
கள் மாறு நீட்ட நணி நணி இருந்த  | 
|
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி,  | 
|
புளிச் சுவை வேட்ட செங் கண் ஆடவர்  | 
|
தீம் புளிக் களாவொடு துடரி முனையின்,  | 
|
10  | 
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி,  | 
கருங் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும்,  | 
|
பெரும் பெயர் ஆதி, பிணங்குஅரில் குட நாட்டு,  | 
|
எயினர் தந்த எய்ம் மான் எறி தசைப்  | 
|
பைஞ் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை,  | 
|
15  | 
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய,  | 
இரும் பனங் குடையின் மிசையும்  | 
|
பெரும் புலர் வைகறைச் சீர் சாலாதே.  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
மல்லிகிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார் பாடியது.
  |