அவை அடக்கம்  

2.நோய்க்கு உற்ற மாந்தர் மருந்தின்
     சுவை நோக்க கில்லார்
தீக்குற்ற காதல் உடையார்
     புகைத் தீமை ஓரார்
போய்க்குற்றம் மூன்றும் அறுத்தான்
     புகழ்கூறுவேற்கு என்
வாய்க்கு உற்ற சொல்லின் வழுவும்
     வழு அல்ல அன்றே.