| விருந்தோம்பல்
குலமுறை பற்றாதது |
விருந்தோம்பல்
குலமுறை பற்றியது. |
| கல்வி
அனைவர்க்கும் பொது. |
கல்வி
பிராமணனுக்கே சிறப்பு |
| குற்றத்தண்டனை
நடுநிலை பற்றியது |
குற்றத்தண்டனை
குலமுறை பற்றியது. |
| அறம் என்பது
எல்லார்க்கும் பொதுவான நல்வினை |
தருமம்
என்பது வருணாசிரம ஒழுக்க வேறுபாடு |
| அறம்பெற
ஏழைகளெல்லாரும் உரியர் |
அறம்பெறப்
பிராமணரே யுரியர். |
| தமிழே தேவமொழி |
வடமொழியே
தேவமொழி |
| கோயில்
வழிபாடு தமிழில் இருத்தல் வேண்டும் |
கோயில்
வழிபாடு வடமொழியிலேயே நடைபெறல் வேண்டும் |
| இந்திய நாகரிகம்
தமிழரது |
இந்திய
நாகரிகம் ஆரியரது. |
| சிவமதமும்
திருமால் மதமும் வேறுபட்ட தமிழர் மதம். |
சிவமதமும்
திருமால் மதமும் ஆரிய இந்து மதக்
கூறுகள். |
| தாய் பசிப்பினும்
பழிக்கத்தக்க செய்யலாகாது |
எது செய்தும்
தாயைக் காக்கலாம். |
| இரப்பது
இகழ்ச்சி |
இரப்பது
இகழ்ச்சியன்று. |
| இல்லறத்தாலும்
வீடுபெறலாம் |
துறவறத்தால்
மட்டும் வீடு பெறலாம். |
| இல்லறம்
துறவறம் என வாழ்க்கை நிலை இரண்டு |
மாணவம்
மனைவாழ்க்கை, காடுறைவு, துறவு என வாழ்க்கை
நிலை நான்கு. |
| துறவறம்
எல்லார்க்கும் பொது. |
துறவறம்
பிராமணர்க்கே சிறப்பு |
| துறவுநிலை
ஒன்றே |
துறவுநிலைகள்
குடீசகம், பகூதகம், ஹம்ஸம், பரமஹம்ஸம் என
நான்கு. |