முகப்பு | தொடக்கம் |
பலாப்பழம் (முட்புறமுதுகனி) |
109 |
அளிதோதானே, பாரியது பறம்பே! |
|
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும், |
|
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே: |
|
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே; |
|
5 |
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே; |
மூன்றே, கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே; |
|
நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து, |
|
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே. |
|
வான் கண் அற்று, அவன் மலையே; வானத்து, |
|
10 |
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு, |
மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும், |
|
புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும், |
|
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்; |
|
யான் அறிகுவென், அது கொள்ளும் ஆறே: |
|
15 |
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, |
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர, |
|
ஆடினிர் பாடினிர் செலினே, |
|
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே. |
|
திணை நொச்சி; துறை மகள் மறுத்தல்.
| |
அவனை அவர் பாடியது.
|
158 |
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும், |
|
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை, |
|
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் |
|
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக் |
|
5 |
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்; |
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த, |
|
மாரி ஈகை, மறப் போர் மலையனும்; |
|
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல், |
|
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்; |
|
10 |
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை, |
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை, |
|
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி |
|
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று |
|
உள்ளி வருநர் உலைவு நனி தீர, |
|
15 |
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை, |
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு |
|
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப் |
|
பாடி வருநரும் பிறரும் கூடி |
|
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண் |
|
20 |
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக் |
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி, |
|
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று, |
|
முள் புற முது கனி பெற்ற கடுவன் |
|
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும், |
|
25 |
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ! |
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண! |
|
இசை மேந்தோன்றிய வண்மையொடு, |
|
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே! |
|
திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
| |
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.
|
200 |
பனி வரை நிவந்த பாசிலைப் பலவின் |
|
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன் |
|
செம் முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி, |
|
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து, |
|
5 |
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப! |
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல், |
|
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை, |
|
விளங்கு மணிக் கொடும் பூண், விச்சிக்கோவே! |
|
இவரே, பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை |
|
10 |
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும், |
'கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!' எனக் கொடுத்த |
|
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்; |
|
யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்; நீயே, |
|
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்; |
|
15 |
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர் |
அடங்கா மன்னரை அடக்கும் |
|
மடங்கா விளையுள் நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
பாரி மகளிரை விச்சிக் கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
|
380 |
தென் பவ்வத்து முத்துப் பூண்டு, |
|
வட குன்றத்துச் சாந்தம் உரீஇ, |
|
........................................ங் கடல் தானை, |
|
இன் இசைய விறல் வென்றி, |
|
5 |
தென்னவர் வய மறவன்; |
மிசைப் பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து, |
|
நாறு இதழ்க் குளவியொடு கூதளம் குழைய, |
|
வேறுபெ.....................................................................த்துந்து, |
|
தீம் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்; |
|
10 |
துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன்; |
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்; |
|
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல, |
|
.....................த்தார்ப் பிள்ளை அம் சிறாஅர்; |
|
அன்னன் ஆகன்மாறே, இந் நிலம் |
|
15 |
இலம்படு காலை ஆயினும், |
புலம்பல் போயின்று, பூத்த என் கடும்பே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
நாஞ்சில் வள்ளுவனைக் கருவூர்க் கதப்பிள்ளை பாடியது.
|