முகப்பு | தொடக்கம் |
மயிலுக்குப் பேகன் போர்வை வழங்கிய குறிப்பு |
141 |
'பாணன் சூடிய பசும் பொன் தாமரை |
|
மாண் இழை விறலி மாலையொடு விளங்க, |
|
கடும் பரி நெடுந் தேர் பூட்டு விட்டு அசைஇ, |
|
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்! |
|
5 |
யாரீரோ?' என, வினவல் ஆனா, |
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல! |
|
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே, |
|
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே, |
|
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும் |
|
10 |
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும், |
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ, |
|
கடாஅ யானைக் கலி மான் பேகன், |
|
'எத் துணை ஆயினும் ஈத்தல் நன்று' என, |
|
மறுமை நோக்கின்றோ அன்றே, |
|
15 |
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே. |
திணை அது; துறை பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையும் ஆம்.
| |
வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.
|
145 |
'மடத் தகை மா மயில் பனிக்கும்' என்று அருளி, |
|
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை, |
|
கடாஅ யானைக் கலி மான் பேக! |
|
பசித்தும் வாரேம்; பாரமும் இலமே; |
|
5 |
களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ் |
நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி, |
|
'அறம் செய்தீமோ, அருள் வெய்யோய்!' என, |
|
இஃது யாம் இரந்த பரிசில்: அஃது இருளின், |
|
இன மணி நெடுந் தேர் ஏறி, |
|
10 |
இன்னாது உறைவி அரும் படர் களைமே! |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவள் காரணமாக அவர் பாடியது.
|