முகப்பு | தொடக்கம் |
வாழை |
168 |
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக் |
|
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் |
|
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு, |
|
கடுங் கண் கேழல் உழுத பூழி, |
|
5 |
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர் |
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை |
|
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் |
|
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால், |
|
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி |
|
10 |
வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி, |
சாந்த விறகின் உவித்த புன்கம் |
|
கூதளம் கவினிய குளவி முன்றில், |
|
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும் |
|
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல், |
|
15 |
நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி, |
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும! |
|
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற! |
|
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப, |
|
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப் |
|
20 |
பாடுப என்ப பரிசிலர், நாளும் |
ஈயா மன்னர் நாண, |
|
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே. |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
| |
பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.
|
237 |
'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி, |
|
பாடி நின்ற பசி நாட்கண்ணே, |
|
'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி, |
|
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல் |
|
5 |
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என |
நச்சி இருந்த நசை பழுதாக, |
|
அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு, |
|
'அளியர்தாமே ஆர்க' என்னா |
|
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய, |
|
10 |
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் |
வாழைப் பூவின் வளை முறி சிதற, |
|
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க, |
|
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, |
|
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே: |
|
15 |
ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப் |
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின், |
|
எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக் |
|
கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று, |
|
நனியுடைப் பரிசில் தருகம், |
|
20 |
எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே. |
திணையும் துறையும் அவை.
| |
வெளிமானுழைச் சென்றார்க்கு, அவன் துஞ்ச, இள வெளிமான் சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
|