முகப்பு | ![]() |
குரங்கு (கலை, மந்தி, கடுவன்) |
116 |
தீம் நீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக் |
|
கூம்பு அவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல், |
|
ஏந்து எழில் மழைக் கண், இன் நகை, மகளிர் |
|
புல் மூசு கவலைய முள் மிடை வேலி, |
|
5 |
பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண், |
பீரை நாறிய சுரை இவர் மருங்கின், |
|
ஈத்து இலைக் குப்பை ஏறி, உமணர் |
|
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ; |
|
நோகோ யானே; தேய்கமா, காலை! |
|
10 |
பயில் பூஞ் சோலை மயில் எழுந்து ஆலவும், |
பயில் இருஞ் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும், |
|
கலையும் கொள்ளாவாக, பலவும் |
|
காலம் அன்றியும் மரம் பயம் பகரும் |
|
யாணர் அறாஅ வியல் மலை அற்றே |
|
15 |
அண்ணல் நெடு வரை ஏறி, தந்தை |
பெரிய நறவின், கூர் வேல் பாரியது |
|
அருமை அறியார், போர் எதிர்ந்து வந்த |
|
வலம் படு தானை வேந்தர் |
|
பொலம் படைக் கலி மா எண்ணுவோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
128 |
மன்றப் பலவின் மாச் சினை மந்தி |
|
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின் |
|
பாடு இன் தெண் கண், கனி செத்து, அடிப்பின், |
|
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும், |
|
5 |
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் |
ஆடுமகள் குறுகின் அல்லது, |
|
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே. |
|
திணை அது; துறை வாழ்த்து; இயன்மொழியும் ஆம்.
| |
அவனை அவர் பாடியது.
|
136 |
யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப |
|
இழை வலந்த பல் துன்னத்து |
|
இடைப் புரை பற்றி, பிணி விடாஅ |
|
ஈர்க் குழாத்தோடு இறை கூர்ந்த |
|
5 |
பேஎன் பகை என ஒன்று என்கோ? |
உண்ணாமையின் ஊன் வாடி, |
|
தெண் நீரின் கண் மல்கி, |
|
கசிவுற்ற என் பல் கிளையொடு |
|
பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ? |
|
10 |
அன்ன தன்மையும் அறிந்து ஈயார், |
'நின்னது தா' என, நிலை தளர, |
|
மரம் பிறங்கிய நளிச் சிலம்பில், |
|
குரங்கு அன்ன புன் குறுங் கூளியர் |
|
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ? |
|
15 |
'ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்' |
எனக் கருதி, பெயர் ஏத்தி, |
|
வாய் ஆர நின் இசை நம்பி, |
|
சுடர் சுட்ட சுரத்து ஏறி, |
|
இவண் வந்த பெரு நசையேம்; |
|
20 |
'எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்; |
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப' என, |
|
அனைத்து உரைத்தனன் யான் ஆக, |
|
நினக்கு ஒத்தது நீ நாடி, |
|
நல்கினை விடுமதி, பரிசில்! அல்கலும், |
|
25 |
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை |
நுண் பல மணலினும் ஏத்தி, |
|
உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே. |
|
திணை அது; துறை பரிசில் கடாநிலை.
| |
அவனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது.
|
158 |
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும், |
|
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை, |
|
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் |
|
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக் |
|
5 |
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்; |
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த, |
|
மாரி ஈகை, மறப் போர் மலையனும்; |
|
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல், |
|
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்; |
|
10 |
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை, |
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை, |
|
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி |
|
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று |
|
உள்ளி வருநர் உலைவு நனி தீர, |
|
15 |
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை, |
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு |
|
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப் |
|
பாடி வருநரும் பிறரும் கூடி |
|
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண் |
|
20 |
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக் |
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி, |
|
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று, |
|
முள் புற முது கனி பெற்ற கடுவன் |
|
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும், |
|
25 |
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ! |
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண! |
|
இசை மேந்தோன்றிய வண்மையொடு, |
|
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே! |
|
திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
| |
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.
|
200 |
பனி வரை நிவந்த பாசிலைப் பலவின் |
|
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன் |
|
செம் முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி, |
|
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து, |
|
5 |
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப! |
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல், |
|
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை, |
|
விளங்கு மணிக் கொடும் பூண், விச்சிக்கோவே! |
|
இவரே, பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை |
|
10 |
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும், |
'கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!' எனக் கொடுத்த |
|
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்; |
|
யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்; நீயே, |
|
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்; |
|
15 |
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர் |
அடங்கா மன்னரை அடக்கும் |
|
மடங்கா விளையுள் நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
பாரி மகளிரை விச்சிக் கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
|
236 |
கலை உணக் கிழிந்த, முழவு மருள், பெரும் பழம் |
|
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் |
|
மலை கெழு நாட! மா வண் பாரி! |
|
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற் |
|
5 |
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே |
பெருந் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது, |
|
ஒருங்கு வரல் விடாது, 'ஒழிக' எனக் கூறி, |
|
இனையைஆதலின் நினக்கு மற்று யான் |
|
மேயினேன் அன்மையானே; ஆயினும், |
|
10 |
இம்மை போலக் காட்டி, உம்மை |
இடை இல் காட்சி நின்னோடு |
|
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே! |
|
திணை அது; துறை கையறுநிலை.
| |
வேள் பாரி துஞ்சியவழி, அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து, வடக்கிருந்த கபிலர் பாடியது.
|
247 |
யானை தந்த முளி மர விறகின் |
|
கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து, |
|
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி, |
|
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில், |
|
5 |
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ, |
பேர் அஞர்க் கண்ணள், பெருங் காடு நோக்கி, |
|
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன் |
|
முழவு கண் துயிலாக் கடியுடை வியல் நகர்ச் |
|
சிறு நனி தமியள் ஆயினும், |
|
10 |
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே! |
திணையும் துறையும் அவை.
| |
அவள் தீப் பாய்வாளைக் கண்டு மதுரைப் பேராலவாயார் சொல்லியது.
|
378 |
தென் பரதவர் மிடல் சாய, |
|
வட வடுகர் வாள் ஓட்டிய, |
|
தொடை அமை கண்ணி, திருந்து வேல் தடக் கை, |
|
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின், |
|
5 |
நல் தார், கள்ளின், சோழன் கோயில், |
புதுப் பிறை அன்ன சுதை சேய் மாடத்து, |
|
பனிக் கயத்து அன்ன நீள் நகர் நின்று, என் |
|
அரிக் கூடு மாக் கிணை இரிய ஒற்றி, |
|
எஞ்சா மரபின் வஞ்சி பாட, |
|
10 |
எமக்கு என வகுத்த அல்ல, மிகப் பல, |
மேம்படு சிறப்பின் அருங் கல வெறுக்கை |
|
தாங்காது பொழிதந்தோனே; அது கண்டு, |
|
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல், |
|
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும், |
|
15 |
செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும், |
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும், |
|
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும், | |
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை |
|
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை, |
|
20 |
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் |
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு, |
|
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே |
|
இருங் கிளைத் தலைமை எய்தி, |
|
அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடியது.
|
383 |
ஒண்பொறிச் சேவல் எடுப்ப, ஏற்றெழுந்து, |
|
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், |
|
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி, |
|
நெடுங் கடை நின்று, பகடு பல வாழ்த்தி, |
|
5 |
தன் புகழ் ஏத்தினெனாக, ஊன் புலந்து, |
அருங் கடி வியல் நகர்க் குறுகல் வேண்டி, |
|
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் |
|
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள, |
|
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின் |
|
10 |
கழை படு சொலியின் இழை அணி வாரா, |
ஒண் பூங் கலிங்கம் உடீஇ, நுண் பூண் |
|
வசிந்து வாங்கு நுசுப்பின், அவ் வாங்கு உந்தி, |
|
கற்புடை மடந்தை தன் புறம் புல்ல, |
|
எற் பெயர்ந்த நோக்கி..................................... |
|
15 |
.................................................கல் கொண்டு, |
அழித்துப் பிறந்தனெனாகி, அவ் வழி, |
|
பிறர், பாடு புகழ் பாடிப் படர்பு அறியேனே; |
|
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண் மறி, |
|
நரை முக ஊகமொடு, உகளும், சென................ |
|
20 |
.......................கன்று பல கெழீஇய |
கான் கெழு நாடன், கடுந் தேர் அவியன், என |
|
ஒருவனை உடையேன்மன்னே, யானே; |
|
அறான்; எவன் பரிகோ, வெள்ளியது நிலையே? |
|
திணையும் துறையும் அவை.
| |
...........................மாறோக்கத்து நப்பசலையார் (அவியனைப்) பாடியது.
|