அழுவம்-பரப்பு: விரிவு 7 - 125
அழுவிளிப்பூசல்-அழுவோர்
முழக்கம் 6 - 73
அளக்கர் - கடல் 17 - 12
அளவைவாதி - பிரமாணவாதி 27 - 3
அளை - துவாரம்: துளை 20 - 99
அளைஇய - கலந்த 5 - 63
அறந்தரு நெஞ்சோடு அருள் 13 - 54
அறம் - தருமம்: துன்பங்களை
அறுத்தலையுடைய
தென்று பொருள் (பதிகம்) 72
அறல் - மணல்: நீரால்
அறுத்து இருப்பது என்பது
பொருள் 8 - 11
அறவி - அறநெறி 21 - 105
அறவி - அறம் 12 - 55
அறன் ஒடு - அறவோடாகிய
அமுதசுரபி 21 - 158
அறுகு - அறுப்பேன்; நீக்கு
வேன்: (செய்கென் வாய்
பாட்டுத் தன்மை பொருமை
வினைமுற்று) 30 - 264
அறுகை - அறுகம்புல் 12 - 60
அறுவை - உறி 6 - 93
அறைதல்-சொல்லுதல் 16 - 44
அறைபோதல் - ஓட்டை
யாதல்; உள்ளம் அழிதல் 18 - 130
அற்பு - அன்பு 26 - 7
அற்புதக்கிளவி - வியப்புடைய
மொழி 21 - 8
அற்புதப் பாவை 7 - 95
அற்புதம் - வியப்பு 7 - 95
அனந்தர்-கள்ளுண்ட
மயக்கம் 7 - 72
ஆ - பசு 14 - 104
ஆகம அளவை - உரையளவை:
உரைப்பிரமாணம் 27 - 43
ஆகமவிருத்தம் - நூலில்
கூறும் அற முதலியவற்றை
நம்பா துகூறுதல் 29-164
|
ஆகம்
- மார்பு 20 - 100
ஆசனம் - இருக்கை 29 - 295
ஆசீவகம் - ஆசீவகம் என்னும்
சமயநெறி 27 - 108
ஆடி - கண்ணாடி 19 - 90
ஆடி - பளிங்கு 8 - 47
ஆணு - அன்பு (பதிகம்) 17
ஆண்டலை-ஆண்மகன் தலை
போன்ற வடிவுள்ள ஒரு
வகைப் பறவை 6 - 77
ஆண்டு - அவ்விடம்: அவ்வுலகம் 14 - 38
ஆயம் - கூட்டம் 7 - 54
ஆயம் - சிலதியர்: பணிப்
பெண்கள் 24 - 89
ஆயிதழ்-அழகிய இதய் 19 - 88
ஆயிரங்கண்ணோன் - இந்திரன் 14 - 53
ஆரங்கண்ணி-ஆத்திமாலை 4 - 50
ஆரஞர் - மிக்க துயரம் 14 - 8
ஆரணங்கு-அரிய தெய்வத்
தன்மை 17 - 53
ஆரணம் - மறை; வேதம் 13 - 4
ஆரம் - மாலை 19 - 85
ஆராமம்-பொழில்; சோலை;
உவவனம் 3 - 32
ஆரிடை - அரியவழி 13 - 42
ஆரியன் - குரவன்; பெரியோன்:
ஈண்டுப் புத்தன் 25 - 6
ஆரிருள்-மிக்க இருள் 22 - 187
ஆருயிர் மருந்து - சோறு:
நிறைந்த உயிருக்கு மருந்த
போல் உதவுவதென்பது
பொருள் 16 - 135
ஆருயிர் மாக்கள் - அரியஉயி
ரையுடைய மக்கள் 19 - 45
ஆர் - ஆத்திமாலை 19 - 125
ஆர் இடர் - மிக்க துன்பம்
அரிய துன்பம் 6 - 160
ஆர்த்தல் - அருத்தல்; உண்ணச்
செய்தல் 12 - 93
ஆர்ப்பு - ஆரவாரம் 27 - 213
ஆலமர் செல்வன் - சிவ
பெருமான் 3 - 144
ஆவம் - அம்புப்புட்டில் 20 - 63 |