அருஞ்சொல் அகரவரிசை

அஃகுதல் - குறைதல்
அட்டில் - மடைப்பள்ளி
அணங்கு - தெய்வம்
அரவம் - ஆரவாரம்
அல்கு அந்தி - மாலைப்பொழுது
அழுக்கு - பொறாமை
அழுங்குதல் - கலங்குதல்
அளை - புற்று
     
ஆசாரம் - ஒழுக்கம்
ஆதுலன் - வறியவன்
ஆள்வினை - முயற்சி
ஆன்நிலை - பசுக்கள் நிற்குமிடம்
     
இகந்து - கடந்து
இடுக்கண் - துன்பம்
இணைவிழைச்சு - புணர்ச்சி
இலங்குநூல் - மறைநூல்
இல்லார் - வறியவர்
இருதேவர் நாள் - சிவன், திருமால் நாளாகிய
 ஆதிரையும் ஓணமும்
இழுக்கம் - துன்பம்
இறந்து - நெறிகடந்து
     
உகுதல் - சிந்துதல்
உஞற்றுதல் - குறும்பு செய்தல்
உமிதல் - உமிழல்
உய்த்து - செலுத்தி
உவா - பூரணை, அமாவாசை
உளர்தல் - தடவுதல்
உளி - உள்ளி, நினைந்து
உறுகண் - துன்பம்
உறுத்துதல் - செலுத்துதல்
உறைதல் - தங்குதல்
உன்னித்து - நினைத்து
எள்ளி - ஏளனம்பண்ணி
ஏக்கழுத்தம் - இறுமாப்பு
ஏதம் - துன்பம்
ஒட்டார் - பொருந்தார்
ஒப்புரவு - உலகநடை
ஒழுக்கு - நெறி
ஒள்ளியம் - அறிவுடையோம்
கசிவு - அன்பு
கட்டுரை - உறுதிமொழி
கண்வளர்தல் - தூங்குதல்
கதம் - வேகம்
கருங்கலம் - கரிச்சட்டி
கறுத்த - கோபித்த
காட்சி - அறிவு
காயார் - வெகுளார்
கான்றல் - வாந்தி பண்ணல்
கிழமை - உரிமை
குரவர் - பெரியோர்
குறளை - கோட்சொல்லல்
கோடி - புத்தாடை
கோட்டி - அவை, சபை
சிறை - பறவை
சீயம் - சிங்கம்
சுடலை - சுடுகாடு
செகுத்தல் - அழித்தல்
செத்தல் - பழமை
செவ்வி - தக்கசமயம்
செறல் - கோபித்தல்
சொறிதல் - பிறாண்டுதல்
சோரல் - ஒழுக்கம்
சோர்வு - தவறுதல்
தந்திரம் - நூன்முறை
தம்முன் - தமயன்
திட்பம் - உறுதி
திமிர்தல் - பூசுதல்
திளைத்தல் - அமுங்குதல்
துய்க்க - அருந்துக
துவைத்த - சேர்த்துவைத்த
துனியார் - கலகங்கொள்ளார்
தெறுவருதல் - வெகுள்தல்
தேசு - விளக்கம்.
தேர்தல் - ஆராய்தல்
தொலைவு - கேடு
நடுக்கு  - சோர்வு
நந்தல்  - பெருகுதல்
நந்துதல் - அவிதல்
நல்குரவு - வறுமை
நாள் அந்தி - விடியற்காலை
நான்மறையாளர் - அந்தணர்
நிரயம் - நரகம்
நிரல் - வரிசை
நிலத்துளக்கு - பூமியதிர்ச்சி
நிறை யுவா - பூரணை
பகற்கிழவோன் - ஞாயிறு
படிறு - வஞ்சனைச் சொல்
பட்டி உரை - நாவடக்கமில்லாத சொல்
பரந்து - விரித்து
பள்ளி - படுக்குமிடம்
பாரித்து விரிவாக்கி
 பிழையாத - தவறாத
புலர்தல் - காய்தல்
புலை - கீழ்மகன்
புழைக்கடை - வீட்டின் பின்புறம்
 பூசல் - துடைத்தல்
பைங்கூழ் - பயிருள்ள நிலம்
பொச்சாவார் - மறவார்
மடுத்து - அடைந்து
 மண்டலம் - வட்டம்
மறையுவா - அமாவாசை
மன்றம் - சான்றோர் அவை
மாசுணி - அழுக்காடை
மீக்கூற்றம் - மேலான சொல்
மீக்கோள் - மேற்பார்வை
முகட்டுவழி - வாயிற்படி
முதுமரம் - முற்றிய மரம்
முளிபுல் - முற்றிய புல்
மேதை - அறிவு
வடு - தழும்பு, பழி
வண்ணம் - அழகு
வளர்தல் - தூங்குதல்
வளி - காற்று
வாலாமை - தூய்மையின்மை
விகிர்தம் - ஒருவன் பேச்சு செயல் முதலியவற்றை
           அங்ஙனமே இகழ்ந்து செய்து காட்டல்
விழுமம் - சிறப்பு
விழைச்சு - விருப்பம்
வீழ்மீன் - எரிநாள்
வீளை - கனைத்தல் முதலியன செய்தல்
வெகுளல் - சீறுதல்
வெண்பலி - சாம்பல்
வௌவல் - கைக்கொள்ளல்