முகப்பு | தொடக்கம் |
கரும்புப்பூ |
35 |
நளி இரு முந்நீர் ஏணி ஆக, |
|
வளி இடை வழங்கா வானம் சூடிய |
|
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர், |
|
முரசு முழங்கு தானை மூவருள்ளும், |
|
5 |
அரசு எனப்படுவது நினதே, பெரும! |
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும், |
|
இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும், |
|
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட, |
|
தோடு கொள் வேலின் தோற்றம் போல, |
|
10 |
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் |
நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க |
|
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே! |
|
நினவ கூறுவல்; எனவ கேண்மதி! |
|
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து |
|
15 |
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு |
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே; |
|
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ |
|
மாக விசும்பின் நடுவு நின்றாங்கு, |
|
கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை |
|
20 |
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய |
குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ! |
|
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப, |
|
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, |
|
வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து, |
|
25 |
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை |
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே; |
|
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும், |
|
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும், |
|
காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்; |
|
30 |
அது நற்கு அறிந்தனைஆயின், நீயும் |
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது, |
|
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி, |
|
குடி புறந்தருகுவை ஆயின், நின் |
|
அடி புறந்தருகுவர், அடங்காதோரே. |
|
திணை அது; துறை செவியறிவுறூஉ.
| |
அவனை வெள்ளைக்குடி நாகனார் பாடி, பழஞ் செய்க்கடன் வீடுகொண்டது.
|
384 |
மென்பாலான் உடன் அணைஇ, |
|
வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை |
|
அறைக் கரும்பின் பூ அருந்தும்; |
|
வன்பாலான் கருங் கால் வரகின் |
|
5 |
...................................................................................... |
அம் கண் குறு முயல வெருவ, அயல |
|
கருங் கோட்டு இருப்பைப் பூ உறைக்குந்து; |
|
விழவு இன்றாயினும், உழவர் மண்டை |
|
இருங் கெடிற்று மிசையொடு பூங் கள் வைகுந்து; |
|
10 |
................................................கிணையேம், பெரும! |
நெல் என்னா, பொன் என்னா, |
|
கனற்றக் கொண்ட நறவு என்னா, |
|
.....................மனை என்னா, அவை பலவும் |
|
யான் தண்டவும், தான் தண்டான், |
|
15 |
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை, |
மண் நாணப் புகழ் வேட்டு, |
|
நீர் நாண நெய் வழங்கி, |
|
புரந்தோன்; எந்தை; யாமலந்தொலை..... |
|
அன்னோனை உடையேம் என்ப;....... வறட்கு |
|
20 |
யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட |
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும், |
|
தின்ற நண் பல் ஊன் தோண்டவும், |
|
வந்த வைகல் அல்லது, |
|
சென்ற எல்லைச் செலவு அறியேனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|