முகப்பு | தொடக்கம் |
மான் (கலை, கவரி , பிணை, கடமான், மறி, புல்வாய், இரலை) |
23 |
'வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇ, |
|
களிறு படிந்து உண்டென, கலங்கிய துறையும்; |
|
கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல், |
|
சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின் |
|
5 |
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் |
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில் |
|
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்; |
|
வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும் |
|
கடி மரம் துளங்கிய காவும்; நெடு நகர் |
|
10 |
வினை புனை நல் இல் வெவ் எரி நைப்ப, |
கனை எரி உரறிய மருங்கும்; நோக்கி, |
|
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச் சென்று, |
|
இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும் |
|
துன்னல் போகிய துணிவினோன்' என, |
|
15 |
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை |
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட |
|
கால முன்ப! நின் கண்டனென் வருவல் |
|
அறு மருப்பு எழில் கலை புலிப்பால் பட்டென, |
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை |
|
20 |
பூளை நீடிய வெருவரு பறந்தலை |
வேளை வெண் பூக் கறிக்கும் |
|
ஆள் இல் அத்தம் ஆகிய காடே. |
|
திணையும் துறையும் அவை; துறை நல்லிசை வஞ்சியும் ஆம்.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.
|
31 |
சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் |
|
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல, |
|
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை, |
|
உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க, |
|
5 |
நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப் |
பாசறை அல்லது நீ ஒல்லாயே; |
|
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார் |
|
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே; |
|
'போர்' எனின், புகலும் புனை கழல் மறவர், |
|
10 |
'காடு இடைக் கிடந்த நாடு நனி சேஎய; |
செல்வேம் அல்லேம்' என்னார்; 'கல்லென் |
|
விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து, |
|
குண கடல் பின்னது ஆக, குட கடல் |
|
வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப, |
|
15 |
வல முறை வருதலும் உண்டு' என்று அலமந்து, |
நெஞ்சு நடுங்கு அவலம் பாய, |
|
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே. |
|
திணை வாகை; துறை அரச வாகை; மழபுலவஞ்சியும் ஆம்.
| |
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
33 |
கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன் |
|
மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் |
|
தயிர் கொடு வந்த தசும்பும், நிறைய, |
|
ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர் |
|
5 |
குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல் |
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் |
|
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும், |
|
ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் |
|
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; |
|
10 |
பாடுநர் வஞ்சி பாட, படையோர் |
தாது எரு மறுகின் பாசறை பொலிய, |
|
புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த |
|
மலரா மாலைப் பந்து கண்டன்ன |
|
ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் |
|
15 |
செம்மற்று அம்ம, நின் வெம் முனை இருக்கை |
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற |
|
அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப, |
|
காம இருவர் அல்லது, யாமத்துத் |
|
தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின், |
|
20 |
ஒதுக்குஇன் திணி மணல் புதுப் பூம் பள்ளி |
வாயில் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப, |
|
நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
90 |
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் |
|
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல், |
|
மறப் புலி உடலின், மான் கணம் உளவோ? |
|
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய |
|
5 |
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? |
அச்சொடு தாக்கிப் பார் உற்று இங்கிய |
|
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய, |
|
வரி மணல் ஞெமர, கல் பக, நடக்கும் |
|
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ? |
|
10 |
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக் கை |
வழு இல் வன் கை, மழவர் பெரும! |
|
இரு நிலம் மண் கொண்டு சிலைக்கும் |
|
பொருநரும் உளரோ, நீ களம் புகினே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
132 |
முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே! |
|
ஆழ்க, என் உள்ளம்! போழ்க, என் நாவே! |
|
பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே! |
|
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி |
|
5 |
குவளைப் பைஞ் சுனை பருகி, அயல |
தகரத் தண் நிழல் பிணையொடு வதியும் |
|
வட திசையதுவே வான் தோய் இமயம். |
|
தென் திசை ஆஅய் குடி இன்றாயின், |
|
பிறழ்வது மன்னோ, இம் மலர் தலை உலகே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
138 |
ஆனினம் கலித்த அதர் பல கடந்து, |
|
மானினம் கலித்த மலை பின் ஒழிய, |
|
மீனினம் கலித்த துறை பல நீந்தி, |
|
உள்ளி வந்த, வள் உயிர்ச் சீறியாழ், |
|
5 |
சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண! |
நீயே, பேர் எண்ணலையே; நின் இறை, |
|
'மாறி வா' என மொழியலன் மாதோ; |
|
ஒலி இருங் கதுப்பின் ஆயிழை கணவன் |
|
கிளி மரீஇய வியன் புனத்து |
|
10 |
மரன் அணி பெருங் குரல் அனையன் ஆதலின், |
நின்னை வருதல் அறிந்தனர் யாரே? |
|
திணை அது; துறை பாணாற்றுப்படை.
| |
அவனை மருதன் இளநாகனார் பாடியது.
|
150 |
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன |
|
பாறிய சிதாரேன், பலவு முதல் பொருந்தி, |
|
தன்னும் உள்ளேன், பிறிது புலம் படர்ந்த என் |
|
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி, |
|
5 |
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால், |
வான் கதிர்த் திரு மணி விளங்கும் சென்னி, |
|
செல்வத் தோன்றல், ஓர் வல் வில் வேட்டுவன், |
|
தொழுதனென் எழுவேற் கை கவித்து இரீஇ, |
|
இழுதின் அன்ன வால் நிணக் கொழுங் குறை, |
|
10 |
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே |
தாம் வந்து எய்தாஅளவை, ஒய்யெனத் |
|
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, 'நின் |
|
இரும் பேர் ஒக்கலொடு தின்ம்' எனத் தருதலின், |
|
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி, |
|
15 |
நல் மரன் நளிய நறுந் தண் சாரல், |
கல் மிசை அருவி தண்ணெனப் பருகி, |
|
விடுத்தல் தொடங்கினேனாக, வல்லே, |
|
'பெறுதற்கு அரிய வீறுசால் நன் கலம் |
|
பிறிது ஒன்று இல்லை; காட்டு நாட்டேம்' என, |
|
20 |
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் |
மடை செறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்; |
|
'எந் நாடோ?' என, நாடும் சொல்லான்; |
|
'யாரீரோ?' என, பேரும் சொல்லான்; |
|
பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசினே |
|
25 |
'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும் பெயர்த் தோட்டி |
அம் மலை காக்கும் அணி நெடுங் குன்றின், |
|
பளிங்கு வகுத்தன்ன தீம் நீர், |
|
நளி மலை நாடன் நள்ளி அவன்' எனவே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
152 |
'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி |
|
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ, |
|
புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக் |
|
கேழற் பன்றி வீழ, அயலது |
|
5 |
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும், |
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன், |
|
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும் |
|
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன் |
|
விலைவன் போலான்; வெறுக்கை நன்கு உடையன்; |
|
10 |
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின், |
சாரல் அருவிப் பய மலைக் கிழவன், |
|
ஓரி கொலோ? அல்லன்கொல்லோ? |
|
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும் |
|
மண் முழா அமைமின்; பண் யாழ் நிறுமின்; |
|
15 |
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்; |
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்; |
|
பதலை ஒரு கண் பையென இயக்குமின்; |
|
மதலை மாக் கோல் கைவலம் தமின்' என்று, |
|
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி, |
|
20 |
மூ ஏழ் துறையும் முறையுளிக் கழிப்பி, |
'கோ' எனப் பெயரிய காலை, ஆங்கு அது |
|
தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, 'யாம் |
|
நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர் |
|
வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர்' என, |
|
25 |
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில் |
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு, |
|
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி, |
|
தன் மலைப் பிறந்த தா இல் நன் பொன், |
|
பல் மணிக் குவையொடும் விரைஇ, 'கொண்ம்' என, |
|
30 |
சுரத்திடை நல்கியோனே விடர்ச் சிமை |
ஓங்கு இருங் கொல்லிப் பொருநன், |
|
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே! |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
வல் வில் ஓரியை வன்பரணர் பாடியது.
|
157 |
தமர் தற் தப்பின் அது நோன்றல்லும், |
|
பிறர் கையறவு தான் நாணுதலும், |
|
படைப் பழி தாரா மைந்தினன் ஆகலும், |
|
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும், |
|
5 |
நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன், |
சிலை செல மலர்ந்த மார்பின், கொலை வேல், |
|
கோடல் கண்ணி, குறவர் பெருமகன் |
|
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை, |
|
எல் படு பொழுதின், இனம் தலைமயங்கி, |
|
10 |
கட்சி காணாக் கடமான் நல் ஏறு |
மட மான் நாகு பிணை பயிரின், விடர் முழை |
|
இரும் புலிப் புகர்ப் போத்து ஓர்க்கும் |
|
பெருங் கல் நாடன் எம் ஏறைக்குத் தகுமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஏறைக் கோனைக் குறமகள் இளவெயினி பாடியது.
|
161 |
நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு, |
|
ஈண்டு செலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇ, |
|
பெரு மலை அன்ன தோன்றல, சூல் முதிர்பு, |
|
உரும் உரறு கருவியொடு, பெயல் கடன் இறுத்து, |
|
5 |
வள மழை மாறிய என்றூழ்க் காலை, |
மன்பதை எல்லாம் சென்று உண, கங்கைக் |
|
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றியாங்கு, |
|
எமக்கும் பிறர்க்கும் செம்மலைஆகலின், |
|
'அன்பு இல் ஆடவர் கொன்று, ஆறு கவர, |
|
10 |
சென்று தலைவருந அல்ல, அன்பு இன்று, |
வன் கலை தெவிட்டும், அருஞ் சுரம் இறந்தோர்க்கு, |
|
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர' எனக் |
|
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து, |
|
அருந் துயர் உழக்கும் என் பெருந் துன்புறுவி நின் |
|
15 |
தாள் படு செல்வம் காண்தொறும் மருள, |
பனை மருள் தடக் கையொடு முத்துப் பட முற்றிய |
|
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, |
|
ஒளி திகழ் ஓடை பொலிய, மருங்கில் |
|
படு மணி இரட்ட, ஏறிச் செம்மாந்து, |
|
20 |
செலல் நசைஇ உற்றனென் விறல் மிகு குருசில்! |
இன்மை துரப்ப, இசைதர வந்து, நின் |
|
வண்மையின் தொடுத்த என் நயந்தனை கேண்மதி! |
|
வல்லினும், வல்லேன்ஆயினும், வல்லே, |
|
என் அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்த |
|
25 |
நின் அளந்து அறிமதி, பெரும! என்றும் |
வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்து அருந்திப் |
|
பல் பொறிக் கொண்ட ஏந்து எழில் அகலம் |
|
மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல, |
|
நாள் முரசு இரங்கும் இடனுடை வரைப்பில் நின் |
|
30 |
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப, |
வாள் அமர் உழந்த நின் தானையும், |
|
சீர் மிகு செல்வமும், ஏத்துகம் பலவே. |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
அவனை அவர் பாடிப் பகடு பெற்றது.
|
168 |
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக் |
|
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் |
|
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு, |
|
கடுங் கண் கேழல் உழுத பூழி, |
|
5 |
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர் |
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை |
|
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் |
|
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால், |
|
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி |
|
10 |
வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி, |
சாந்த விறகின் உவித்த புன்கம் |
|
கூதளம் கவினிய குளவி முன்றில், |
|
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும் |
|
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல், |
|
15 |
நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி, |
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும! |
|
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற! |
|
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப, |
|
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப் |
|
20 |
பாடுப என்ப பரிசிலர், நாளும் |
ஈயா மன்னர் நாண, |
|
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே. |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
| |
பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.
|
193 |
அதள் எறிந்தன்ன நெடு வெண் களரின் |
|
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல, |
|
ஓடி உய்தலும் கூடும்மன்; |
|
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஓரேருழவர் பாட்டு.
|
202 |
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட, |
|
கட்சி காணாக் கடமா நல் ஏறு |
|
கடறு மணி கிளர, சிதறு பொன் மிளிர, |
|
கடிய கதழும் நெடு வரைப் படப்பை |
|
5 |
வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி, |
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர், |
|
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய |
|
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி: |
|
நுந்தை தாயம் நிறைவுற எய்திய |
|
10 |
ஒலியல் கண்ணிப் புலிகடி மாஅல்! |
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன் |
|
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை |
|
இகழ்ந்ததன் பயனே; இயல் தேர் அண்ணல்! |
|
எவ்வி தொல் குடிப் படீஇயர், மற்று, 'இவர் |
|
15 |
கை வண் பாரி மகளிர்' என்ற என் |
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும! |
|
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து, |
|
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை |
|
மாத் தகட்டு ஒள் வீ தாய துறுகல் |
|
20 |
இரும் புலி வரிப் புறம் கடுக்கும் |
பெருங் கல் வைப்பின் நாடு கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாக, கபிலர் பாடியது.
|
205 |
முற்றிய திருவின் மூவர் ஆயினும், |
|
பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே; |
|
விறல் சினம் தணிந்த விரை பரிப் புரவி |
|
உறுவர் செல் சார்வு ஆகி, செறுவர் |
|
5 |
தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை, |
வெள் வீ வேலிக் கோடைப் பொருந! |
|
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய |
|
மான் கணம் தொலைச்சிய கடு விசைக் கத நாய், |
|
நோன் சிலை, வேட்டுவ! நோய் இலையாகுக! |
|
10 |
ஆர் கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்து, |
கடல்வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ |
|
நீர் இன்று பெயராவாங்கு, தேரொடு |
|
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல் |
|
களிறு இன்று பெயரல, பரிசிலர் கடும்பே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கடிய நெடுவேட்டுவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
247 |
யானை தந்த முளி மர விறகின் |
|
கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து, |
|
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி, |
|
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில், |
|
5 |
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ, |
பேர் அஞர்க் கண்ணள், பெருங் காடு நோக்கி, |
|
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன் |
|
முழவு கண் துயிலாக் கடியுடை வியல் நகர்ச் |
|
சிறு நனி தமியள் ஆயினும், |
|
10 |
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே! |
திணையும் துறையும் அவை.
| |
அவள் தீப் பாய்வாளைக் கண்டு மதுரைப் பேராலவாயார் சொல்லியது.
|
310 |
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின், |
|
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு, |
|
உயவொடு வருந்தும் மன்னே! இனியே |
|
புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான், |
|
5 |
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே, |
உன்னிலன் என்னும், புண் ஒன்று அம்பு |
|
மான் உளை அன்ன குடுமித் |
|
தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
320 |
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி, |
|
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல், |
|
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென, |
|
பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர் |
|
5 |
தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட, |
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள் |
|
கணவன் எழுதலும் அஞ்சி, கலையே |
|
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும், |
|
இல் வழங்காமையின், கல்லென ஒலித்து, |
|
10 |
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி |
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென, |
|
ஆர நெருப்பின், ஆரல் நாற, |
|
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் |
|
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி, |
|
15 |
தங்கினை சென்மோ, பாண! தங்காது, |
வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும் |
|
அருகாது ஈயும் வண்மை |
|
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வீரை வெளியனார் பாடியது.
|
323 |
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச் |
|
சினம் கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும் |
|
கா ... ... ... ... ..... ..... ...... ...... ..... க்கு |
|
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை, |
|
5 |
வெள் வேல் ஆவம்ஆயின், ஒள் வாள் |
கறையடி யானைக்கு அல்லது |
|
உறை கழிப்பு அறியா, வேலோன் ஊரே. |
|
........................................................
| |
................டார் கிழார் பாடியது.
|
354 |
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா |
|
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்கப் |
|
புரையோர் சேர்ந்தென, தந்தையும் பெயர்க்கும்; |
|
வயல் அமர் கழனி வாயில் பொய்கை, |
|
5 |
கயல் ஆர் நாரை உகைத்த வாளை |
புனலாடு மகளிர் வள மனை ஒய்யும் |
|
ஊர் கவின் இழப்பவும் வருவது கொல்லோ |
|
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை, |
|
வீங்கு இறைப் பணைத் தோள், மடந்தை |
|
10 |
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே? |
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
374 |
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும் |
|
புல்வாய் இரலை நெற்றி அன்ன, |
|
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவியத் |
|
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், |
|
5 |
மன்றப் பலவின் மால் வரை பொருந்தி, என் |
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
|
இருங் கலை ஓர்ப்ப இசைஇ, காண்வர, |
|
கருங் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட, |
|
புலிப் பல் தாலிப் புன் தலைச் சிறாஅர் |
|
10 |
மான் கண் மகளிர், கான் தேர் அகன்று உவா |
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங் குறை, |
|
விடர் முகை அடுக்கத்துச் சினை முதிர் சாந்தம், |
|
புகர் முக வேழத்து மருப்பொடு, மூன்றும், |
|
இருங் கேழ் வயப் புலி வரி அதள் குவைஇ, |
|
15 |
விருந்து இறை நல்கும் நாடன், எம் கோன், |
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல, |
|
வண்மையும் உடையையோ? ஞாயிறு! |
|
கொன் விளங்குதியால் விசும்பினானே! |
|
திணை பாடாண் திணை; துறை பூவை நிலை.
| |
ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
|