முகப்பு | தொடக்கம் |
பாம்பு (நாகம், அரா அரவு) |
17 |
தென் குமரி, வட பெருங்கல், |
|
குண குட கடலா எல்லை, |
|
குன்று, மலை, காடு, நாடு, |
|
ஒன்று பட்டு வழிமொழிய, |
|
5 |
கொடிது கடிந்து, கோல் திருத்தி, |
படுவது உண்டு, பகல் ஆற்றி, |
|
இனிது உருண்ட சுடர் நேமி |
|
முழுது ஆண்டோர் வழி காவல! |
|
குலை இறைஞ்சிய கோள் தாழை |
|
10 |
அகல் வயல், மலை வேலி, |
நிலவு மணல் வியன் கானல், |
|
தெண் கழிமிசைத் தீப் பூவின், |
|
தண் தொண்டியோர் அடு பொருந! |
|
மாப் பயம்பின் பொறை போற்றாது, |
|
15 |
நீடு குழி அகப்பட்ட |
பீடு உடைய எறுழ் முன்பின், |
|
கோடு முற்றிய கொல் களிறு |
|
நிலை கலங்கக் குழி கொன்று, |
|
கிளை புகலத் தலைக்கூடியாங்கு |
|
20 |
நீ பட்ட அரு முன்பின் |
பெருந் தளர்ச்சி, பலர் உவப்ப, |
|
பிறிது சென்று, மலர் தாயத்துப் |
|
பலர் நாப்பண் மீக்கூறலின், |
|
'உண்டாகிய உயர் மண்ணும், |
|
25 |
சென்று பட்ட விழுக் கலனும், |
பெறல் கூடும், இவன் நெஞ்சு உறப் பெறின்' எனவும், |
|
'ஏந்து கொடி இறைப்புரிசை, |
|
வீங்கு சிறை, வியல்அருப்பம், |
|
இழந்து வைகுதும், இனி நாம் இவன் |
|
30 |
உடன்று நோக்கினன், பெரிது' எனவும், |
வேற்று அரசு பணி தொடங்கு நின் |
|
ஆற்றலொடு புகழ் ஏத்தி, |
|
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய |
|
மழை என மருளும் பல் தோல், மலை எனத் |
|
35 |
தேன் இறை கொள்ளும் இரும் பல் யானை, |
உடலுநர் உட்க வீங்கி, கடல் என |
|
வான் நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது |
|
கடு ஒடுங்கு எயிற்ற அரவுத் தலை பனிப்ப, |
|
இடி என முழங்கும் முரசின், |
|
40 |
வரையா ஈகைக் குடவர் கோவே! |
திணை வாகை; துறை அரச வாகை; இயன்மொழியும் ஆம்.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதின் போய்க் கட்டில் எய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.
|
37 |
நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த, |
|
வேக வெந் திறல், நாகம் புக்கென, |
|
விசும்பு தீப் பிறப்பத் திருகி, பசுங் கொடிப் |
|
பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்கு, |
|
5 |
புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல், |
சினம் கெழு தானை, செம்பியன் மருக! |
|
கராஅம் கலித்த குண்டு கண் அகழி, |
|
இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி, |
|
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் |
|
10 |
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி, |
செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர், |
|
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின், |
|
'நல்ல' என்னாது, சிதைத்தல் |
|
வல்லையால், நெடுந்தகை! செருவத்தானே. |
|
திணை வாகை; துறை அரசவாகை; முதல் வஞ்சியும் ஆம்.
| |
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
89 |
'இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல், |
|
மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி! |
|
பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?' என, |
|
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே! |
|
5 |
எறி கோல் அஞ்சா அரவின் அன்ன |
சிறு வல் மள்ளரும் உளரே; அதாஅன்று, |
|
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை |
|
வளி பொரு தெண் கண் கேட்பின், |
|
'அது போர்' என்னும் என்னையும் உளனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
126 |
ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு, |
|
பாணர் சென்னி பொலியத் தைஇ, |
|
வாடாத் தாமரை சூட்டிய விழுச் சீர் |
|
ஓடாப் பூட்கை உரவோன் மருக! |
|
5 |
வல்லேம் அல்லேம் ஆயினும், வல்லே |
நின்வயின் கிளக்குவமாயின், கங்குல் |
|
துயில் மடிந்தன்ன தூங்கு இருள் இறும்பின், |
|
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருந! |
|
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய, |
|
10 |
நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம் |
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன், |
|
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி, |
|
பரந்து இசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு |
|
சினம் மிகு தானை வானவன் குட கடல், |
|
15 |
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ் வழி, |
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை, |
|
இன்மை துரப்ப, இசை தர வந்து, நின் |
|
வண்மையின் தொடுத்தனம், யாமே முள் எயிற்று |
|
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப, |
|
20 |
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய, |
அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும் |
|
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும் |
|
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே! |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
| |
மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
211 |
அஞ்சுவரு மரபின் வெஞ் சினப் புயலேறு |
|
அணங்குடை அரவின் அருந் தலை துமிய, |
|
நின்று காண்பன்ன நீள் மலை மிளிர, |
|
குன்று தூவ எறியும் அரவம் போல, |
|
5 |
முரசு எழுந்து இரங்கும் தானையொடு தலைச்சென்று, |
அரைசு படக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின் |
|
உள்ளி வந்த ஓங்கு நிலைப் பரிசிலென், |
|
'வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்' என, |
|
கொள்ளா மாந்தர் கொடுமை கூற, நின் |
|
10 |
உள்ளியது முடித்தோய் மன்ற; முன் நாள் |
கை உள்ளது போல் காட்டி, வழி நாள் |
|
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் |
|
நாணாய் ஆயினும், நாணக் கூறி, என் |
|
நுணங்கு செந் நா அணங்க ஏத்தி, |
|
15 |
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின் |
ஆடு கொள் வியன் மார்பு தொழுதனென் பழிச்சிச் |
|
செல்வல் அத்தை, யானே வைகலும், |
|
வல்சி இன்மையின் வயின்வயின் மாறி, |
|
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின், |
|
20 |
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து, |
முலைக்கோள் மறந்த புதல்வனொடு, |
|
மனைத் தொலைந்திருந்த என் வாள்நுதல் படர்ந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
260 |
வளரத் தொடினும், வௌவுபு திரிந்து, |
|
விளரி உறுதரும் தீம் தொடை நினையா, |
|
தளரும் நெஞ்சம் தலைஇ, மனையோள் |
|
உளரும் கூந்தல் நோக்கி, களர |
|
5 |
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி, |
பசி படு மருங்குலை, கசிபு, கைதொழாஅ, |
|
'காணலென்கொல்?' என வினவினை வரூஉம் |
|
பாண! கேண்மதி, யாணரது நிலையே: |
|
புரவுத் தொடுத்து உண்குவைஆயினும், இரவு எழுந்து |
|
10 |
எவ்வம் கொள்குவைஆயினும், இரண்டும், |
கையுள் போலும்; கடிது அண்மையவே |
|
முன் ஊர்ப் பூசலின் தோன்றி, தன் ஊர் |
|
நெடு நிரை தழீஇய மீளியாளர் |
|
விடு கணை நீத்தம் துடி புணை ஆக, |
|
15 |
வென்றி தந்து, கொன்று கோள் விடுத்து, |
வையகம் புலம்ப வளைஇய பாம்பின் |
|
வை எயிற்று உய்ந்த மதியின், மறவர் |
|
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல் ஆன் |
|
நிரையொடு வந்த உரையன் ஆகி, |
|
20 |
உரி களை அரவம் மான, தானே |
அரிது செல் உலகில் சென்றனன்; உடம்பே, |
|
கானச் சிற்றியாற்று அருங் கரைக் கால் உற்று, |
|
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல, |
|
அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே; |
|
25 |
உயர் இசை வெறுப்பத் தோன்றிய பெயரே, |
மடம்சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி, |
|
இடம் பிறர் கொள்ளாச் சிறு வழி, |
|
படம் செய் பந்தர்க் கல் மிசையதுவே. |
|
திணை அது; துறை கையறு நிலை; பாண்பாட்டும் ஆம்.
| |
......................வடமோதங் கிழார் பாடியது.
|
294 |
'வெண்குடை மதியம் மேல் நிலாத் திகழ்தர, |
|
கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறை, |
|
குமரிப் படை தழீஇய கூற்று வினை ஆடவர் |
|
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து, |
|
5 |
இறையும் பெயரும் தோற்றி, நுமருள் |
நாள் முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு' என, |
|
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப, யாவரும் |
|
அரவு உமிழ் மணியின் குறுகார் |
|
நிரை தார் மார்பின் நின் கேள்வனை, பிறரே. |
|
திணை தும்பை; துறை தானைமறம்.
| |
பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
309 |
இரும்பு முகம் சிதைய நூறி, ஒன்னார் |
|
இருஞ் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே; |
|
நல் அரா உறையும் புற்றம் போலவும், |
|
கொல் ஏறு திரிதரு மன்றம் போலவும், |
|
5 |
மாற்று அருந் துப்பின் மாற்றோர், 'பாசறை |
உளன்' என வெரூஉம் ஓர் ஒளி |
|
வலன் உயர் நெடு வேல் என்னைகண்ணதுவே. |
|
திணை தும்பை; துறை நூழிலாட்டு.
| |
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் பாடியது.
|
329 |
இல் அடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப் |
|
புடை நடு கல்லின் நாட் பலி ஊட்டி, |
|
நல் நீராட்டி, நெய்ந் நறைக் கொளீஇய, |
|
மங்குல் மாப் புகை மறுகுடன் கமழும், |
|
5 |
அரு முனை இருக்கைத்துஆயினும், வரி மிடற்று |
அரவு உறை புற்றத்து அற்றே நாளும் |
|
புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு |
|
அருகாது ஈயும் வண்மை, |
|
உரைசால், நெடுந்தகை ஓம்பும் ஊரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது.
|
366 |
விழுக் கடிப்பு அறைந்த முழுக் குரல் முரசம் |
|
ஒழுக்குடை மருங்கின் ஒரு மொழித்து ஆக, |
|
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப, |
|
ஒரு தாம் ஆகிய பெருமையோரும், |
|
5 |
தம் புகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே; |
அதனால், அறவோன் மகனே! மறவோர் செம்மால்! |
|
.............................உரைப்பக் கேண்மதி: |
|
நின் ஊற்றம் பிறர் அறியாது, |
|
பிறர் கூறிய மொழி தெரியா, |
|
10 |
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி, |
இரவின் எல்லை வருவது நாடி, |
|
உரை..................................................... |
|
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்றாங்கு, |
|
செங் கண் மகளிரொடு சிறு துனி அளைஇ, |
|
15 |
அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப, |
கெடல் அருந் திருவ! |
|
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது, |
|
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி, |
|
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப, |
|
20 |
நீர் நிலை பெருத்த வார் மணல் அடை கரை, |
காவுதொறும் |
|
மடங்கல் உண்மை மாயமோ அன்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
தருமபுத்திரனைக் கோதமனார் பாடியது.
|
369 |
இருப்பு முகஞ் செறித்த ஏந்து எழில் மருப்பின், |
|
கருங் கை யானை கொண்மூ ஆக, |
|
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த |
|
வாள் மின் ஆக, வயங்கு கடிப்பு அமைந்த |
|
5 |
குருதிப் பலிய முரசு முழக்கு ஆக, |
அரசு அராப் பனிக்கும் அணங்கு உறு பொழுதின், |
|
வெவ் விசைப் புரவி வீசு வளி ஆக, |
|
விசைப்புறு வல் வில் வீங்கு நாண் உகைத்த |
|
கணைத் துளி பொழிந்த கண் அகன் கிடக்கை. |
|
10 |
ஈரச் செறுவயின் தேர் ஏர் ஆக, |
விடியல் புக்கு, நெடிய நீட்டி, நின் |
|
செருப் படை மிளிர்ந்த திருத்துறு பைஞ் சால், |
|
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி, |
|
விழுத் தலை சாய்த்த வெருவரு பைங் கூழ், |
|
15 |
பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு, |
கண நரியோடு கழுது களம் படுப்ப, |
|
பூதம் காப்ப, பொலிகளம் தழீஇ, |
|
பாடுநர்க்கு இருந்த பீடுடையாள! |
|
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி |
|
20 |
வேய்வை காணா விருந்தின் போர்வை |
அரிக் குரல் தடாரி உருப்ப ஒற்றி, |
|
பாடி வந்திசின்; பெரும! பாடு ஆன்று |
|
எழிலி தோயும் இமிழ் இசை அருவி, |
|
பொன்னுடை நெடுங் கோட்டு, இமையத்து அன்ன |
|
25 |
ஓடை நுதல, ஒல்குதல் அறியா, |
துடி அடிக் குழவிய பிடி இடை மிடைந்த |
|
வேழ முகவை நல்குமதி |
|
தாழா ஈகைத் தகை வெய்யோயே! |
|
திணையும் துறையும் அவை; துறை ஏர்க்கள உருவகமும் ஆம்.
| |
சேரமான் கடல் ஓட்டிய வெல் கெழு குட்டுவனைப் பரணர் பாடியது.
|
376 |
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப் |
|
பசுங் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி |
|
சிறு நனி பிறந்த பின்றை, செறி பிணிச் |
|
சிதாஅர் வள்பின் என் தெடாரி தழீஇ, |
|
5 |
பாணர் ஆரும்அளவை, யான் தன் |
யாணர் நல் மனைக் கூட்டுமுதல் நின்றனென்; |
|
இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரென, |
|
குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற, |
|
பண்டு அறிவாரா உருவோடு, என் அரைத் |
|
10 |
தொன்று படு துளையொடு பரு இழை போகி, |
நைந்து கரை பறைந்த என் உடையும், நோக்கி, |
|
'விருந்தினன் அளியன், இவன்' என, பெருந்தகை |
|
நின்ற முரற்கை நீக்கி, நன்றும் |
|
அரவு வெகுண்டன்ன தேறலொடு, சூடு தருபு, |
|
15 |
நிரயத்து அன்ன என் வறன் களைந்து, அன்றே, |
இரவினானே, ஈத்தோன் எந்தை; |
|
அன்றை ஞான்றினொடு இன்றின் ஊங்கும், |
|
இரப்பச் சிந்தியேன், நிரப்பு அடு புணையின்; |
|
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்; |
|
20 |
நிறைக் குளப் புதவின் மகிழ்ந்தனென் ஆகி, |
ஒரு நாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை, |
|
ஞாங்கர் நெடுமொழி பயிற்றி, |
|
தோன்றல் செல்லாது, என் சிறு கிணைக் குரலே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
ஒய்மான் நல்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|
382 |
கடல்படை அடல் கொண்டி, |
|
மண்டுற்ற மலிர் நோன் தாள், |
|
தண் சோழ நாட்டுப் பொருநன், |
|
அலங்கு உளை அணி இவுளி |
|
5 |
நலங்கிள்ளி நசைப் பொருநரேம்; |
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்; |
|
அவற் பாடுதும், 'அவன் தாள் வாழிய!' என; |
|
நெய் குய்ய ஊன் நவின்ற |
|
பல் சோற்றான், இன் சுவைய |
|
10 |
நல்குரவின் பசித் துன்பின் நின் |
முன்னநாள் விட்ட மூது அறி சிறாஅரும், |
|
யானும், ஏழ் மணி, அம் கேழ், அணி உத்தி, |
|
கண் கேள்வி, கவை நாவின், |
|
நிறன் உற்ற, அராஅப் போலும் |
|
15 |
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப, |
விடுமதி அத்தை, கடு மான் தோன்றல்! |
|
நினதே, முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு, அறிய; |
|
எனதே, கிடைக் காழ் அன்ன தெண் கண் மாக் கிணை |
|
கண் அகத்து யாத்த நுண் அரிச் சிறு கோல் |
|
20 |
ஏறிதொறும் நுடங்கியாங்கு, நின் பகைஞர் |
கேட்டொறும் நடுங்க, ஏத்துவென், |
|
வென்ற தேர், பிறர் வேத்தவையானே. |
|
திணை அது; துறை கடைநிலை.
| |
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
|
383 |
ஒண்பொறிச் சேவல் எடுப்ப, ஏற்றெழுந்து, |
|
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், |
|
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி, |
|
நெடுங் கடை நின்று, பகடு பல வாழ்த்தி, |
|
5 |
தன் புகழ் ஏத்தினெனாக, ஊன் புலந்து, |
அருங் கடி வியல் நகர்க் குறுகல் வேண்டி, |
|
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் |
|
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள, |
|
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின் |
|
10 |
கழை படு சொலியின் இழை அணி வாரா, |
ஒண் பூங் கலிங்கம் உடீஇ, நுண் பூண் |
|
வசிந்து வாங்கு நுசுப்பின், அவ் வாங்கு உந்தி, |
|
கற்புடை மடந்தை தன் புறம் புல்ல, |
|
எற் பெயர்ந்த நோக்கி..................................... |
|
15 |
.................................................கல் கொண்டு, |
அழித்துப் பிறந்தனெனாகி, அவ் வழி, |
|
பிறர், பாடு புகழ் பாடிப் படர்பு அறியேனே; |
|
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண் மறி, |
|
நரை முக ஊகமொடு, உகளும், சென................ |
|
20 |
.......................கன்று பல கெழீஇய |
கான் கெழு நாடன், கடுந் தேர் அவியன், என |
|
ஒருவனை உடையேன்மன்னே, யானே; |
|
அறான்; எவன் பரிகோ, வெள்ளியது நிலையே? |
|
திணையும் துறையும் அவை.
| |
...........................மாறோக்கத்து நப்பசலையார் (அவியனைப்) பாடியது.
|
393 |
பதிமுதல் பழகாப் பழங்கண் வாழ்க்கைக் |
|
குறு நெடுந் துணையொடு கூமை வீதலின், |
|
குடி முறை பாடி, ஒய்யென வருந்தி, |
|
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் |
|
5 |
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின், |
'வள்ளன்மையின் எம் வரைவோர் யார்?' என, |
|
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா, |
|
.................... கவகம் எல்லாம் ஒருபால் பட்டென, |
|
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி, |
|
10 |
ஈர்ங்கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் |
கூர்ந்த எவ்வம் விட, கொழு நிணம் கிழிப்ப, |
|
கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த |
|
மூடைப் பண்டம் மிடை நிறைந்தன்ன, |
|
வெண் நிண மூரி அருள, நாள் உற |
|
15 |
ஈன்ற அரவின் நா உருக் கடுக்கும் என் |
தொன்று படு சிதாஅர் துவர நீக்கி, |
|
போது விரி பகன்றைப் புது மலர் அன்ன, |
|
அகன்று மடி கலிங்கம் உடீஇ, செல்வமும், |
|
கேடு இன்று நல்குமதி, பெரும! மாசு இல் |
|
20 |
மதி புரை மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடி, |
|
'கோடை ஆயினும், கோடி............................... |
|
காவிரி புரக்கும் நல் நாட்டுப் பொருந! |
|
வாய் வாள் வளவன்! வாழ்க! எனப் |
|
25 |
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே. |
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார் பாடியது.
|
397 |
வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும்; புள்ளும் |
|
உயர் சினைக் குடம்பைக் குரல் தோற்றினவே; |
|
பொய்கையும் போது கண் விழித்தன; பைபயச் |
|
சுடரும் சுருங்கின்று, ஒளியே; பாடு எழுந்து |
|
5 |
இரங்குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப, |
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி, |
|
எஃகு இருள் அகற்றும் ஏமப் பாசறை, |
|
வைகறை அரவம் கேளியர்! 'பல கோள் |
|
செய் தார் மார்ப! எழுமதி துயில்' என, |
|
10 |
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
நெடுங் கடைத் தோன்றியேனே; அது நயந்து, |
|
'உள்ளி வந்த பரிசிலன் இவன்' என, |
|
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ் சூடு, |
|
மணிக் கலன் நிறைந்த மணம் நாறு தேறல், |
|
15 |
பாம்பு உரித்தன்ன வான் பூங் கலிங்கமொடு, |
மாரி அன்ன வண்மையின் சொரிந்து, |
|
வேனில் அன்ன என் வெப்பு நீங்க, |
|
அருங் கலம் நல்கியோனே; என்றும், |
|
செறுவில் பூத்த சேயிதழ்த் தாமரை, |
|
20 |
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த |
தீயொடு விளங்கும் நாடன், வாய் வாள் |
|
வலம் படு தீவின் பொலம் பூண் வளவன்; |
|
எறி திரைப் பெருங் கடல் இறுதிக்கண் செலினும், |
|
தெறு கதிர்க் கனலி தென் திசைத் தோன்றினும், |
|
25 |
'என்?' என்று அஞ்சலம், யாமே; வென் வேல் |
அருஞ் சமம் கடக்கும் ஆற்றல் அவன் |
|
திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே. |
|
திணை அது; துறை பரிசில்விடை; கடைநிலை விடையும் ஆம்.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடியது.
|
398 |
மதி நிலாக் கரப்ப, வெள்ளி ஏர்தர, |
|
வகை மாண் நல் இல்........................ |
|
பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப, |
|
பொய்கைப் பூ முகை மலர, பாணர் |
|
5 |
கை வல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க, |
இரவுப் புறம் பெற்ற ஏம வைகறை, |
|
பரிசிலர் விசையெ |
|
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன், |
|
நகைவர் குறுகின் அல்லது, பகைவர்க்குப் |
|
10 |
புலியினம் மடிந்த கல் அளை போல, |
துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர், |
|
மதியத்து அன்ன என் அரிக் குரல் தடாரி, |
|
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து, |
|
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்! |
|
15 |
'தள்ளா நிலையை ஆகியர் எமக்கு' என |
என் வரவு அறீஇ, |
|
சிறிதிற்குப் பெரிது உவந்து, |
|
விரும்பிய முகத்தன் ஆகி, என் அரைத் |
|
துரும்பு படு சிதாஅர் நீக்கி, தன் அரைப் |
|
20 |
புகை விரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ, |
அழல் கான்றன்ன அரும் பெறல் மண்டை, |
|
நிழல் காண் தேறல் நிறைய வாக்கி, |
|
யான் உண அருளல் அன்றியும், தான் உண் |
|
மண்டைய கண்ட மான் வறைக் கருனை, |
|
25 |
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர, |
வரை உறழ் மார்பின், வையகம் விளக்கும், |
|
விரவு மணி ஒளிர்வரும், அரவு உறழ் ஆரமொடு, |
|
புரையோன் மேனிப் பூத்தசல....................... |
|
முரைசெல அருளியோனே |
|
30 |
........................யருவிப் பாயல் கோவே. |
திணை பாடாண் திணை; துறை கடைநிலை.
| |
சேரமான் வஞ்சனைத் திருத்தாமனார் பாடியது.
|