- 191 -
     சேராதவற்றை, பிறரொடு - மற்றவரோடு, தானும் - --,நயந்து கொண்டாள் - விரும்பி உட்கொண்டாள், (எ-று.)

நஞ்சு கலந்த லட்டுக்களை கணவனுக்கும் மாமியாருக்குங் கொடுத்துவிட்டு, நஞ்சில்லாவற்றைப் பிறருடன் உட்கொண்டா ளென்க.

தேனின் - தேனைக்காட்டிலும் என்று உறழ்பொருளில்வந்தது.  லட்டுகம் -‘லட்டு'; என வழங்குகிறது. படாத, பலவின்பால் வினையலணையும் பெயர்.   (74)

மன்னனும் தாயும் விஷத்தால் மடிந்து விலங்கிற் பிறத்தல்

147.  நஞ்சது பரந்த போழ்தி னடுங்கினர் மயங்கி வீழ்ந்தார்
  அஞ்சினர் மரணஞ் சிந்தை யடைந்தது முதல தாங்கண்
  புஞ்சிய வினைக டீய புகுந்தன பொறிகள் பொன்றித்
  துஞ்சினர் துயரந் துஞ்சா விலங்கிடைத் துன்னி னாரே.

(இ-ள்.) (அவ்விருவரும்), நஞ்சு அது பரந்த போழ்தின் - விஷம் உடற்குள் பரவிய காலத்தில், நடுங்கினர் மயங்கி - நடு நடுங்கி அறிவு முதலியன கலங்கி, வீழ்ந்தார் - --, (விழுந்து), மரணம் அஞ்சினர் - (தமக்கு) நேரிட விருக்கும் மரணத்திற்கு அஞ்சினார்கள்;  ஆங்கண் - அப்பொழுது, முதலது சிந்தை அடைந்தது - முதலாவதாகிய ஆர்த்தத் தியானம் அவ்விருவர் மனத்திலும் சேர்ந்தது. (அதனால்) புஞ்சிய தீய வினைகள் - மிக்க தீவினைகள், புகுந்தன - உயிரிடம் சேர்ந்தன; (பின்பு), பொறிகள் பொன்றிதுஞ்சினர் - ஐம்பொறிகளின் புலனுணர்வும் கெட்டு  இறந்து, துயரம் துஞ்சா விலங்கிடை - துன்பம் குறைதலில்லாத விலங்குகதியில், துன்னினார் - சேர்ந்தார். (எ-று.)

விஷத்தால் மடிந்த இருவரும் விலங்கில் பிறந்தனரென்க.

அவர்கள் அவ்வாறு நடுங்கிய காரணத்தால்  அவர்களுக்கு ஆர்த்தத் தியானம் வந்துற்றது.  சிந்தை - தியானம்.  அது, பொதுவகையால் நான்கு விதமும், விசேஷவகையால் பலவகையு மாகும். விலங்குகதிக்குக் காரண