முகப்பு | தொடக்கம் |
பூனை (வெருகு, வெருக்கு) |
117 |
மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும், |
|
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும், |
|
வயலகம் நிறைய, புதல் பூ மலர, |
|
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க் கண் |
|
5 |
ஆமா நெடு நிரை நன் புல் ஆர, |
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி, |
|
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே |
|
பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப் |
|
பாசிலை முல்லை முகைக்கும் |
|
10 |
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
324 |
வெருக்கு விடை அன்ன வெகுள் நோக்குக் கயந் தலை, |
|
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய், |
|
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர் |
|
சிறியிலை உடையின் சுரையுடை வால் முள் |
|
5 |
ஊக நுண் கோல் செறித்த அம்பின், |
வலாஅர் வல்வில் குலாவரக் கோலி, |
|
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் |
|
புன் புலம் தழீஇய அம் குடிச் சீறூர், |
|
குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த |
|
10 |
வெண் காழ் தாய வண் கால் பந்தர், |
இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்து, |
|
பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை |
|
வலம் படு தானை வேந்தர்க்கு |
|
உலந்துழி உலக்கும் நெஞ்சு அறி துணையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆலத்தூர் கிழார் பாடியது.
|
326 |
ஊர் முது வேலிப் பார் நடை வெருகின் |
|
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை |
|
உயிர் நடுக்குற்றுப் புலா விட்டு அரற்ற, |
|
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த |
|
5 |
பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்து, |
கவிர்ப் பூ நெற்றிச் சேவலின் தணியும் |
|
அரு மிளை இருக்கையதுவே மனைவியும், |
|
வேட்டச் சிறாஅர் சேண் புலம் படராது, |
|
படப்பைக் கொண்ட குறுந் தாள் உடும்பின் |
|
10 |
விழுக்கு நிணம் பெய்த தயிர்க் கண் விதவை, |
யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு |
|
வரு விருந்து அயரும் விருப்பினள்; கிழவனும், |
|
அருஞ் சமம் ததையத் தாக்கி, பெருஞ் சமத்து |
|
அண்ணல் யானை அணிந்த |
|
15 |
பொன் செய் ஓடைப் பெரும் பரிசிலனே. |
திணை வாகை; துறை மூதில் முல்லை.
| |
தங்கால் பொற்கொல்லனார் பாடியது.
|