சிரியருக்கும் ஆசிரியரா யிருந்தமையால் தமிழ்ப் பெரும்புலவராயும் விளங்கியவர் என்பது அறியற்பாலது. இந்நூலாசிரியருக்குக் ‘கணிமேதாவியார்' என்ற மற்றொரு பெயருமுண்டு.

கழகத் தமிழ்ப் புலவராயிருந்த காலத்தில் திருவாளர் தி. சு. பாலசுந்தரம் பிள்ளை என்னும் இளவழகனாரவர்கள் இந்நூலுக்கு எழுதிய உரையைப் பழைய பொழிப்புரையுடனும், பாளையங்கோட்டை அர்ச் சவேரியர் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர் வித்துவான் திருவாளர் பு. சி. புன்னைவனநாத முதலியாரவர்கள் எழுதிய சில குறிப்புக்களுடனும் வெளியிடுகின்றோம். தமிழறிஞர்கள் இப்பதிப்பினை வாங்கிப் போற்றி எங்கட்கு ஊக்கமளிப்பார்களாக.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.