முகப்பு | தொடக்கம் |
பனம்பூ |
22 |
தூங்கு கையான் ஓங்கு நடைய, |
|
உறழ் மணியான் உயர் மருப்பின, |
|
பிறை நுதலான் செறல் நோக்கின, |
|
பா அடியான் பணை எருத்தின, |
|
5 |
தேன் சிதைந்த வரை போல, |
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாத்து, |
|
அயறு சோரும் இருஞ் சென்னிய, |
|
மைந்து மலிந்த மழ களிறு |
|
கந்து சேர்பு நிலைஇ வழங்க; |
|
10 |
பாஅல் நின்று கதிர் சோரும் |
வான் உறையும் மதி போலும் |
|
மாலை வெண் குடை நீழலான், |
|
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க; |
|
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த |
|
15 |
ஆய் கரும்பின் கொடிக் கூரை, |
சாறு கொண்ட களம் போல, |
|
வேறு வேறு பொலிவு தோன்ற; |
|
குற்று ஆனா உலக்கையான் |
|
கலிச் சும்மை வியல் ஆங்கண், |
|
20 |
பொலந் தோட்டுப் பைந் தும்பை |
மிசை அலங்கு உளைய பனைப் போழ் செரீஇ, |
|
சின மாந்தர் வெறிக் குரவை |
|
ஓத நீரின் பெயர்பு பொங்க; |
|
வாய் காவாது பரந்து பட்ட |
|
25 |
வியன் பாசறைக் காப்பாள! |
வேந்து தந்த பணி திறையான் |
|
சேர்ந்தவர்தம் கடும்பு ஆர்த்தும், |
|
ஓங்கு கொல்லியோர், அடு பொருந! |
|
வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய்! |
|
30 |
வாழிய, பெரும! நின் வரம்பு இல் படைப்பே, |
நிற் பாடிய வயங்கு செந் நாப் |
|
பின் பிறர் இசை நுவலாமை, |
|
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ! |
|
'மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே |
|
35 |
புத்தேள் உலகத்து அற்று' எனக் கேட்டு வந்து, |
இனிது கண்டிசின்; பெரும! முனிவு இலை, |
|
வேறு புலத்து இறுக்கும் தானையொடு, |
|
சோறு பட நடத்தி நீ துஞ்சாய்மாறே! |
|
திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
| |
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.
|
45 |
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்; |
|
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்; |
|
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு |
|
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; |
|
5 |
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; |
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், |
|
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர் |
|
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு |
|
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே. |
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
| |
சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.
|
99 |
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், |
|
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும், |
|
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய |
|
தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல, |
|
5 |
ஈகை அம் கழல் கால், இரும் பனம் புடையல், |
பூ ஆர் காவின், புனிற்றுப் புலால் நெடு வேல், |
|
எழு பொறி நாட்டத்து எழாஅத் தாயம் |
|
வழு இன்று எய்தியும் அமையாய், செரு வேட்டு, |
|
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணிச் |
|
10 |
சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய |
அன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும் |
|
பரணன் பாடினன் மற்கொல் மற்று நீ |
|
முரண் மிகு கோவலூர் நூறி, நின் |
|
அரண் அடு திகிரி ஏந்திய தோளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் கோவலூர் எறிந்தானை அவர் பாடியது.
|
100 |
கையது வேலே; காலன புனை கழல்; |
|
மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்; |
|
வட்கர் போகிய வளர் இளம் போந்தை |
|
உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு, |
|
5 |
வெட்சி மா மலர், வேங்கையொடு விரைஇ, |
சுரி இரும் பித்தை பொலியச் சூடி, |
|
வரிவயம் பொருத வயக் களிறு போல, |
|
இன்னும் மாறாது சினனே; அன்னோ! |
|
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே; |
|
10 |
செறுவர் நோக்கிய கண், தன் |
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே. |
|
திணையும் துறையும் அவை; திணை வஞ்சியும், துறை கொற்றவள்ளையும் ஆம்.
| |
அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.
|
265 |
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை, |
|
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப் |
|
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து, |
|
பல் ஆன் கோவலர் படலை சூட்ட, |
|
5 |
கல் ஆயினையே கடு மான் தோன்றல்! |
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப் |
|
பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க் |
|
கடும் பகட்டு யானை வேந்தர் |
|
ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
......................சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந் தும்பியார் பாடியது.
|
338 |
ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின், |
|
நெல் மலிந்த மனை, பொன் மலிந்த மறுகின், |
|
படு வண்டு ஆர்க்கும் பல் மலர்க் காவின், |
|
நெடு வேள் ஆதன் போந்தை அன்ன, |
|
5 |
பெருஞ் சீர் அருங் கொண்டியளே; கருஞ் சினை |
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் |
|
மலைந்த சென்னியர், அணிந்த வில்லர், |
|
கொற்ற வேந்தர் வரினும், தன் தக |
|
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுப் |
|
10 |
பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று |
உணங்கு கலன் ஆழியின் தோன்றும் |
|
ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே. |
|
திணையும் துறையும் அவை.
| |
குன்றூர் கிழார் மகனார் பாடியது.
|