முகப்பு | தொடக்கம் |
வேம்பு |
45 |
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்; |
|
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்; |
|
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு |
|
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; |
|
5 |
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; |
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், |
|
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர் |
|
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு |
|
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே. |
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
| |
சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.
|
76 |
ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும், |
|
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை; |
|
இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை |
|
மன்ற வேம்பின் மாச் சினை ஒண் தளிர் |
|
5 |
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து, |
செறியத் தொடுத்த தேம் பாய் கண்ணி, |
|
ஒலியல் மாலையொடு, பொலியச் சூடி, |
|
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்தக, |
|
நாடு கெழு திருவின், பசும் பூண், செழியன் |
|
10 |
பீடும் செம்மலும் அறியார் கூடி, |
'பொருதும்' என்று தன்தலை வந்த |
|
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க, |
|
ஒரு தான் ஆகிப் பொருது, களத்து அடலே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை இடைக் குன்றூர் கிழார் பாடியது.
|
77 |
கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு, |
|
குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர் |
|
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து, |
|
குறுந் தொடி கழித்த கைச் சாபம் பற்றி, |
|
5 |
நெடுந் தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன் |
யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார் பூண்டு, |
|
தாலி களைந்தன்றும் இலனே; பால் விட்டு |
|
அயினியும் இன்று அயின்றனனே; வயின்வயின் |
|
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை |
|
10 |
வியந்தன்றும், இழிந்தன்றும், இலனே; அவரை |
அழுந்தப் பற்றி, அகல் விசும்பு ஆர்ப்பு எழ, |
|
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை |
|
மகிழ்ந்தன்றும், மலிந்தன்றும், அதனினும் இலனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
79 |
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி, |
|
மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து, |
|
தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி, |
|
வெம் போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த |
|
5 |
வம்ப மள்ளரோ பலரே; |
எஞ்சுவர் கொல்லோ, பகல் தவச் சிறிதே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
281 |
தீம் கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ, |
|
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க, |
|
கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி, |
|
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி, |
|
5 |
இசை மணி எறிந்து, காஞ்சி பாடி, |
நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ, |
|
காக்கம் வம்மோ காதலம் தோழி! |
|
வேந்துறு விழுமம் தாங்கிய |
|
பூம் பொறிக் கழல் கால் நெடுந்தகை புண்ணே. |
|
திணை காஞ்சி; துறை பேய்க்காஞ்சி.
| |
அரிசில் கிழார் பாடியது.
|
296 |
வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும், |
|
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும், |
|
எல்லா மனையும் கல்லென்றவ்வே; |
|
வேந்து உடன்று எறிவான்கொல்லோ |
|
5 |
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே? |
திணை வாகை; துறை ஏறாண் முல்லை.
| |
வெள்ளைமாளர் பாடியது.
|
371 |
அகன் தலை வையத்துப் புரவலர்க் காணாது, |
|
மரந்தலைச் சேர்ந்து, பட்டினி வைகி, |
|
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து, |
|
தயங்கு இரும் பித்தை பொலியச் சூடி, |
|
5 |
பறையொடு தகைத்த கலப் பையென், முரவு வாய் |
ஆடுறு குழிசி பாடு இன்று தூக்கி, |
|
மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப, |
|
குறை செயல் வேண்டா நசைய இருக்கையேன், |
|
அரிசி இன்மையின் ஆர் இடை நீந்தி, |
|
10 |
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப, |
வரு கணை வாளி....... அன்பு இன்று தலைஇ, |
|
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை, |
|
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி, |
|
குறைத் தலைப் படு பிணன் எதிர, போர்பு அழித்து, |
|
15 |
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி |
அதரி திரித்த ஆள் உகு கடாவின், |
|
மதியத்து அன்ன என் விசி உறு தடாரி |
|
அகன் கண் அதிர, ஆகுளி தொடாலின், |
|
பணை மருள் நெடுந் தாள், பல் பிணர்த் தடக் கை, |
|
20 |
புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும! |
களிற்றுக் கோட்டன்ன வால் எயிறு அழுத்தி, |
|
விழுக்கொடு விரைஇய வெண் நிணச் சுவையினள், |
|
குடர்த் தலை மாலை சூடி, 'உணத் தின |
|
ஆனாப் பெரு வளம் செய்தோன் வானத்து |
|
25 |
வயங்கு பல் மீனினும் வாழியர், பல' என, |
உரு கெழு பேய்மகள் அயர, |
|
குருதித் துகள் ஆடிய களம் கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.
|
389 |
'நீர் நுங்கின் கண் வலிப்ப, |
|
கான வேம்பின் காய் திரங்க, |
|
கயம் களியும் கோடை ஆயினும், |
|
ஏலா வெண்பொன் போருறு காலை, |
|
5 |
எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்!' |
என்று ஈத்தனனே, இசைசால் நெடுந்தகை; |
|
இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன்; |
|
செலினே, காணா வழியனும் அல்லன்; |
|
புன் தலை மடப் பிடி இனைய, கன்று தந்து, |
|
10 |
குன்றக நல் ஊர் மன்றத்துப் பிணிக்கும் |
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன், |
|
செல்வுழி எழாஅ நல் ஏர் முதியன்! |
|
ஆதனுங்கன் போல, நீயும் |
|
பசித்த ஒக்கல் பழங்கண் வீட, |
|
15 |
வீறுசால் நன் கலம் நல்குமதி, பெரும! |
ஐது அகல் அல்குல் மகளிர் |
|
நெய்தல் கேளன்மார், நெடுங் கடையானே! |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.
|