ஐந்திணை யைம்பது துறை, சொற்றொடர் விளக்கம். எண் - பக்கவெண் |
||
| வரைவு கடாதல் | மணம் புரிந்துகொள்ளும்படி தூண்டுதல். | 3 |
| வரைவு தலைவரல் | தலைமகனைச் சார்ந்தார் மணம் பேசி வரல். | 4 |
| வரைவு மலிதல் | மணப் பேச்சினை மேற்கொண்டு வரல். | 5 |
| தலைமகன் சிறைப்புறத்தானாக | பாங்கியிற் கூட்டத்தினின்றும் பிரிந்த தலைமகன் தினைப்புனஞ் செல்லுந் தோழியினையும், தலைவியையும் சோலையின் வேலிப்புறமாக நின்று நோக்கினனாக. | 6 |
| இயற்பழித்தல் | தலைவனின் அன்பாகிய இயல்பினைக் குறைத்துக் கூறல். | 6 |
| இயற்பட மொழிதல் | அன்பாகிய இயல்பு பொருந்துமாறு கூறல். | 6 |
| மெலிவில் நயம் | துன்பங் கலவாத இன்பம். | 7 |
| புணர்ந்து நீங்கும் | பாங்கியிற் கூட்டத்தாற் றலைவியைக் கூடிப் பிரியும். | 8 |
| பகற் குறி | தோழியினுதவியால் பகற்கண்ணே தலைமகனைத் தலைமகள் கண்டு கூடுமிடம். இது தினைப்புனத்தின் அருகிலுள்ள சோலைக்கண்ணதாகும். | 9 |
| படைத்து மொழி கிளவி | புதிதாக வொன்றை அமைத்துக் கூறுஞ் சொற்றொடர. | 9 |
| மன்றத் துறுகல் | பலர் கூடும் வெளியில் பலரும் அமர்தற்குரியதாகப் பொருந்திய கற்கள். | 11 |
| நிரைதொடி | கூடி நெருங்கிய வளையல்களை யணிந்த தலைமகள். | 12 |
| வெறியாட்டெடுத்தல் | வேலற்குப் பூசையிடல். | 15 |
| அறத்தொடு நிற்றல் | உண்மையினை எடுத்துச் சொல்லித் தவறாகக் காரியங்களை நிகழவொட்டாது நடத்தல். | 15 |
| செங்கதிர்ச் செல்வன் | சூரியன் | 17 |
| கொன்றைக் குழல் | கொன்றைப் பழத்தைத் துருவித் துளைத்துச் செய்த குழல். | 23 |
| செலவு | பொருள்வயிற் பிரிந்து செல்லுஞ் செலவு. | 28 |
| வரைவிடைப் பிரிவு | தலைமகளை மணத்தல் வேண்டி முலைவிலைக்காகப் பொருள் தேடுவான் தலைமகன்மேற் கொண்ட பிரிவு. | 31 |
| உடன்போதல் | தலைவனுடன் பாலைநில வழியாகப் புறப்பட்டுப் போகுதல். | 37 |
| செய் பெரு ஞ்சிறப்பு | பிறந்த புதல்வன் முகங் காண்டல், ஐம்படை பூட்டல், பெயரிடுதன் முதலியன. | 38 |
| உழலை மரம் | தொண்டுக்கட்டை ; அன்றி, தொழுவமரமெனலுமாம். | 41 |
| தம்முறு விழுமம் | தாமுற்ற துன்பம். | 45 |
| செவிலி மனப்போக்கு | காவலிற் கடுகுதல். | 51 |
| முத்தன்மை | படைத்தல், காத்தல், அழித்தல். | 52 |
| இடையீடு | தொடர்ச்சியற்ற நிலை. | 53 |
| அன்றில் | ஒருவகைப் புள் ; இஃது எக்காலும் இணைபிரியாது வாழு மியற்கையது. | 59 |