பாற்படுத்துவதற்குத் தகுதியாம். அதன்பின் இவ்விரு நூல்களும் தனித்தனியாகப் பதிக்கவும் வாய்ப்பாகும். இருநூற்கும் ஒருவரே உரை வரைந்தால்தான் நூலின் உயர்வு தாழ்வு காண்பார்க்குத் தெற்றென விளங்கும். இன்னோரன்ன கருத்துக்களை யுட்கொண்டு கழகம் வெளியிடக் கருதிற்று. கழகப் புலவர்களில் ஒருவரான பண்டித வித்துவான் தி.சங்குப் புலவரால் உரை வரைவித்துப் புதுமுறையிற் பதிப்பித்து வெளியிடுகின்றனம். இவ்விரு நூல்களில் உள்ள கவிகள் ஒவ்வொன்றும் எளிதிற் பொருள் காண வியலாதவை. கொண்டு கூட்டிப் பொருள் காணும் இயல்புடையன. செந்தமிழ்ப் பற்றுள்ள செல்வர் எவர்க்கும் இவை புது விருந்தாம். கழகத்தின் வாயிலாக
இருநூல்களும் இப்போது தான் வெளியேறுகின்றன.
தமிழ்
நாட்டுச் செல்வர்களும் தாய் மொழிப் பற்றுடைய அறிஞர் பலரும் இந் நூல்களை வாங்கிக் கற்றுப் பண்டைக்கால வழக்கம் ஒழுக்கம் அறிந்து நல்வாழ்வு பெற
விழைகின்றனம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார். |