|
ஒக்குமே யொருவன் சங்கோ டொருநில
மாளிகைக் கீழ்த்2 |
|
திக்கெனத் தொனிசெய் திட்ட
தெவ்வழி வந்த தாகும். |
(இ-ள்.)
தித்தி - தோல்துருத்தியில், வாயு ஏற்றி -காற்றை அடைத்து, வாய் சிக்கென செம்மி
- வாய்ப்புறத்தை இறுக மூடி, தூக்கி - நிறுத்து நோக்கி(ப் பின்னர்), புக்க அவ்வாயு
நீங்கிப் போயபின் - அடைக்கப்பட்டிருந்த காற்று வெளிப்பட்டுப் போனபின், நிறை
செய்தாலும் - நிறுத்துநோக்கினாலும், ஒக்கும் - எடை ஒருவாறு ஒத்திருக்கும்: ஒரு நில
மாளிகைக்கீழ் - பூமியின் கீழுள்ள சுரங்கம்போலும் நிலவறையிலிருந்து, ஒருவன் - ஒரு
மனிதன், சங்கொடு - சங்கினால், தொனி செய்திட்டது - முழக்கஞ்செய்த ஒலி, திக்கென
- திடீரென, எவ்விழி வந்தது ஆகும் - எந்த வழியால் வந்ததாகும்? (உயிரும் அதைப்போல்
வெளி வருவதாகும்.). (எ-று.)
முனிவர் உவமை காட்டி உயிருண்மையைத் தெளிவித்தாரென்க.
உயிருண்மை காணவேண்டி, கள்வனை வதை செய்யும் முன்னும் பின்னும் நிறைசெய்து (229)
பார்த்தும் காணவில்லையே என்ற வினாவிற்கு மறுமொழியாக, தித்தியுவமம் கூறினார்:
மண்ணில் புதைத்தவன்உயிர் சென்ற வழி காணவில்லையே யென்ற வினாவிற்கு, சங்கத்வனியை
உவமம் கூறினார். தித்தி - துருத்தி செம்முதல் - மூடுதல் தூக்குதல் - நிறுத்துதல்.
அணுத்திரள் அனைத்திற்கும் எடை உண்டு என்று ஆகமத்துக்
கூறியிருக்கவும், ஈண்டு (உயிருக்கு எடை இல்லையென்று) சண்டகருமனைத் தெளிவிக்கவேண்டி
எடையில் மிகக் குறைந்ததான காற்றை உவமையாகக் கூறினாரென்று கொள்க. ‘சிக்கென’
என்பதனை, ‘சிக்கென அடைத்தேன்’ (கம்ப. உலாவியல்,14.) என்பதனோடு ஒப்பிடுக.
232. |
இவ்வகை யாகுஞ் சீவ னியல்புதா னியல்பு வேறாம் |
|
வெய்யதீ வினைக ளாலே வெருவுறு துயரின்
மூழ்கி |
|