முகப்பு | தொடக்கம் |
வரால் |
18 |
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் |
|
பரந்துபட்ட வியல் ஞாலம் |
|
தாளின் தந்து, தம் புகழ் நிறீஇ, |
|
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்! |
|
5 |
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய |
பெருமைத்தாக, நின் ஆயுள்தானே! |
|
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப் |
|
பூக் கதூஉம் இன வாளை, |
|
நுண் ஆரல், பரு வரால், |
|
10 |
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி; |
வான் உட்கும் வடி நீள் மதில்; |
|
மல்லல் மூதூர் வய வேந்தே! |
|
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும், |
|
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி, |
|
15 |
ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த |
நல் இசை நிறுத்தல் வேண்டினும், மற்று அதன் |
|
தகுதி கேள், இனி, மிகுதியாள! |
|
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் |
|
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே; |
|
20 |
உண்டி முதற்றே உணவின் பிண்டம்; |
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே; |
|
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு |
|
உடம்பும் உயிரும் படைத்திசினோரே; |
|
வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகன் |
|
25 |
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும் |
இறைவன் தாட்கு உதவாதே; அதனால், |
|
அடு போர்ச் செழிய! இகழாது வல்லே |
|
நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத் |
|
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே; |
|
30 |
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே. |
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.
| |
பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது.
|
249 |
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப, |
|
கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ, |
|
எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர் |
|
அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர, |
|
5 |
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு, |
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும், |
|
அகல் நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப் |
|
பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி, |
|
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே, |
|
10 |
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை, |
உயர் நிலை உலகம் அவன் புக,.... வரி |
|
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி, |
|
அழுதல் ஆனாக் கண்ணள், |
|
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
....................தும்பி சேர் கீரனார் பாடியது.
|
283 |
ஒண் செங் குரலித் தண் கயம் கலங்கி, |
|
வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉப் |
|
பௌவ உறை அளவா, |
|
..................................................................... வி மயக்கி, |
|
5 |
மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும் |
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும், |
|
வலம் புரி கோசர் அவைக் களத்தானும், |
|
மன்றுள் என்பது கெட... |
|
...........................................£னே பாங்கற்கு |
|
10 |
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க, |
உயிர் புறப்படாஅ அளவைத் தெறுவர, |
|
தெற்றிப் பாவை திணி மணல் அயரும் |
|
மென் தோள் மகளிர் நன்று புரப்ப, |
|
.....................................................ண்ட பாசிலைக் |
|
15 |
கவிழ் பூந் தும்பை நுதல் அசைத்தோனே. |
திணை தும்பை; துறை பாண் பாட்டு.
| |
அடை நெடுங் கல்வியார் பாடியது.
|
399 |
அடு மகள் முகந்த அளவா வெண்ணெல் |
|
தொடி மாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி |
|
காடி வெள் உலைக் கொளீஇ, நீழல் |
|
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி, |
|
5 |
மோட்டு இரு வராஅல் கோட்டு மீன் கொழுங் குறை, |
செறுவின் வள்ளை, சிறு கொடிப் பாகல், |
|
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன |
|
மெய் களைந்து, இனனொடு விரைஇ, |
|
மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல், |
|
10 |
அழிகளின் படுநர் களி அட வைகின், |
பழஞ்சோறு அயிலும் முழங்கு நீர்ப் படப்பைக் |
|
காவிரிக் கிழவன், மாயா நல் இசைக் |
|
கிள்ளிவளவன் உள்ளி, அவற் படர்தும்; |
|
செல்லேன் செல்லேன், பிறர் முகம் நோக்கேன்; |
|
15 |
நெடுங் கழைத் தூண்டில் விடு மீன் நொடுத்து, |
கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ் |
|
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன், அழிவு கொண்டு, |
|
ஒரு சிறை இருந்தேன்; என்னே! 'இனியே, |
|
அறவர் அறவன், மறவர் மறவன், |
|
20 |
மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன், |
இசையின் கொண்டான், நசை அமுது உண்க' என, |
|
மீப் படர்ந்து இறந்து, வன் கோல் மண்ணி, |
|
வள் பரிந்து கிடந்த.......................மணக்க |
|
விசிப்புறுத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை, |
|
25 |
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து, |
கடியும் உணவு என்னக் கடவுட்கும் தொடேன், |
|
'கடுந் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல் |
|
பகடே அத்தை யான் வேண்டி வந்தது' என, |
|
ஒன்று யான் பெட்டாஅளவை, அன்றே |
|
30 |
ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின் |
மீன் பூத்தன்ன உருவப் பல் நிரை |
|
ஊர்தியொடு நல்கியோனே; சீர் கொள |
|
இழுமென இழிதரும் அருவி, |
|
வான் தோய் உயர் சிமைத் தோன்றிக் கோவே. |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
தாமான் தோன்றிக் கோனை ஐயூர் முடவனார் பாடியது.
|