மிகைப் பாடல்கள் |
கரப்பவர் நீர்மைத்தாய் நண்பகலில் தோன்றல், இரப்பவர்கண் தேய்வேபோல் தோன்றல், இரப்பவர்க்கு ஒன்று ஈவார்முகம்போல் ஒளிவிடுதல்,-இம்மூன்றும் ஓவாதே திங்கட்கு உள.(புறத்திரட்டு. 1222) 1 பொருள் இல் ஒருவற்கு இளமையும், போற்றும் அருள் இல் ஒருவற்கு அறனும், தெருளான் திரிந்து ஆளும் நெஞ்சினான் கல்வியும்,-மூன்றும் பரித்தாலும் செய்யா பயன்.(புறத்திரட்டு. 1228) 2 சால் நெறிப் பாரா உழவனும், தன் மனையில் மானம் ஒன்று இல்லா மனையாளும், சேனை உடன் கொண்டு மீளா அரசும்,-இம்மூன்றும் கடன் கொண்டார் நெஞ்சில் கனா.3 ஏர்க் குற்றம் பாரா உழவனும், இன் அடிசில் பாத்திட்டு ஊட்டாத பைந்தொடியும், ஊர்க்கு வரும் குற்றம் பாராத மன்னும்,-இம் மூவர் இருந்திட்டு என்? போய் என், இவர்? |
|