நீதிகளை எடுத்துரைக்கும்
அறிவுரைகளாகும். இன்னும் சில பழமொழிகளாய் அமைந்தவை.
அகநானூற்றில், 'பல்லோர் கூறிய பழமொழி'
(66) என்றும், 'தொன்றுபடு பழமொழி' (101)
என்றும்
புலவர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். இவற்றால் அக்காலத்தார் வழங்கிய பழமொழிகளையும்
புலவர்கள் தமது
வாக்கில் மேற்கொண்டனர் என்று
தெரிய
வருகிறது. ஆயினும், எவை
எவை பழமொழி என்று
உறுதியாகக் கூறுதல் அத்துணை எளிதன்று.
இதனை அடுத்து ஒவ்வொரு
நூலிலும் வந்துள்ள உவமைகள் எண்ணால்
குறிக்கப் பெற்றுள்ளன.
இவற்றைப் பாகுபடுத்திக் கொடுத்து, உவமை
பற்றிய மரபுகளையும் விளக்கி
உரைப்பதாயின்,
இத் தொகுதி மிக மிக விரிந்துவிடும்.
மேலும், அது தனி நூலாக அமைவதற்குரிய தகுதி
வாய்ந்ததும் ஆகும்.
இறுதியாக, உவமையைப் போன்றே பிற வருணனைப் பகுதிகளும் ஒருவாறு
பாகுபடுத்தி அமைக்கப் பெற்றுள்ளன.
இங்ஙனமாக, பாட்டு
தொகைகளைப் பயில்வார்க்குப் பல
வகையிலும் உதவியாக உள்ள பல
குறிப்புக்களை இத் தொகுதியில் காணலாம்.
மேலும், இத் தொகுதியில் இன்னும்
சேர்த்தற்குரிய
பொருள்களைக் குறித்து அறிஞர்கள்
தெரிவிப்பாராயின், அவற்றை
நன்றியுடன் ஏற்று, அடுத்த
பதிப்பில் இணைக்க
முயலுவோம். பாட்டு தொகைகளின் ஆராய்ச்சிக்கு
முதல்படியாகவேனும் இந்
நூல் உதவும் என்று
நம்புகிறோம்.
|