வாய்க்கப்பெறாத யானும் இதற்கோர் உரையெழுதுமாறு நேர்ந்தது. என்சிற்றறிவிற் கெட்டியவாறு பழைய பொழிப்புரையை முற்றிலும் தழுவிப் பதப்பொருள் கூறியும், இன்றியமையாத மேற்கோள்களும், இலக்கணங்களும் காட்டியும் இவ்வுரையினை வகுத்தமைக்கலானேன். பல சுவடிகள் பார்த்துப் பாடவேற்றுமையுங் காட்டப் பெற்றுள்ளது.

நம் தாய் மொழியாய அமிழ்தினு மினிய தமிழ்மொழியின் வளர்ச்சி கருதி அரிய தொண்டுகள் பல ஆற்றிவரும் திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரின் விருப்பமும், தூண்டுதலுமே என்னைக்கொண்டு இதனை இங்ஙனம் செய்வித்தன. இதிற் காணப்படும் பிழைகளைப் பொறுத்தருளுமாறு அறிஞர்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

இங்ஙனம்
ந. மு. வேங்கடசாமி.