முகப்பு | தொடக்கம் |
பூழ்
|
214
|
'செய்குவம்கொல்லோ, நல்வினை?'
எனவே
|
|
ஐயம் அறாஅர், கசடு ஈண்டு காட்சி
|
|
நீங்கா நெஞ்சத்துத் துணிவு
இல்லோரே;
|
|
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
|
|
5
|
குறும்பூழ் வேட்டுவன் வறுங் கையும்
வருமே:
|
அதனால், உயர்ந்த வேட்டத்து
உயர்ந்திசினோர்க்கு,
|
|
செய்வினை மருங்கின் எய்தல்
உண்டு எனின்,
|
|
தொய்யா உலகத்து நுகர்ச்சியும்
கூடும்;
|
|
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல்
எனின்,
|
|
10
|
மாறிப் பிறப்பின் இன்மையும்
கூடும்;
|
மாறிப் பிறவார் ஆயினும்,
இமயத்துக்
|
|
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு,
|
|
தீது இல் யாக்கையொடு மாய்தல்
தவத் தலையே.
|
திணை பொதுவியல்;
துறை பொருண்மொழிக் காஞ்சி.
|
|
அவன்
வடக்கிருந்தான் சொற்றது.
|
321
|
பொறிப் புறப் பூழின் போர் வல்
சேவல்
|
|
மேந் தோல் களைந்த தீம் கோள்
வெள் எள்
|
|
சுளகிடை உணங்கல் செவ்வி
கொண்டு, உடன்
|
|
வேனில் கோங்கின் பூம் பொகுட்டு
அன்ன
|
|
5
|
குடந்தை அம் செவிய கோட்டு எலி
ஆட்ட,
|
கலி ஆர் வரகின் பிறங்கு பீள்
ஒளிக்கும்,
|
|
வன் புல வைப்பினதுவே சென்று
|
|
தின் பழம் பசீஇ ..........னனோ,
பாண!
|
|
வாள் வடு விளங்கிய சென்னிச்
|
|
10
|
செரு வெங் குருசில் ஓம்பும் ஊரே.
|
திணையும் துறையும்
அவை.
|
|
உறையூர்
மருத்துவன் தாமோதரனார் பாடியது.
|