முகப்பு | தொடக்கம் |
புறா (புறவு) |
34 |
'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும், |
|
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும், |
|
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும், |
|
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என, |
|
5 |
'நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன் |
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என, |
|
அறம் பாடின்றே ஆயிழை கணவ! |
|
'காலை அந்தியும், மாலை அந்தியும், |
|
புறவுக் கரு அன்ன புன் புல வரகின் |
|
10 |
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி, |
குறு முயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு, |
|
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து, |
|
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி, |
|
அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு |
|
15 |
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், |
எம் கோன், வளவன் வாழ்க!' என்று, நின் |
|
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின், |
|
படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்; |
|
யானோ தஞ்சம்; பெரும! இவ் உலகத்து, |
|
20 |
சான்றோர் செய்த நன்று உண்டாயின், |
இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி, |
|
கொண்டல் மா மழை பொழிந்த |
|
நுண் பல் துளியினும் வாழிய, பலவே! |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
39 |
புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி |
|
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக் |
|
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக! |
|
ஈதல் நின் புகழும் அன்றே; சார்தல் |
|
5 |
ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந் திறல் |
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், |
|
அடுதல் நின் புகழும் அன்றே; கெடு இன்று, |
|
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து, |
|
அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால் |
|
10 |
முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு |
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள், |
|
கண் ஆர் கண்ணி, கலி மான், வளவ! |
|
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய |
|
வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங் கோட்டு |
|
15 |
இமயம் சூட்டிய ஏம விற்பொறி, |
மாண் வினை நெடுந் தேர், வானவன் தொலைய, |
|
வாடா வஞ்சி வாட்டும் நின் |
|
பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
43 |
நிலமிசை வாழ்நர் அலமரல் தீர, |
|
தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி, |
|
கால் உணவு ஆக, சுடரொடு கொட்கும் |
|
அவிர்சடை முனிவரும் மருள, கொடுந்சிறைக் |
|
5 |
கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து, ஒரீஇ, |
தன் அகம் புக்க குறு நடைப் புறவின் |
|
தபுதி அஞ்சிச் சீரை புக்க |
|
வரையா ஈகை உரவோன் மருக! |
|
நேரார்க் கடந்த முரண் மிகு திருவின் |
|
10 |
தேர் வண் கிள்ளி தம்பி! வார் கோல், |
கொடுமர மறவர் பெரும! கடு மான் |
|
கை வண் தோன்றல்! ஐயம் உடையேன்: |
|
'ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் |
|
பார்ப்பார் நோவன செய்யலர்; மற்று இது |
|
15 |
நீர்த்தோ நினக்கு?' என வெறுப்பக் கூறி, |
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும், |
|
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே; |
|
'தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல் |
|
இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும்' என, |
|
20 |
காண்தகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின், |
யானே பிழைத்தனென்; சிறக்க நின் ஆயுள் |
|
மிக்கு வரும் இன் நீர்க் காவிரி |
|
எக்கர் இட்ட மணலினும் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமப்பல் கண்ணணும் வட்டுப் பொருவுழி, கை கரப்ப, வெகுண்டு வட்டுக் கொண்டு எறிந்தானை, 'சோழன் மகன் அல்லை, என, நாணியிருந்தானைத் தாமப்பல் கண்ணனார் பாடியது.
|
46 |
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் |
|
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை, |
|
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி, |
|
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்; |
|
5 |
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த |
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி, |
|
விருந்தின் புன்கண் நோவுடையர்; |
|
கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழி, கோவூர் கிழார் பாடி, உய்யக் கொண்டது.
|
319 |
பூவல் படுவில் கூவல் தோண்டிய |
|
செங் கண் சில் நீர் பெய்த சீறில் |
|
முன்றில் இருந்த முது வாய்ச் சாடி |
|
யாம் கஃடு உண்டென, வறிது மாசு இன்று; |
|
5 |
படலை முன்றில் சிறு தினை உணங்கல் |
புறவும் இதலும் அறவும் உண்கெனப் |
|
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனான், |
|
முயல் சுட்ட ஆயினும் தருகுவேம்; புகுதந்து |
|
ஈங்கு இருந்தீமோ, முது வாய்ப் பாண! |
|
10 |
கொடுங் கோட்டு ஆமான் நடுங்கு தலைக் குழவி |
புன் தலைச் சிறாஅர் கன்று எனப் பூட்டும் |
|
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர், |
|
வேந்து விடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின் |
|
பாடினி மாலை அணிய, |
|
15 |
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே. |
திணையும் துறையும் அவை.
| |
ஆலங்குடி வங்கனார் பாடியது.
|