முகப்பு | தொடக்கம் |
முல்லை (தளவம்) |
117 |
மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும், |
|
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும், |
|
வயலகம் நிறைய, புதல் பூ மலர, |
|
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க் கண் |
|
5 |
ஆமா நெடு நிரை நன் புல் ஆர, |
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி, |
|
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே |
|
பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப் |
|
பாசிலை முல்லை முகைக்கும் |
|
10 |
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
335 |
அடல் அருந் துப்பின்.................... |
|
...................குருந்தே முல்லை என்று |
|
இந் நான்கு அல்லது பூவும் இல்லை; |
|
கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே, |
|
5 |
சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு, |
இந் நான்கு அல்லது உணாவும் இல்லை; |
|
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று |
|
இந் நான்கு அல்லது குடியும் இல்லை; |
|
ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி, |
|
10 |
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென, |
கல்லே பரவின் அல்லது, |
|
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மாங்குடி கிழார் பாடியது.
|
339 |
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு |
|
மடலை மாண் நிழல் அசைவிட, கோவலர் |
|
வீ ததை முல்லைப் பூப் பறிக்குந்து; |
|
குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல் |
|
5 |
நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து; |
தொடலை அல்குல் தொடித் தோள் மகளிர் |
|
கடல் ஆடிக் கயம் பாய்ந்து, |
|
கழி நெய்தல் பூக்குறூஉந்து; |
|
பைந் தழை துயல்வரும் செறு விறற.............. |
|
10 |
............................................................................லத்தி |
வளர வேண்டும், அவளே, என்றும் |
|
ஆர் அமர் உழப்பதும் அமரியளாகி, |
|
முறம் செவி யானை வேந்தர் |
|
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே. |
|
திணையும் துறையும் அவை.
| |
..............................................................
|
352 |
தேஎம் கொண்ட வெண் மண்டையான், |
|
வீ...................................................................கறக்குந்து; |
|
அவல் வகுத்த பசுங் குடையான், |
|
புதல் முல்லைப் பூப் பறிக்குந்து; |
|
5 |
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் |
குன்று ஏறிப் புனல் பாயின், |
|
புற வாயால் புனல் வள |
|
............................................................ நொடை நறவின் |
|
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி |
|
10 |
உறந்தை அன்ன உரைசால் நன் கலம் |
கொடுப்பவும் கொளாஅனெ |
|
.......................ர் தந்த நாகு இள வேங்கையின், |
|
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் |
|
மாக் கண் மலர்ந்த முலையள்; தன்னையும் |
|
15 |
சிறு கோல் உளையும் புரவி ª.................. |
...................................................................... யமரே. |
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
395 |
மென் புலத்து வயல் உழவர் |
|
வன் புலத்துப் பகடு விட்டு, |
|
குறு முயலின் குழைச் சூட்டொடு |
|
நெடு வாளைப் பல் உவியல், |
|
5 |
பழஞ் சோற்றுப் புகவு அருந்தி, |
புதல் தளவின் பூச் சூடி, |
|
................................................................ |
|
...........................அரியலாருந்து; |
|
மனைக் கோழிப் பைம் பயிரின்னே, |
|
10 |
கானக் கோழிக் கவர் குரலொடு |
நீர்க் கோழிக் கூய்ப் பெயர்க்குந்து; |
|
வேய் அன்ன மென் தோளால், |
|
மயில் அன்ன மென் சாயலார், |
|
கிளி கடியின்னே, |
|
15 |
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து; |
ஆங்கு அப் பல நல்ல புலன் அணியும் |
|
சீர் சான்ற விழுச் சிறப்பின், |
|
சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன் |
|
செல்லா நல் இசை உறந்தைக் குணாது, |
|
20 |
நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர் |
அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும! |
|
முன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி, |
|
கதிர் நனி செ ...................................... மாலை, |
|
தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின், |
|
25 |
தீம் குரல்......... கின் அரிக் குரல் தடாரியொடு, |
ஆங்கு நின்ற எற்கண்டு, |
|
சிறிதும் நில்லான், பெரிதும் கூறான், |
|
அருங் கலம் வரவே அருளினன் வேண்டி, |
|
...........யென உரைத்தன்றி நல்கி, தன் மனைப் |
|
30 |
பொன் போல் மடந்தையைக் காட்டி, 'இவனை |
என் போல் போற்று' என்றோனே; அதற்கொண்டு, |
|
அவன் மறவலேனே; பிறர் உள்ளலேனே; |
|
அகன் ஞாலம் பெரிது வெம்பினும், |
|
மிக வானுள் எரி தோன்றினும், |
|
35 |
குள மீனொடும் தாள் புகையினும், |
பெருஞ் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் |
|
பசுங் கண் கருனைச் சூட்டொடு மாந்தி, |
|
'விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க!' என, |
|
உள்ளதும் இல்லதும் அறியாது, |
|
40 |
ஆங்கு அமைந்தன்றால்; வாழ்க, அவன் தாளே! |
திணையும் துறையும் அவை.
| |
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.
|