- 30 -

தங்கரர் முதலானோர் நின்று தவம்புரிந்த இடங்களைத் தரிசித்து வணங்குவது; அவ் விடங்களில் அவர்களின் ஞாபகார்த்தமாகப் பாதம் முதலியவற்றைப் பொறித்து வைப்பர்; அவற்றை வணங்கி வழிப்படுவது வழக்கம். அ+இடை-ஆயிடை; ‘சுட்டு நீளின் யகரமுந் தோன்.றுதல் நெறியே’ என்றதனால், சுட்டு நீண்டு யகரவுடம்படுமெய் வந்தது. ஐஞ்ஞூற்றுவர், போலி,  ஓடு, மூன்றாம்வேற்றுமை உடனிகழ்ச்சி.  (19)                                

சங்கத்தார் உபவாச தவம் கைக்கொள்ளுதல்

24. வந்துமா நகர்ப்பு றத்தோர் வளமலர்ப் பொழிலுள் விட்டுச்
  சிந்தையா னெறிக்கட் டீமை தீ்ர்த்திடும் நியம முற்றி
  அந்திலா சனங்கொண்டண்ண லனசனத் தவன மர்ந்தான்்
  முந்துநா முரைத்த சுற்ற முழுவதி னோடு மாதோ.

(இ-ள்.) அண்ணல் - தலைவராகிய சுதத்தாசார்யர், வந்து-(சங்கமுடன்) வந்து, மாநகர்-சிறந்த இராஜமாபுரத்தின், புறத்து - வெளியேயுள்ள, ஓர்வளமலர்பொழிலுள் - வளவிய மலர்நிறைந்த ஒப்பற்ற சோலையினுள், விட்டு-தங்கி, முந்து நாம் உரைத்த சுற்றம் முழுவதினோடும்-மேலே நாம்கூறிய அருந்தவர் உபாசகர் என்ற தம்மைச் சூழ்ந்துள்ளயாவருடனும், நெறிக்கண்தீமை-(நடந்துவந்த) வழியில் (தம்மையறியாது) நிகழ்ந்த தீமைகளை, தீ£த்திடும் நியமம் - நீக்குவதற்குக் - காரணமான நியமவிரதத்தினை (ஏற்று), சிந்தையால் முற்றி-(குறித்த காலம் வரை) தியானத்திலிருந்து முடித்துப்(பின்பு), அந்தில் - அவ்விடத்தே, ஆசனம் கொண்டு - தமக்கு உரிய ஆசனத்தில் வீற்றிருந்து,அனசனத்தவம் அமர்ந்தான் - உபவாச தவத்தை (யாவருடனும்) மேற்கொண்டார்.(எ-று.)

சுதத்த ஆசாரியர், சோலையில் தங்கிச் சுற்றம் முழுவதினோடும் நியமமுற்றி, உபவாசத்தையும் மேற்கொண்டாரென்க.

அண்ணல், சுற்றம் முழுவதினோடும் வந்து முற்றி அமர்ந்தான் என இயைக்க. விடுதல் - தங்குதல் ‘ பொன்னெயில்