"தாழாது
செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்"
(புறம். 53)
எனப் பொருத்திலிளங்கீரனாரும்,
"நிலமிசைப் பிறந்த மக்கட் கெல்லாம்
புலனழுக் கற்ற வந்த ணாளன்
இரந்துசெல் மாக்கட் கினியிட னின்றிப்
பரந்திசை நிற்கப் பாடினன்"
(புறம். 127)
எனவும்,
"பொய்யா நாவிற் கபிலன்"
(புறம். 174)
எனவும் மாறோக்கத்து நப்பசலையாரும்
பாடியிருத்தல் காண்க.
இங்ஙனம் புலவரெல்லாரும்
போற்றும் புலமையும் சான்றாண்மையும் உடையராய
இவர்பால், அக்காலத்து வேந்தர்களும் வள்ளல்களும்
எவ்வளவு மதிப்பு வைத்திருத்தல் வேண்டும்! வரையா
வள்ளன்மையால் நிலமுழுதும் புகழ் பரப்பிய
பறம்பிற்கோமானாகிய வேள்பாரி இவரை ஆரூயிர்த்
துணையாகக் கொண்டொழுகினமையே, இவர்பால் அவ்
வள்ளல் வைத்த பெருமதிப்புக்குச் சான்றாகும்.
சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும்
வேந்தர் பெருமான், இவர் பாடிய ஒரு பத்துப்
பாடல்களுக்குப் பரிசிலாக நூறாயிரம் காணம்
கொடுத்ததன்றி, ஒரு மலைமீதேறிக் கண்ட
நாடெல்லாம் கொடுத்தான் என்றால், அவ்வரசன்
இவர்பால் வைத்த மதிப்பினை அளவிடலாகுமோ?
மாந்தரஞ்சேர லிரும்பொறை யென்ற சேரர்பெருமான்
இப் புலவர் பெருந்தகை தமது காலத்தில் இல்லாது
போனமைக்கு மனங்கவன்று ‘தாழாது, செறுத்த செய்யுட்
செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க்
கபிலன், இன்றுள னாயின் நன்றுமன்' என்று இரங்கிக்
கூறினன் இதுகேட்ட பொருந்தி லிளங்கீரனார் என்ற
புலவர் அவ்வரசனைப் பாடுங்கால் இதனைக் கொண்டு
மொழிந்தனர்.
இன்னணம் புலவரும், மன்னரும்
போற்றும் புகழமைந்த இவர் தொல்லாணை
நல்லாசிரியரும் ஆவர். இது, தமிழினை மதியாது
|