முகப்பு | தொடக்கம் |
தொலைதூரம்
வண்டியில் சேம அச்சு
|
102
|
'எருதே இளைய; நுகம் உணராவே;
|
|
சகடம் பண்டம் பெரிது
பெய்தன்றே;
|
|
அவல் இழியினும், மிசை ஏறினும்,
|
|
அவணது அறியுநர் யார்?' என, உமணர்
|
|
5
|
கீழ் மரத்து யாத்த சேம அச்சு
அன்ன,
|
இசை விளங்கு கவி கை நெடியோய்!
திங்கள்
|
|
நாள் நிறை மதியத்து அனையை; இருள்
|
|
யாவணதோ, நின் நிழல்
வாழ்வோர்க்கே?
|
திணை அது; துறை
இயன்மொழி.
|
|
அவன் மகன்
பொகுட்டெழினியை அவர் பாடியது.
|