| 
 உறுதி மொழி, என்னை - ஏன் ? 
 என்றாள் - என்று அபயமதி கூறினாள்.   (எ-று.) அண்ணலே, இவ்வுடலும் உடலைச் சார்ந்த 
 பொருளும் நமது என்று எண்ணுமவர்க்கே நீர் கூறிய அறவுரை பொருத்தமாகும்; பற்றறரத் துறந்த 
 நமக்கு வேண்டாஎன்றன ளென்க. ‘ஆகும்‘ என்று ஒரு சொல் வருவிக்க.  
 அருளிற்று-அருளிச் செய்தது.  மெய்-உடல்.  இவ்வுடல், [மூளை 
  
 | “எலும்புதோல் ஈருள் வெண்ணஞ்சூன் 
 குடலர்மலங்கண் |   
 | கலந்தநெய்த்தோர் நரம்பு வழுப்பிவை வேறுகண்டால் |   
 | விலங்கிமேற் சேரலின்றி வெறுத்துமிழ்ந் துவர்த்து”* |  விடு மியல்பினதாத லானும், 
  
 | “துன்னும், புழுப்பிண்டமாகிப் புறஞ்செய்யுந் 
 தூய்மை |   
 | விழுப்பொருளை வீறழிப்பதாகி - 
 அழுக்கொழுகு |   
 | மொன்பது வாயிற்றா மூன்குரம்பை”  
 1 ஆதலானும் |  ‘அருவருப் புடைய மெய’ என்றார். 
 உறுதி - உறுதிப் பொருள்;  வீடு பேற்றிற்குரிய அறப்பொருள். விண் - தேவருலகம்.  
 தேவசுகமும் பிறவிக்கு ஏது வாகலின், ‘விண்ணின்மே லின்ப மல்லால் விழைபயன்‘  என்றார்.  
 இங்ஙனே, ‘விண்ணின்மே லின்பமே விழைந்த வேட்கையான்‘ 2என்று 
 சிந்தாமணியாரும் கூறினார், ‘வானோர்க்குயர்ந்த வுலகம் புகும’ 3 
 என்று தேவர்கூறியதும் இக்கருத்தே யென்ப.  முன்னரே பற்றற்றுத் துறவு பூண்டவராதலால், 
 ‘வெறுத்து நின்ற’ என்று இறந்தகாலத்தாற்கூறினார். விழைவு - ஆசைப்பெருக்கம்.  கட்டுரை 
 - உறுதி மொழி. என் - என்று எண்ணுகின்ற.  என்னை, யாது பயன்.  அருளிற்றெல்லாம் 
 என்றது, யசோ. 32 முதல் 44 -   வரை கூறியதனை.  இனி, ‘விண்ணின்மே 
 லின்பமல்லால் விழைபயன் வெறுத்து நின்ற‘ என்ற தொடர், ‘நங்கட்கு‘ என்பதனோடு இயையாமல், 
 அபயரு 
  
 | * மேரு 
 857. 1 
 திருமங்கலம்-72. 2 
 சீவக.2742. 3 
 குறள் 346. |  |