முகப்பு | தொடக்கம் |
புன்னை |
24 |
நெல் அரியும் இருந் தொழுவர் |
|
செஞ் ஞாயிற்று வெயில் முனையின், |
|
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து; |
|
திண் திமில் வன் பரதவர் |
|
5 |
வெப்பு உடைய மட்டு உண்டு, |
தண் குரவைச் சீர் தூங்குந்து; |
|
தூவல் கலித்த தேம் பாய் புன்னை |
|
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் |
|
எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து; |
|
10 |
வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல் |
முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர் |
|
இரும் பனையின் குரும்பை நீரும், |
|
பூங் கரும்பின் தீம் சாறும், |
|
ஓங்கு மணல் குவவுத் தாழைத் |
|
15 |
தீம் நீரொடு உடன் விராஅய், |
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்; |
|
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய |
|
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி |
|
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக் |
|
20 |
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும், |
பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர், |
|
குப்பை நெல்லின், முத்தூறு தந்த |
|
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! |
|
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது |
|
25 |
படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே |
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு |
|
நின்று மூத்த யாக்கை அன்ன, நின் |
|
ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த |
|
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த, |
|
30 |
இரவல் மாக்கள் ஈகை நுவல, |
ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய |
|
தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து, |
|
ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது |
|
வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப தொல் இசை, |
|
35 |
மலர் தலை உலகத்துத் தோன்றி, |
பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
|
386 |
நெடு நீர நிறை கயத்துப் |
|
படு மாரித் துளி போல, |
|
நெய் துள்ளிய வறை முகக்கவும், |
|
சூடு கிழித்து வாடுஊன் மிசையவும், |
|
5 |
ஊன் கொண்ட வெண் மண்டை |
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும், |
|
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது, |
|
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை |
|
ஈத்தோன், எந்தை, இசை தனது ஆக; |
|
10 |
வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின் |
பாத்திப் பன் மலர்ப் பூத் ததும்பின; |
|
புறவே, புல் அருந்து பல் ஆயத்தான், |
|
வில் இருந்த வெங் குறும்பின்று; |
|
கடலே, கால் தந்த கலன் எண்ணுவோர் |
|
15 |
கானல் புன்னைச் சினை நிலைக்குந்து; |
கழியே, சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி, |
|
பெருங் கல் நல் நாட்டு உமண் ஒலிக்குந்து; |
|
அன்ன நல் நாட்டுப் பொருநம், யாமே; |
|
பொராஅப் பொருநரேம்; |
|
20 |
குண திசை நின்று குடமுதல் செலினும், |
குட திசை நின்று குணமுதல் செலினும், |
|
வட திசை நின்று தென்வயின் செலினும், |
|
தென் திசை நின்று குறுகாது நீடினும், |
|
யாண்டும் நிற்க, வெள்ளி; யாம் |
|
25 |
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே! |
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
391 |
தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும் |
|
விண்டு அனைய விண் தோய் பிறங்கல் |
|
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ் வரப் |
|
பகடு தரு பெரு வளம் வாழ்த்தி, பெற்ற |
|
5 |
திருந்தா மூரி பரந்து படக் கெண்டி, |
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் |
|
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்தென, |
|
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் |
|
தீர்கை விடுக்கும் பண்பு இல முதுகுடி |
|
10 |
நன...............................................வினவலின், |
'முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும் |
|
அளியன் ஆகலின், பொருநன் இவன்' என, |
|
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற, |
|
காண்கு வந்திசின், பெரும!........................... |
|
15 |
..........பெருங் கழி நுழைமீன் அருந்தும் |
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும் |
|
ததைந்த புனல் நின் செழு நகர் வரைப்பின், |
|
நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு, |
|
இன் துயி........................... ஞ்சால் |
|
20 |
துளி பதன் அறிந்து பொழிய, |
வேலி ஆயிரம் விளைக, நின் வயலே! |
|
திணை அது; துறை கடைநிலை.
| |
பொறையாற்று கிழானைக் கல்லாடனார் பாடியது.
|