வந்தது,
என்று - --, சிலர்கள் எல்லாம் - சில மனிதர்கள்,அழுங்கினர் - இரங்கினார்கள். (எ-று.)
அன்பர், கடவுள்வடிவமாக ஓர் உரு அமைத்து அதில் பக்திசெய்வர்; அவர்கள் கருதியவற்றை அவ்வுருவம் நிறைவேற்றுகின்றது;
இதனை அறிந்திருந்தும் மாவினால் கோழியுருவம் செய்து அதனைக் கொன்றனராதலின் அக்கொலைப்பாபத்தால் இவர்களுக்கு இவ்வாறு உடனே இம்மரணம் நேர்ந்தது என்று
சிலர் வருந்தினரென்க.
ப்ரதிமைகளிடத்துச் செய்யும் நன்மை தீமைகளும் தத்தம் பலனைச் செய்யும் என்பதனை இதனால் அறியலாகும். காதரம் - அச்சம்;
அச்சத்தாலாய பக்திக்கு ஆயிற்று. தெரிவு - இது நன்று, இது தீது என்று அறியும் அறிவு.
இனி, இவ்வுலகோர், மாரிக்கு உயிர்ப்பலி கொடுத்துத்தாம் எண்ணியபடி முடிப்பதைக் கண்டிருந்தும் இவர்கள் சேதனமான பொருளைப்
பலியிடாமல் சேதன வடிவான மாக்கோழியைப் பலியிட்டனர் ஆதலின் இம்மரணம் நேர்ந்த தென்று சிலர் வருந்தினர் என்று உரைப்பினுமாம்.(77)
நகரத்து
அறிஞர் கூறுதல்
150. |
அறப்பொரு ணுகர்தல் செல்லா னருந்தவர்க் கெளியனல்லன் |
|
மறப்பொருள் மயங்கி வையத் தரசியன் மகிழ்ந்து சென்றான் |
|
இறப்பவு மிளையர் போகத் திவறின னிறிது யின்கண |
|
சிறப்புடை மரண மில்லை செல்கதி யென்கொ லென்றார். |
(இ-ள்.) (இவ்யசோதரன்),
அறப்பொருள் நுகர்தல் செல்லான் - அறவுரையின் பொருளை உட்கொள்ளான், அருந்தவர்க்கு
- பெரிய தவசிகள் விஷயத்தில் (திறத்தில்), எளியன் அல்லன் - எளிமையான குணமுடையவனல்லன்,
மறப்பொருள் - தீய பொருள்களிலும், வையத்து அரசியல் - இகலோக ஆட்சியிலும், (பற்றின்மிகுதியினால்)
மயங்கி - அறிவு மயங்கி, மகிழ்ந்து சென்றான் - --, இளையர்போகத்து - மகளிர் இன்பத்தில்,
இறப்ப உம் இவறினன் - மிகவும் விருப்பங்கொண்டான்; இறுதியின்கண் - வாழ்நாள்
|