- 86 -

காதி நாலர சழிந்தன வழிதலுங் கைவல வொருநான்மை போதி யாதிகள் புணர்ந்தன‘ எனவும்.

இறந்த காதிக ணான்மையு மழிந்த வக்கணத்தே நிறைந்த நான்மையும்‘  (மேரு.170,129.) எனவும்

  ‘கூடிய மும்மையுஞ் சுடர்ந்த கொந்தழல்
  நீடிய வினைமா நிரைத்துச் சுட்டிட
  வீடெனப் படும்வினை விடுதல் பெற்ற தங்
  காடெழில் தோளினா யனந்த நான்மையே’. (சீவ 2846.)

எனவுங் கூறுவதனாலறிக.

திரு-மோக்ஷலட்சுமி.  திளைத்தல்-இன்பம் நுகர்தல்

  ‘கேவலமடந்தை யென்னும்...பொன்னொரு பாக
  காவலன்றானொர் கூறாக் கண்ணிமையாது புல்லி [மாகக
  மூவுலகுச்சி யின்பக் கடலினுண் மூழ்கினானே.‘

(சீவக. 3117-ல்) என்று கூறியது ஈண்டு நோக்கற்பாலது.

    ஆதிபகவன் என்று வழங்கும் விருக்ஷபதேவர் முதலாகமஹாவீரர் ஈறாகவுள்ள ஈரபத்து நால்வரும் தீர்த்தங்கரர்* என்று வழங்கப்பெறுவர்.  இதனை,               

  ‘கொண்மூ வொருபருவம் பொழிந்தாங் கிருகொட்பி
  ருண்மூவிருவகைக் காலத்திடை யுலகுய்யக்கொள்ளும்
  எண்மூவரும்... ஈசர்‘  (திருநூ. 97-ல்) என்ற
  செய்யுளிலும், ‘அறுநால்வர்‘ என்ற ஏலாதி  கடவுள்

வாழ்த்திலும்கூறுவதனாலறியலாகும். (49)                          

 

*

1. விருஷபர்,

2. அஜிதர்

3, சம்பவர் 

4.  அபிநந்தனர்.

5. ஸுமதி நாதர்,

6.பத்ம பிரபர்,

7. ஸுபார்சுவர்,

8. சந்திரப்ரபர்

9.  புஷ்பதந்தர்,

10. சீதளர்,

11. ஸ்ரேயாம்ஸர்,

12. வாஸு பூஜ்யர்,

13. விமலர்,

14. அனந்தர்,

15. தர்மநாதர்

16. சாந்தி நாதர்

17. குந்து நாதர்

18. அரநாதர்

19. மல்லி நாதர்

20. முநிஸுவர்தர்,

21. நமிநாதர்,

22. நேமி நாதர்,

23.பார்ஸ்வ நாதர்,

24 மஹாவீரர்.