முகப்பு | தொடக்கம் |
அன்னம் |
67 |
அன்னச் சேவல்! அன்னச் சேவல்! |
|
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் |
|
நாடு தலை அளிக்கும் ஒள் முகம் போல, |
|
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் |
|
5 |
மையல் மாலை, யாம் கையறுபு இனைய, |
குமரிஅம் பெருந் துறை அயிரை மாந்தி, |
|
வடமலைப் பெயர்குவைஆயின், இடையது |
|
சோழ நல் நாட்டுப் படினே, கோழி |
|
உயர் நிலை மாடத்து, குறும்பறை அசைஇ, |
|
10 |
வாயில் விடாது கோயில் புக்கு, எம் |
பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும் பிசிர் |
|
ஆந்தை அடியுறை' எனினே, மாண்ட நின் |
|
இன்புறு பேடை அணிய, தன் |
|
அன்புறு நன் கலம் நல்குவன் நினக்கே. |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
|
128 |
மன்றப் பலவின் மாச் சினை மந்தி |
|
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின் |
|
பாடு இன் தெண் கண், கனி செத்து, அடிப்பின், |
|
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும், |
|
5 |
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் |
ஆடுமகள் குறுகின் அல்லது, |
|
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே. |
|
திணை அது; துறை வாழ்த்து; இயன்மொழியும் ஆம்.
| |
அவனை அவர் பாடியது.
|