முகப்பு | தொடக்கம் |
பனம்பழம் |
61 |
கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர் |
|
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும், |
|
மலங்கு மிளிர், செறுவின் தளம்பு தடிந்து இட்ட |
|
பழன வாளைப் பரூஉக் கண் துணியல் |
|
5 |
புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக, |
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி, |
|
நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும் |
|
வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர் |
|
தெங்கு படு வியன் பழம் முனையின், தந்தையர் |
|
10 |
குறைக்கண் நெடும் போர் ஏறி, விசைத்து எழுந்து |
செழுங் கோள் பெண்ணைப் பழம் தொட முயலும், |
|
வைகல் யாணர், நல் நாட்டுப் பொருநன், |
|
எஃகு விளங்கு தடக் கை இயல் தேர்ச் சென்னி, |
|
சிலைத் தார் அகலம் மலைக்குநர் உளர்எனின், |
|
15 |
தாம் அறிகுவர் தமக்கு உறுதி; யாம் அவன் |
எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர் |
|
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது, |
|
திருந்து அடி பொருந்த வல்லோர் |
|
வருந்தக் காண்டல், அதனினும் இலமே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
225 |
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய, |
|
இடையோர் பழத்தின் பைங் கனி மாந்த, |
|
கடையோர் விடு வாய்ப் பிசிரொடு சுடு கிழங்கு நுகர, |
|
நில மலர் வையத்து வல முறை வளைஇ, |
|
5 |
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு, |
'ஆற்றல்' என்பதன் தோற்றம் கேள், இனி: |
|
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, |
|
முள்ளுடை வியன் காட்டதுவே 'நன்றும் |
|
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்கொல்?' என, |
|
10 |
இன் இசைப் பறையொடு வென்றி நுவல, |
தூக்கணங் குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப |
|
ஒரு சிறைக் கொளீஇய திரி வாய் வலம்புரி, |
|
ஞாலங் காவலர் கடைத்தலை, |
|
காலைத் தோன்றினும் நோகோ யானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
320 |
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி, |
|
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல், |
|
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென, |
|
பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர் |
|
5 |
தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட, |
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள் |
|
கணவன் எழுதலும் அஞ்சி, கலையே |
|
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும், |
|
இல் வழங்காமையின், கல்லென ஒலித்து, |
|
10 |
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி |
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென, |
|
ஆர நெருப்பின், ஆரல் நாற, |
|
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் |
|
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி, |
|
15 |
தங்கினை சென்மோ, பாண! தங்காது, |
வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும் |
|
அருகாது ஈயும் வண்மை |
|
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வீரை வெளியனார் பாடியது.
|