| மிகைப் பாடல்கள் |
| அருளுடைமை, கொல்லாமை, ஐந்து அடக்கல், வாய்மை, இருள் அடையாக் கல்வியொடு, ஈகை, புரை இல்லா உள்ளத்தில் தீர்த்தம் இவை உளவாகப் பெற்றால்,- வெள்ளத்தில் தீர்த்தம் மிகை.(புறத்திரட்டு-146) 'அமையப் பொருள் இல்லார் ஆற்றாதார்' என்பது இமையத்து அனையார்கண் இல்லை;-சிமைய நகை ஏர் இலங்கு அருவி நல் வரை நாட! நகையேதான் ஆற்றுவிடும்.(புறத்திரட்டு-1107) அறியாமையோடு இளமை ஆவதாம்; ஆங்கே, செறியப் பெறுவதாம் செல்வம்;-சிறிய பிறைபெற்ற வாணுதலாய்!-தானே ஆடும் பேய், பறைபெற்றால் ஆடாதோ, பாய்ந்து?(புறத்திரட்டு-1139)
|
|