|
அருஞ்சொல் விளக்க அகரவரிசை |
|
| எண் | பாட்டு எண் |
| அசனம் - உணவு | 50 |
| அடு - போர்செய் | 18 |
| அம்பலம் - மண்டபம் | 51 |
| அயல் - வேண்டப்படுபவை | 14 |
| அலைக்களம் - வருத்தந்தரும் சிறைச்சாலை | 12 |
| அவம் - குற்றம் | 3 |
| அழிகதி - நரகம் | 67 |
| அறியலம் - தெரியேம் | 10 |
| அறை - பழிச்சொல் | 78 |
| அற்றார் - வறிஞர் | 9 |
| அஃகு - குறை | 27 |
| ஆடாமை - பயனில் சொற் பேசாமை | 13 |
| ஆம் - நீர் | 58 |
| ஆயு - ஆயுள் வாழ்நாள் | 32 |
| ஆர்வம் - அவா | 61 |
| ஆற்றல் - வலிமை | 26 |
| ஆற்று - தொண்டு செய் | |
| இடம்பட - கருத்துக்கள் தெளிவுற | 8 |
| இயை - நட்புக்கொள் | 47 |
| இயைவு - பிறவித்தொடர்பு | 3 |
| இழிகதி - நரகம் | 67 |
| இறந்தார் - கல்வி முதலிய வற்றாற் சிறந்தார் | 16 |
| இறை - தலைமை | 19 |
| இறை - பெருந்தன்மை | 19 |
| ஈடு - ஒப்பு வலிமை | 65 |
| ஈடு - செல்வம் | 74 |
| ஈரும் - வருத்தும் | 67 |
| ஈர்மணி - குளிர்ந்த மணி | 67 |
| ஈனம் - குறை | 70 |
| ஈனம் - குற்றம் | 34 |
| ஈன்கால் - பிள்ளை பெறும் பொழுது | 55 |
| உடன்றார் - பிணியில் வருந்துவோர் | 8 |
| உட்குடை - நாணம் | 13 |
| உண்கண் - மையணிந்த கண் | 14 |
| உலோபம் - ஈயாத்தன்மை | 61 |
| உளை - வருந்து | 56 |
| உள்ளன - உடைமை பொருள் | 33 |
| உறையுள் - இருக்கை இடம் | 9 |
| ஊனம் - குற்றம் | 32 |
| எஞ்சினார் - மீந்துளோர் | 31 |
| எய் - வறுமை | 33 |
| எல் - வெயில் | 52 |
| எள்ளாமை - இகழாமை | 4 |
| ஏய்க்கும் - ஒக்கும் | 7 |
| ஐங்களிறு - ஐம்பொறிகளெனும் யானைகள் | 11 |
| ஐந்து - ஐம்பொறிகள் | 11 |
| ஒல்லுவ - ஒப்ப போன்ற | 76 |
| ஓத்து - மறைநூலறிவு | 62 |
| ஓராமல் - எண்ணாமல் | 9 |
| ஓரான் - விரும்பான் | 20 |
| ஓர்வம் - ஒருபாற் சார்தல் | 61 |
| கணம் - சுற்றம் | 23 |
| கண்மை - கண்ணோட்டம் | 22 |
| கதம் - சினம் | 18 |
| கரியார் - வஞ்சகர் | 47 |
| கருஞ்சிரங்கு - கருங்கிரந்தி | 57 |
| கலவி - உலகத்தோடு கலத்தல் உலகப்பற்று | 4 |
| களி - செருக்கு | 5 |
| காம் - காமம் என்பதின் சுருக்கம் | 58 |
| காயாமை - சினவாமை | 15 |
| கார்ப்பார் - வெறுக்கப்பட்டார் | 54 |
| காலன் - இயமன் | 37 |
| கிளவி - சொல் | 15 |
| குறள் - புறங்கூறல் | 28 |
| கூடம் - கரவு வஞ்சனை | 17 |
| கூர்த்த - மிக்க | 2 |
| கூர்ந்து - பெருகி | 46 |
| கூவல் - கிணறு | 51 |
| கூழ் - செல்வம் | 23 |
| கூறு - பங்கு | 78 |
| கூற்றம் - சொல் | 1 |
| கைத்து - செல்வம் | 53 |
| கொன்னே - வீணாக | 20 37 |
| கோலம் - அழகு | 23 |
| சாயல் - நற்சொற்கள் | 28 |
| சால - மிகுதியும் | 38 |
| சாலும் - படியும் | 74 |
| சிதை - கீழ்மை | 34 |
| சீத்து - சீர்திருத்தி | 44 |
| சுலாவு - கடுஞ்சொற்கள் | 43 |
| செயிர் - குற்றம் | 45 |
| செற்றம் - பகைமை | 34 61 |
| சோர்வு - குற்றம் | |
| தண்டம் - போர் | 18 |
| தலை - தலைவன் கணவன் | 78 |
| தளை - விலங்கு காற்பூட்டு | 56 |
| தாழா-சோர்வுறா | 24 |
| துப்பு -செல்வம் | 35 |
| துன்னி - பொருந்தி | 16 |
| தூப்பு - தூய்மை சுத்தம் | 54 |
| தொக்கு - தொகுத்து | |
| தொழுநோய் - குட்ட நோய் | 57 |
| நச்சாமை - விரும்பாமை | 12 |
| நவை - குற்றம் | 77 |
| நாவலந்தீவு . இந்தியநாடு | 56 |
| நாவில்லார் - ஊமையர் | 63 |
| படர் - பசிப்பிணி | 4 |
| பண் - யாழிசை | 15 |
| பண்டாரம் - கருவூலம் | |
| பொருள் வைக்குமிடம் | 4 |
| பரி - விரும்பு | 47 |
| பறி - வெறித்திடு | 47 |
| பாடு - பெரும்புகழ் | 4 |
| பாடு - துன்பச்செயல் | 21 |
| பாடு - பயன்படுத்தல் | 41 |
| பாத்து - உரிமை | 25 |
| பாத்து - பிரிவு | 73 |
| புரக்கும் - வளர்க்கும் | 30 |
| புலை - இழிவு | 38 |
| புல்லான் - இணங்கான் | 42 |
| புழை - புலம் தங்குமிடம் | 11 |
| பூண்டு - காத்து | 30 |
| பெருஞ்சிரங்கு - கழலை | 57 |
| பேண் - விருப்பம் | 63 |
| பொறை - சுமை | 71 |
| மகரம் - சுறாமீன் வடிவுடைய காதணி | 43 |
| மடம் - அறியாமை | 8 |
| மடி - சோம்பல் | 17 |
| மண் - நாடு | 46 |
| மண்டிலம் - பிறவிச் சுழல் | 72 |
| மதி - அறிவு | 26 |
| மத்தம் - களிப்பு | 31 |
| மறலை - சிற்றறிவினன் | 28 |
| மறுதலை - தீமை (இவண் தீமை செய்வார்) | 16 |
| மறுதலை - எதிரான | 29 |
| மறுதலையார் - வெளியூரார் | 71 |
| மறுவரவு - குற்றம் | 75 |
| மறை - மறுத்தல் | 6 |
| மாண்டவர் - சான்றோர் | 30 |
| மாண்டு - புகழ்பெற்று | 26 |
| மாற்றார் - பகைவர் | 58 |
| மாற்று அரவம் - பகைவர் சொல் | 48 |
| மான்வேட்டம் - விலங்குகளை வேட்டையாடல் | 18 |
| மான்றார் - பித்தர் | 55 |
| முச்சாரிகை - தேர் யானை குதிரை | 12 |
| முடி - அரசு | 17 |
| முருந்து - மயிலிறகின் அடி | 7 |
| முள் - கூர்மை | 7 |
| முனை - போர்க்களம் | 62 |
| மூங்கை - ஊமை | 19 |
| மென்பு - மென்மைமிகு புலமைத்திறன் | 68 |
| மை - குற்றம் | 66 |
| யாக்கு நண்பராக்கு | 8 |
| யாக்கும் - பழக்குவிக்கும் | 12 |
| வகுத்து - புகழ்பெற்று | 49 |
| வயிற்றுத்தீ - வயிற்றெரிச்சல் யானைத்தீ என்னும் கடும் பசியுமென்பர் | 57 |
| வலி - வன்மை | 21 |
| வல்லை - உறுதியாக | 177 |
| வழிப்புரை - வழிப்போக்கர் தங்குமிடம் | 51 |
| வழிவந்தார் - உயர்குடிப் பிறந்தார் | 1 |
| வளமை - செல்வம் | 21 |
| வளி - வாதநோய் | 55 |
| வள் - பணம் | 50 |
| வன்கண்மை - ஆண்மை | 17 |
| வார்குத்து - வெள்ளநீர் தங்கிச் சுழியெழும் நீர்நிலை | 12 |
| வால் - தூய்மையான | 44 |
| வானகத்தார் - வானுலகத்திலுள்ளார் இவண் தென்புலத்தார் | 71 |
| விண்டவர் - உலகப் பற்றுக்களை நீக்கியவர் சான்றோர் | 4 |
| விழைவு - கலவி | |
| வீந்து - அழிந்து | 10 |
| வீழப்படுவர் - விரும்ப்பப்படுவர் | 36 |
| வெகுடல் - சினத்தல் | 27 |
| வெங்கோலான் - கொடுங்கோலரசன் | 10 |
| வெஃகல் - பிறர் பொருள் கவர்தல் | 27 |
| வேறல் - வெல்லல் | 39 |
| வேற்று அரவம் - தீச்சொல் | 49 |
| வைசிரவணன் - குபேரன் | 48 |