முகப்பு
 
தொடக்கம்

ii

அவற்றுள் உரையில்லாத பகுதிகளாகிய தற்சிறப்புப்பாயிரம் குருகுலச்சருக்கம்
சம்பவச்சருக்கம் என்ற இவைகட்குப் புதிதாக உரையெழுதிச் சேர்த்தும்,
உரையுள்ள பகுதிகளைப் பார்வையிட்டுச் சில திருத்தங்கள் செய்தும்
சங்கப்பதிப்பிலுள்ள பாடல்களோடு ஒத்துப்பார்த்து அப்பதிப்பிற் சிறப்புற்றிருந்த
பாடல்களை மேற்கொண்டும் வியாசபாரதம் பாலபாரதம் என்ற இவைகட்கும்
இந்நூற்கும் உள்ள ஒற்றுமைவேற்றுமைகளை ஆங்காங்குக் குறிப்பிட்டும்
மூலமும் உரையுமாக இந்த ஆதிபருவத்தை வெளியிட்டுள்ளேன்.
இந்நூலாசிரியரின் குமாரராகிய வரந்தருவார் இயற்றிய சிறப்புப்பாயிரப்
பாடல்களையும் முகப்பிற் குறிப்புரையோடு வெளியிட்டுள்ளேன். இப்பதிப்பில்,
அரும்பதவகராதி முதலியன, அபிதானசூசிகையகராதி, சில அருந்தொடர்கள்,
செய்யுள் முதற் குறிப்பகராதி என்பனவும் இறுதியிற் சேர்க்கப்பட்டுள்ளன.

வில்லிபாரதத்தின் முதனூலைப்பற்றிய ஆராய்ச்சி:-‘ வில்லிபுத்தூரார்
பாடிய இந்தப்பாரதம், வியாசபாரதத்தை முதனூலாக் கொண்டதென்று
நூலாசிரியரே கூறியிருந்த போதிலும், வடமொழியில் அகஸ்தியப்பட்ட
ரென்பவரியற்றியுள்ள பாலபாரத மென்னும் காவியத்தின் பொருளமைதியோடு
பலவிடத்தும் ஒத்திருக்கின்றது: ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து இந்நூலுக்கும்
அந்நூலுக்கும் இடையிடையே பலவேறுபாடுகளும் உள்ளனவாயினும் சிற்சில
விடங்களில் இந்நூல் அந்நூலின் மொழிபெயர்ப்பென்றே சொல்லலாம்படி
யுள்ளது’  என்று கூறி, இற்றைக்கு நாற்பத்துஏழு வருடங்கட்குமுன் பரமபதித்த
எனது ஆசிரியர் ஸ்ரீ. உ. வே. வை. மு. சடகோபராமாநுஜாசார்ய ஸ்வாமி தாம்
பரமபதிப்பதற்கு ஏறக்குறைய இருபது வருஷங்கட்கு முன்னர்க் கண்டுபிடித்து
வெளியிட்டுள்ளார். உதாரணங்களும் ஆதிபருவசரிதத்தைக் கூறுமிடத்தினின்று
காட்டியுள்ளார். இவ்வுண்மையை நூல் முழுவதும் ஒப்பிட்டுப்பார்த்துக்
கண்டறியவேணுமென்ற அவாத்தோன்றியும், பார்த்தற்குப் புத்தகமும்
அவகாசமும் கிடைக்காமலிருந்தன. இந்த ஆதிபருவத்தை முதன்முதலில்
அச்சிடத்தொடங்கியபோது அந்நூல் கிடைத்தமையால், ஆதிபருவம்
முழுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.

பாலபாரதமென்பது வடநூல் அகஸ்தியகவியினால் வடமொழியிற்
பாண்டவசரித்திரத்தைத் தொகுத்துக் கூறும் பத்தியகாவியமாகும்: அது -
இருபதுசருக்கங்களைக் கொண்டது. குலமுதல்வனான சந்திரன் பிறப்புமுதல்
பாண்டவர் மேலுலகஞ் சேர்ந்தது வரையிலுமுள்ள சரித்திரம் முழுவதையும்
தொகுத்துக்கூறுவது. அவற்றுள் முதலாறு சருக்கங்கள், ஆதிபருவத்துச்
சரிதையைக் கூறுவனவாகும். இந்த ஆறுசருக்கங்களையும் ஊன்றிப்படித்துப்
பார்த்ததில் அப்பாரதத்தின் மொழிபெயர்ப்பு வில்லிபாரதமென்று சொல்லலாம்.
முக்கால்பகுதி பாலபாரதத்தோடு ஒத்துள்ளது.ஆனால், காண்டவதகனச்
சருக்கத்திலோ ஒன்றுக்குப் பாதிதான் அங்ஙன்சொல்லத்தக்கது: மற்றவை
வில்லிபுத்தூரார் தமது கற்பனாசக்தியினால் உரைத்த பாடல்களாகும். மொழி


முன் பக்கம்

அடுத்த பக்கம்