முகப்பு | தொடக்கம் |
ஆடு (மறி, மடங்கல்) |
197 |
வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு |
|
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ, |
|
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு |
|
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ, |
|
5 |
உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு |
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ, |
|
மண் கெழு தானை, ஒண் பூண், வேந்தர் |
|
வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே; |
|
எம்மால் வியக்கப்படூஉமோரே, |
|
10 |
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த |
குறு நறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு, |
|
புன் புல வரகின் சொன்றியொடு, பெறூஉம், |
|
சீறூர் மன்னர் ஆயினும், எம் வயின் |
|
பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே; |
|
15 |
மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும் |
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்; |
|
நல் அறிவு உடையோர் நல்குரவு |
|
உள்ளுதும், பெரும! யாம், உவந்து, நனி பெரிதே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
286 |
வெள்ளை வெள் யாட்டுச் செச்சை போலத் |
|
தன் ஓரன்ன இளையர் இருப்ப, |
|
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக் |
|
கால் கழி கட்டிலில் கிடப்பி, |
|
5 |
தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே! |
திணை கரந்தை; துறை வேத்தியல்.
| |
ஒளவையார் பாடியது.
|
366 |
விழுக் கடிப்பு அறைந்த முழுக் குரல் முரசம் |
|
ஒழுக்குடை மருங்கின் ஒரு மொழித்து ஆக, |
|
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப, |
|
ஒரு தாம் ஆகிய பெருமையோரும், |
|
5 |
தம் புகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே; |
அதனால், அறவோன் மகனே! மறவோர் செம்மால்! |
|
.............................உரைப்பக் கேண்மதி: |
|
நின் ஊற்றம் பிறர் அறியாது, |
|
பிறர் கூறிய மொழி தெரியா, |
|
10 |
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி, |
இரவின் எல்லை வருவது நாடி, |
|
உரை..................................................... |
|
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்றாங்கு, |
|
செங் கண் மகளிரொடு சிறு துனி அளைஇ, |
|
15 |
அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப, |
கெடல் அருந் திருவ! |
|
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது, |
|
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி, |
|
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப, |
|
20 |
நீர் நிலை பெருத்த வார் மணல் அடை கரை, |
காவுதொறும் |
|
மடங்கல் உண்மை மாயமோ அன்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
தருமபுத்திரனைக் கோதமனார் பாடியது.
|
383 |
ஒண்பொறிச் சேவல் எடுப்ப, ஏற்றெழுந்து, |
|
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், |
|
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி, |
|
நெடுங் கடை நின்று, பகடு பல வாழ்த்தி, |
|
5 |
தன் புகழ் ஏத்தினெனாக, ஊன் புலந்து, |
அருங் கடி வியல் நகர்க் குறுகல் வேண்டி, |
|
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் |
|
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள, |
|
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின் |
|
10 |
கழை படு சொலியின் இழை அணி வாரா, |
ஒண் பூங் கலிங்கம் உடீஇ, நுண் பூண் |
|
வசிந்து வாங்கு நுசுப்பின், அவ் வாங்கு உந்தி, |
|
கற்புடை மடந்தை தன் புறம் புல்ல, |
|
எற் பெயர்ந்த நோக்கி..................................... |
|
15 |
.................................................கல் கொண்டு, |
அழித்துப் பிறந்தனெனாகி, அவ் வழி, |
|
பிறர், பாடு புகழ் பாடிப் படர்பு அறியேனே; |
|
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண் மறி, |
|
நரை முக ஊகமொடு, உகளும், சென................ |
|
20 |
.......................கன்று பல கெழீஇய |
கான் கெழு நாடன், கடுந் தேர் அவியன், என |
|
ஒருவனை உடையேன்மன்னே, யானே; |
|
அறான்; எவன் பரிகோ, வெள்ளியது நிலையே? |
|
திணையும் துறையும் அவை.
| |
...........................மாறோக்கத்து நப்பசலையார் (அவியனைப்) பாடியது.
|