பாலாய்
நாற்பது அதிகாரங்களாகப் பகுத்து உரையும் இயற்றினர். கடவுள் வாழ்த்தும் அவரே
இயற்றியதென்பர்.
2.
நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார் இயற்றியது. கடவுள் வாழ்த் துட்பட நூற்றொரு
வெண்பாக்களை யுடையது. ஒவ்வொன்றும் நந்நான்கு பொருளைக்
கூறும். நானாற்பது
கால
மிடம்பொருள் கருதி நாற்பான்
சால வுரைத்தல் நானாற் பதுவே
(இ-ள்.)
காலமும் இடமும் பொருளும்பற்றி நாற்பது வெண்பாப்
பொருந்த வுரைத்தல் நானாற்பதாம்.
காலம்பற்றி வருவது
கார்நாற்பது. இடம்பற்றி வருவது களவழி நாற்பது. பொருள்பற்றி வருவன
இன்னாநாற்பது இனியவைநாற்பது. இன்னலாக்குதலை இன்னாவென்றும் இனிமையாக்குதலை இனியவை யென்றுங் கூறினார். (இலக்கண விளக்கம், பாட்டியல் - 91
-சூ)
3.
இனியவை நாற்பது - மதுரைத் தமிழாசிரியர் மகனார்
பூதஞ் சேந்தனார் இயற்றியது. இன்ன தின்னது இனிதென்றுரைக்கும்
நாற்பது வெண்பாக்களை யுடையது.
4.
இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது. இன்ன தின்னது
துன்பந்தரும் என்றுரைக்கும் நாற்பது வெண்பாக்களையுடையது.
5.
கார்நாற்பது - மதுரைக் கண்ணங் கூத்தனார் இயற்றியது.
கார்காலத்து வருவேனென்று வினைமேல் சென்ற தலைவன்
வராமையின் தலைவி பிரிவாற்றாமல் வருந்துவதைக்
கூறும் நாற்பது வெண்பாக்களை யுடையது.
6.களவழிநாற்பது - பொய்கையார் இயற்றியது. போர்செய்து தோல்வியடைந்த கணைக்காலிரும் பொறையைப் பற்றிப் போய்ச் சோழன் செங்கணான் சிறையிலிட்டபோது பொய்கையார் களம்பாடி வீடுகொண்டார். இந் நூலின் பொருள், மேற்படி போர்க்கள
வர்ணனை அங்கங்கே காட்டியிருக்கும் உவமைகள் நிரம்ப
அழகானவை.
|